Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Saturday, 5 May 2012

மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்வது எப்படி ?

,
மொபைல் மூலமாக தமிழில் உள்ளீடு செய்வது எப்படி என்பது எனக்கு புதிராகவே இருந்தது ஆனால் எனது பிரச்சனையை நோக்கியா மொபைல் தீர்த்துவிட்டது . நோக்கியாவின் 2690 ,சி 1 போன்ற பல மொபைல்களில் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழ் உள்ளீடு செய்ய முடியும் ஆம் நண்பர்களே மொபைலில் ஒரு எளிய செய்கை மூலம் தமிழில் பதிவிடலாம், கருத்துரை வழங்கலாம், பேஸ்புக்,ட்வீட்டர் போன்றவைகளுக்கு தமிழில் உள்ளீடு செய்து வலையுலகை கலக்கலாம்

நண்பர்களே மொபைலில் ஓபரா பிரௌசர் இருந்தால் தமிழ் தளங்களை வாசிக்கலாம்
ஓபரா இன்ஸ்டால் செய்து தமிழ் தளங்களை
வாசிப்பது எப்படி என்ற எனது பதிவிடலை படிக்க இங்கே கீழ்கண்ட சுட்டியை இயக்குங்கள்

<http://www.nilanilal.blogspot.com/2011/06/blog-post_7760.html?m=1>



வாருங்கள் தோழர்காளே மொபைல்களில் தமிழை எப்படி உள்ளீடு செய்யலாம் என அறிந்து கொள்வோம்

உங்களது நோக்கியா மொபைலில் settings பகுதியில் language settings   என்பதை தேர்வு செய்யவும் அதில் தமிழ் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளீடு செய்ய முடியும்

மொபைலில் ஓபரா பிரௌசர் மூலம் பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற தளங்களை திறந்து கொள்ளுங்கள் பின்பு உள்ளீடு செய்ய வேண்டிய இடத்திற்கு வாருங்கள் உங்களது மொபைலில் ஆங்கிலம் டீபால்ட்டாக உள்ளதால் ஆங்கிலத்தில் தான் உள்ளீடு செய்ய முடியும் .  எனவே இப்போது இடதுபக்கம் options  , என்பதில் writing options என்பதை தேர்வு செய்யவும் இப்போது கிடைக்கும் மெனுவில் தமிழ் என்பதை தேர்வு செய்யுங்கள் அவ்வளவுதான் இனி நீங்கள் தமிழில் உள்ளீடு செய்யலாம்
1  என்பது புள்ளி வைக்க
2  என்பது அ, ஆ ,இ,ஈ,உ,ஊ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒரு எழுத்தை அடித்துவிட்டு அதற்கு கொம்பு, கமா போடுவதற்கும்
3 என்பது எ,ஏ,ஐ,ஒ என்ற எழுத்துகளுக்கும் மேலும் ஒற்றை கொம்பு , இரட்டைக்கொம்பு போடுவதற்கும்
4 என்பது க,ங,ச,ஞ போடுவதற்கு
5 என்பது ட,ண,த,ஞ,ந போடுவதற்கு
6 என்பது ப,ம,ய போடுவதற்கு
7 என்பது ர,ல,வ போடுவதிற்கு
8 என்பது ழ,ள,ற,ன போடுவதிற்கு
9 என்பது ஜ,ஸ,ஹ போன்றவைகளுக்கு

நண்பர்களே மேற்கண்ட குறிப்புகளின்படி முதலில் தமிழில் மெஜேஜ் டைப் செய்து பழகவும் நீங்கள் தமிழில் விரைவாக டைப் செய்து பழகிவிட்டீர்கள்  என்றால் மொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களுக்கு தமிழில் உள்ளீடு செய்யும் போது விரைவாக உள்ளீடு செய்ய முடியும் கையில் மொபைலும் இணைய இனைப்பும் உங்களிடம் இருந்தால் பதிவிடலாம் , ட்வீட்டலாம் , பேஸ்புக்கில் கருத்துரை வழங்கலாம் அப்புறமென்ன தோழர்களே வலையுலகே உங்கள் கைகளில் .

டிஸ்கி
நோக்கியாவின் விலை உயர்ந்த மொபைல்களிலோ, ஸ்மார்ட்போன்களிலோ தமிழை உள்ளீடு செய்ய முடியாது ஏன் எனில் writing options என்பதில் தழிழ் இல்லை
இது போன்ற பதிவினை ஏற்கனவெ யாராவது பதிவிட்டு இருக்கிறார்களா என  எனக்கு தெரியாது தற்செயலாக ட்வீட்டரில் ட்வீட் செய்யும் போது அறிந்து கொண்டேன் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திபார்த்துவிட்டு கருத்துரை கூறவும்

Friday, 27 April 2012

இலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவேண்டியவை

,

1.   இலவசம் என்ற  காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும்.
2.   ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில்  அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட  ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .
3.   ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்
4.   நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்
5.   ஒரே தேவைக்கு பல மென்பொருள்கள் பயன்படுத்துவதை தவிருங்கள் உதாரணமாக player , cleaner , போட்டோவை மாற்ற செயல்பாடுகளுக்கு பல மென்பொருளை பயன்படுத்தாதீர்கள்

6.   எந்த ஒரு மென்பொருளையும் அதன் தயாரிப்பு தளத்தில் இருந்து டவுன்லோடிங் செய்வதை தவிருங்கள் ஏன் எனில்  அவர்களின் மென்பொருளை அவர்கள் உயர்த்திதான் சொல்வார்கள்

7.   கேம்ஸ்  போன்றவற்றை டவுன்லோடிங் செய்யும் போது மிக கவனம் தேவை ஏன் எனில் சில கேம்ஸ்வுடன் இணைந்து வரும் மால்வேர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண் முக்கியமான பாஸ்வேர்டு போன்றவைகளை  திருடி  அதை தயாரித்தவருக்கு தெரியபடுத்திவிடும்

8.   குறிப்பிட்ட தேவைக்கு  உங்களின் நண்பர்கள் என்ன வகையான  மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்  அதனால்  அவர்களுக்கு பயன் கிடைத்ததா  எனக்கேட்டுபாருங்கள் அல்லது கூகுள் மூலம் அந்த மென்பொருளின் Review வை தேடி படித்துபார்த்து பின் டவுன்லோடிங் செய்யுங்கள்

Friday, 30 December 2011

அட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா ?

,

நண்பர்களே நமக்கு மிக மிக தேவையான ஆயிரம் சாப்ட்வேர்களின் நேரிடையான லிங்க்குகள் அடங்கிய PDF வடிவ மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இந்த மென்நூலில் உங்களுக்கு தேவையான சாப்ட்வேரின் லிங்கை கிளிக் செய்தால் போதும் நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்



அழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் செய்யும் முறை

,

கணினி இயக்க தெரிந்த நமக்கு கணினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது  வின்டோஸ் இயங்க மறுத்தாலோ நாம் உடனே சர்வீஸ் சென்டரை நாடுவோம். வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி தமிழில் வெளிவந்த கணினி சார்ந்த புத்தங்களிலோ முழுமையான,தெளிவான விளக்கங்களோ இல்லை இக்குறைபாட்டை நீக்க  வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும்  வழி முறைகள் ஸ்கீரீன் ஷாட் புகைப்படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்ட மென்நூலை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள். உங்களின் கணினி ஏதாவது பிரச்சனை செய்தால் மென்நூலில் கொடுக்கப்பட்ட வழிமுறையின்படி வின்டோஸ் CD   ( கூகிள் அல்லது டோரன்ட் இல்  தேடி பாருங்கள் கிராக் வெர்ஸன் வின்டோஸ் XP கிடைக்கிறது அதை CD அல்லது DVDயில் பதிந்து கொள்ளுங்கள் ) மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

Saturday, 2 July 2011

Disk defragment

,
நமது Hard Disk ஆனது பல Track எனப்படும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொறு  Track ம் sector எனப்படும் சிறு சிறு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு இருக்கும். நாம் கணினியில் சேமிக்கப்படும் தகவல்கள் இந்த Track களில் தாறுமாறாக பதியப்படும் எனவே நமது கணினி செயல்பாடு ஒழுங்கின்மையாக இருக்கும்.நமது Hard Disk ன் கொள்ளவும் குறையும்.
இதை தவிர்ப்பதற்கு நமது windows இயக்கச்சூழலில் Disk defragment எனும்
பயன்பாடு உள்ளது . 
                                                                    
கணினியை பற்றி தெரிந்தவர்கள் கூட Disk defragment செய்யும் முறையை அறியாதவர்களாகவே உள்ளனர்.
Start –accesseories –System Tools- Disk defragment என்ற Menu தேர்வு மூலம்
இதை திறந்து நமது Hard Disk ன் Drive களுக்கு Disk defragment செய்ய முடியும்
இதன் மூலம் நமது கணினியை சிறப்பாக செயல்பட வைக்க முடியும்
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates