ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் இனைந்த மூலக்கூறு இது பூமியிலிருந்து 12 முதல் 15 கிலோ மீட்டர் வரை உள்ள காற்று படலம் . இந்த படலம்தான் சூரியனில் இருந்து வெளிவரும் அபாயகரமான புறஊதாகதிர்களை வடிகட்டும் வடிகட்டியாக செயல்படுகிறது . நாம் வெளியிடும் குளோரோ புளோரோ கார்பன் ஆனது ஒசோன் அணுக்களை ஓட்டை போட்டுவிடும் இதனால் புற ஊதாகதிர்கள் நேரிடையாக பூமியை தாக்கி உயிர்களின் DNA களில் ஊடுருவி மாற்றங்களை தூண்டி பல நோய்களை தோற்றுவிக்கிறது மேலும் பூமியின் வெப்பநிலை அசாதரணமாக உயரும்.
தற்போதைய நிலவரப்படி பூமியின் வெப்பநிலை ஒவ்வொறு பத்தாண்டிற்க்கும் 0.3 o அதிகரிக்கிறது இதனால் துருவப்பகுதிகளின் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல்மட்டம் 6 செ.மீ உயர்ந்து சுனாமி போன்ற இயற்க்கை பேரிடர்கள் உருவாகிறது
குளோரோ புளோரோ கார்பன் , கார்பன் கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் , நைட்ரஸ் ஆக்சைடு , போன்ற பசுமையக வாயுக்கள் பூமியின் வெப்ப வெளியேற்றத்தை தடுத்து விடுவதால் பூமியில் “ பசுமை இல்ல விளைவு” விளைவு மூலம் பூமி மேலும் மேலும் வெப்பமடைகிறது பசுபிக் பெருங்கடல் பேன்றவற்றில் “எல்நினோ” எனப்படும் கடற் சூறாவளிகள் ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்