Thursday, 13 September 2018

LMS - மின்வழி கற்றல் ஓர் எளிய அறிமுகம்

,
வணக்கம் நண்பர்களே மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவிட தொடங்குகிறேன். மின் வழி கற்றல் என்றால் என்ன அதற்கு தேவைப்படும் வளங்கள் என்ன என்று இந்த சிறு காணொலியில் கூறி இருக்கிறேன். இனி பிளாக்கரில் பதிவுகள் தொடர்கிறேன்

Tuesday, 2 June 2015

லீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் ?

,
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகும் இதைத்தான் நாம் ஒரு வருடம் என்கிறோம் . ஆனால் ஒரு லீப் வருடத்திற்கு மட்டும் 366 நாட்கள் வரும் காரணம் என்னவென்று தெரியுமா ?

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகிறதல்லவா இதில் 6 மணி நேரத்தை ஒதுக்கிவிட்டு 365 நாட்களை ஒரு வருடம் என்கிறோம் இந்த விடுபட்ட 6 மணி நேரம் இரண்டாம் ஆண்டு 12 மணிநேரமாகிறது . மூன்றாம் ஆண்டு  இன்னும் ஆறு மணிநேரம் சேர்ந்து 18 மணி நேரமாகிறது நான்காம் ஆண்டு 24 மணிநேரமாகிறது ஆகையால் இந்த நான்காம் ஆண்டு 365 நாட்களுடன் ஒரு நாள் சேர்ந்து 366 நாட்களுடன் லீப் வருடமாகிறது . 

Sunday, 31 May 2015

கணித அறிவை வளர்க்கும் கலைக்களஞ்சிய முகவரிகள்

,
வணக்கம் நண்பர்களே , நமது குழந்தைச்செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் அற்புத வளைத்தளம் ஒன்று இருக்கின்றது . 
இதில் கின்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கு ஏற்றவாறு வலைத்தள முகவரிகள்  பிரிக்கப்பட்டுள்ளது . கணிதவிளையாட்டுகள் , கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொளிகாட்சிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த முகவரியை புக்மார்க் செய்து உங்களின் செல்லக்குழந்தைகளின்  கணித அறிவினை மேம்படுத்துங்கள் . கீழ்கண்ட  சுட்டியினை கிளிக் செய்து பயன்பெறுங்கள்Friday, 22 May 2015

குழந்தைகளின் கணித அறிவு வளர டேன்கிரம் Flash Game Free download

,
வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவேளைக்கு பின்பு பயனுள்ள பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . டேன்கிராம் எனும் சீன கணித விளையாட்டில் ஏழு கணித உருவ துண்டுகளைப்பயன்படுத்தி பல்வேறு கணித உருவங்களை உருவாக்க முடியும் . இந்த விளையாட்டில் ஒரு சதுர வடிவ தாள் ஆனது இரு பெரிய செங்கோண முக்கோணம் , கொஞ்சம் சிறிய செங்கோண முக்கோணம் அதைவிட சிறிய இரு செங்கோண முக்கோணம் , ஒரு சதுரம் , ஒரு இனைகரம் என ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அந்த உருவங்களை மாற்றி மாற்றி பொருத்துவதின் மூலம் பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடுவதாகும் . 19 ஆம் நூற்றான்டிலேயே சற்றேறக்குறைய 6500 வடிவங்களை உருவாக்கி இருந்தனர் .  
உங்கள் குழந்தைக்கு ஒரு சதுரவடிவ தாளினை  படத்தில் காட்டியவாறு ஏழு துண்டாக்கி பிரித்து கொடுங்கள்  . பின்பு அவர்களின் கற்பனை வளத்திற்கேற்றவாறு பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடி மகிழ முடியும்  . உருவங்களின் மாதிரி வேண்டுமெனில்  கீழ்கண்ட  எனது முந்தைய பதிவில் இருந்து PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
 டேன்கிராம் விளையாட்டினை கணினியிலேயே விளையாட முடியும் கீழ்கண்ட பிளாஷ் வடிவிலான அப்பிகேஷனை பதிவிறக்கம் செய்து அதை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும் அதை அருகில் இருக்கும் படத்தை போல்  மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும்  . புதிய உருவம் வேண்டுமெனில் அருகில் உள்ள படத்தை கிளிக் செய்தால் புதிய உருவம் கிடைக்கும் . உங்களின் குட்டிச்செல்லங்களுக்கு பதிவிறக்கி கொடுத்து அவர்களின் கணித அறிவினை வளப்படுத்துங்கள் .
  

பின்குறிப்பு 


நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் . 

Saturday, 3 January 2015

தமிழில் தட்டசு செய்ய புதிய மென்பொருள் – இனிய தமிழ்

,
நண்பர்களே தமிழில்   யுனிகோட், வானவில் , டாம், டாப் , திஸ்கி, செந்தமிழ், ஸ்ரீலிபி , சாப்ட்வியூ போன்ற கணக்கற்ற  எழுத்துரு வகைகள்  இருக்கின்றன  இவற்றை கையாள  அழகி , குறள் , கூகுள் தமிழ் உள்ளீடு , கீமேன் , NHM ரைட்டர்  போன்ற விசைப்பலகை  இயக்கிகள் இருக்கின்றன  இருந்தாலும் தமிழின் அனைத்து எழுத்துருக்களையும் ஆதரிக்கும் தமிழ் மென்பொருள் இல்லை இக்குறையை நீக்க புதியதாக ஒரு இலவச மென்பொருள்  வந்துள்ளது இதை உருவாக்கியவர் பாண்டிச்சேரியில் வசிக்கும் ஆசிரியர் திரு .முத்துக்கருப்பன் ஐயா அவர்கள் . இதில்  தமிழில் உள்ளீடு செய்வது மட்டுமில்லாமல் தமிழ்  எழுத்துரு மாற்றியும் உள்ளது . எந்த வகையில் தட்டச்சு செய்திருந்தாலும் நாம் விரும்பும்  எழுத்துரு வகைக்கு மாற்றிகொள்ளலாம்  . மேலும் எண்களை கொடுத்தால் அதற்குரிய மதிப்பினை தமிழில் பெற்றுக்கொள்ளலாம் . இந்திய நாணயக்குறியீடு போன்ற குறியீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம்  இது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் உள்ளது போல Auto correct  வசதியும் உள்ளது அவரின் வலைத்தளம் சென்று  இனிய தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . போர்டபிள் மென்பொருளும் உள்ளது பயன்படுத்தி பாருங்கள் 


Monday, 28 July 2014

இடைவெளி

,
உனக்கும் 
எனக்குமான
இடைவெளியியை
நினைவுகளால்
நிரப்பிக்கொள்கிறது

காதல்.
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates