Sunday 24 July 2011

அபாய எச்சரிக்கை – குழந்தைகளை கொல்லும் விஷ பொம்மைகள்

,
குழந்தைகளின் மகிழ்ச்சி பொம்மைகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது . அந்த பொம்மைகள்தாம் குழந்தைகளின் உயிரை கொல்லும் புதிய எமனாக அவதாரம் எடுத்து உள்ளது சமீபத்தில் சென்னை, டில்லி, மும்பாய், மற்றும் கல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து பல்வேறு பிரபல பொம்மைகள் நிறுவனங்களின் பொம்மைகள் மற்றும் நிறுவனம் சாராத பொம்மைகள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட்து .அப்போது அவைகளில் காரீயம் , காட்மியம் போன்றவை மிக அதிக அளவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டிள்ளது .சர்வதேச பொம்மை தயாரிப்பிற்க்கான விதிமுறைகளையும் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது

பொம்மைகளின் பளப்பளப்பிற்க்காகவும் ,வண்னத்திற்காக்வும் சேர்க்கப்படும் காரீயம் , காட்மியம் போன்றவை பொம்மைகளின் மேற்பரப்பில் மொலிதாக ஒட்டியிருப்பதால் எளிதாக உரிந்துவிடும் குழந்தைகள் பொம்மைகளை கடிப்பதாலும் ,நக்குவதாலும் , காரீயம் , காட்மியம் போன்றவை குழந்தைகளின் உடலுக்குள் சென்று அபாயகரமான விளைவுகளை ஏற்ப்படுத்துகின்றன . சில சமயம் மரணத்தை கூட உண்டாக்குகின்றன.

நாம் காசு கொடுத்து பொம்மைகளை வாங்கி நமது குழந்தைகளுக்கு நாமே எமனாக மாறலாமா ….?

0 comments to “அபாய எச்சரிக்கை – குழந்தைகளை கொல்லும் விஷ பொம்மைகள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates