Monday 12 December 2011

சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?

,

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள்  இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது
டிஸ்கி
என்னுடைய பள்ளி நாட்களில் சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்  என பலரிடம் கேட்டு பார்த்தேன்  யாரிடமும் விடை கிடைக்காததால் அக்கேள்வியை மறந்தே போனேன் . தற்போது  ஒரு ஆசிரியராக பாடம் நடத்தும் போது சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் என்று என் மாணவன்  கேட்டதால் இப்பதிவை பதிவிடுகிறேன்

7 comments to “சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா ?”

  • 13 December 2011 at 11:37

    நல்ல தகவல்.

  • 13 December 2011 at 14:03

    அருமை. இதுவும் பெருங்காயம் போல ஒரு மரத்தில் வடியும் கோந்து என்று தெரியும். ஆனால் முழுவிவரம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.

  • 13 December 2011 at 16:40

    தலைப்பில், "தயாரிக்கிறார்கள்" என்பதிலும் , " கிடைக்கிறது, உருவாகிறது, பெறப்படுகிறது" என்பதே பொருத்தம் என நினைக்கிறேன். தயாரிக்கிறார்கள்- எனும் போது, இது இயற்கையாகக் கிடைப்பது என்பது
    மறைக்கப்படுகிறது.
    மேலும் மாணிக்க வாசகர் குதிரை வாங்கச் சென்று வாங்கி வந்து, நரியைப் பரியாக்கிய புராணக் கதையில்
    வரும் குங்கிலியத்துக்கும், இந்தச் சாம்பிராணிக்கும் தொடர்புண்டா?
    இரண்டுமே ஒரே மாதிரியிருப்பதுடன், குணநல இயல்பு, அதன் தேவை யாவும் ஒன்றாக உள்ளதால் வினவுகிறேன்.
    மேலும் உலகைக் கட்டி கக்கத்துள் வைத்திருக்கும் "கொக்கா கோலா" தயாரிப்பில் மிக இன்றியமையாத
    பங்குவகுக்கும் - தாவரப் பிசின் - அரபுப் பிசினென(Gum Arabic) அழைக்கப்படும் அக்காசியா(Acacia Gum) மரப் பிசினே, இதுவும் இயற்கையாகவே கிடைக்கிறது. அமெரிக்கா மிக மலிவாக வாங்கிப் பெரிய வர்த்தக சாம்ராச்சியத்தை உலகில் வியாபித்துள்ளது.
    தங்கள் தேடுதலுக்கும் தகவலுக்கும் நன்றி

  • 14 December 2011 at 17:21

    நல்ல தகவல் சகோ .....

    பகிர்வுக்கு நன்றிகள்.

  • 2 March 2012 at 14:51
    prabhadamu says:

    நல்ல தகவல் :) பகிர்வுக்கு நன்றிகள்.

  • 31 October 2012 at 16:35

    super

  • 23 September 2017 at 21:39
    Anonymous says:

    தமிழ்நாட்டில் கலப்படம் இல்லாத original சாம்பிராணி எங்கு கிடைக்கும் ???

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates