சூரியகாந்தி, டெய்சி, ஆஸ்டர் போன்ற மலர்களில் விதைகளின் வரிசைதன்மைக்கும் ,
ரோஜா ,ஆப்பிள் , பீச்,ஸ்ட்ராபெர்ரி,ப்ளம்ஸ் மலரிதழ்களின் வரிசை தன்மைக்கும் காரணம் கணித எண்கள்தாம் இந்த எண்கள் பிபோனாசி எண்கள்(Fibonaci Numbers) ஆகும்
1,1,2,3,5,8,13,21,34,55,89,144................................
மேற்கண்டவை பிபோனாசி எண்கள் ஆகும் இந்த எண்தொடரில் ஒவ்வொரு உறுப்பும் அதற்க்கு முன் உள்ள இரு உறுப்புகளின் கூடுதல் ஆகும்
2=1+1
5=2+3
8=5+3
13=8+5
21=13+8
34=21+13……………………..
இந்த பிபோனாசி எண்கள் தாவரவியல் , விலங்கியல் ,வேதியியல், உளவியல் ,இயற்பியல்,பொருளியல், வணிகவியல் என பல துறைகளில் பயன்பட்டாலும் பிப்போனாசி எண்களின் வரிசைத்தன்மையும் துல்லியமும் கட்டிடவியல் துறையில் சிறப்பாக பயன்படுகிறது
பிபோனாசி என்களின் விகிதம் ஒரு குறிப்பிட்ட எண்ணை சுற்றியே அமைந்திருக்கும் இதை பொன்விகிதம்(Golden Radio) என்கிறோம் இதன் அடிப்படையில் அமைந்த கட்டிடங்கள்தான் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன என உளவியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன.