ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகளில் ஒரு தங்க காசு கலந்து விட்டது அதை எவ்வாறு பிரிப்பது என்று ராஜாவிற்க்கு குழப்பம் ராஜாவிடம் ஒரு தராசு மட்டும் தான் இருந்தது . அமைச்சர் உடனே விடை கூறிவிட்டார் அந்த விடை உங்களுக்கு தெரியுமா ?
விடை
தங்க காசு நிறை அதிகம் உடையது எனவே 24 காசுக்களையும் எட்டு எட்டாக உடைய மூன்று தொகுதிகளாக பிரித்து கொண்டார் . இப்போது தராசின் இரண்டு பக்கமும் இரண்டு தொகுதிகளை வைத்தார் தராசு இரண்டு பக்கமும் சமமாக இருந்தால் மூன்றாவது தொகுதியில் தங்க காசு இருக்கும் இல்லை எனில் எந்த பக்கம் அதிகம் இழுக்கிறதோ அந்தபக்கம் தங்க காசு இருக்கும் இப்பொழுது தங்க காசு உள்ள தொகுதி உறுதியாக தெறிந்து இருக்கும் .தெரிந்த தொகுதியின் எட்டுகாசுகளை தாராசில் மூன்று மூன்றாக வைக்கிறார் மீதி இரண்டு காசுகளையும் தனியே வைக்கிறார். இப்பொழுதும் அதே நடைமுறை இரண்டு பக்கமும் சமமாக இருந்தால் மீதி உள்ள இரண்டு காசுகளில் ஒன்று தங்க காசு இல்லை எனில் அதிகம் இழுக்கும் பகுதியில் உள்ளது தங்க காசு. இதே நடைமுறையை மூன்றாது முறைய தொடர்ந்தால் தங்க காசு உள்ள பக்கம் அதிகமாக கீழ் இறங்கும்
Subscribe to:
Post Comments (Atom)