Tuesday 19 July 2011

சோபர் (SOFAR - SOUND FIXING AND RANGING)

,
தொழில் நுட்பம் அபார வளர்ச்சி வளர்ச்சி அடைந்த இக்காலத்திலும் கப்பல் போக்குவரத்தில் ஏதாவது விபத்து ஏற்ப்பட்டால் உடனடியாக நம்புவது சோபர் (SOFAR - SOUND FIXING AND RANGING) முறையைத்தான்


                                                                 

சோபர் (SOFAR - SOUND FIXING AND RANGING) முறை என்பது ஒலி பொருத்துதல் மற்றும் ஒலி தொலைவு காணல் என்பதின் அடிப்படையில் அமைந்த ஒலி தோன்றும் இடத்தை துல்லியமாக கணக்கிடுவது ஆகும்.
                                                                            
                                                                     
கடலின் ஆழத்தில் இருந்து தோன்றும் ஒலி விலகல்(Refraction) அடையும் . எனவே குறைந்த இழப்புகளுடன் நீண்ட தொலைவிற்க்கு பரவும்.கப்பல் திடீரென விபத்திற்க்கு உள்ளாக நேரிட்டால் ஒரு சுமார் 900 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு சிறு வெடிப்பு ஏற்ப்படச்செய்யப்படுகிறது இந்த வெடிப்பானது பலநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் கூட உணர முடியும் .இவ்வகையான வெடிப்பொலிகளை இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கடற்க்கரையோரங்களில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு ஒலி உண்டாகிய இடத்தை துல்லியமாக அறிந்து அதற்க்கேற்றவாறு மீட்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது இதன் மூலம் பல உயிர்கள் காப்பற்றப்படுகிறது.





0 comments to “சோபர் (SOFAR - SOUND FIXING AND RANGING)”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates