Showing posts with label கற்கண்டு கணிதம். Show all posts
Showing posts with label கற்கண்டு கணிதம். Show all posts

Sunday, 31 May 2015

கணித அறிவை வளர்க்கும் கலைக்களஞ்சிய முகவரிகள்

,
வணக்கம் நண்பர்களே , நமது குழந்தைச்செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் அற்புத வளைத்தளம் ஒன்று இருக்கின்றது . 
இதில் கின்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கு ஏற்றவாறு வலைத்தள முகவரிகள்  பிரிக்கப்பட்டுள்ளது . கணிதவிளையாட்டுகள் , கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொளிகாட்சிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த முகவரியை புக்மார்க் செய்து உங்களின் செல்லக்குழந்தைகளின்  கணித அறிவினை மேம்படுத்துங்கள் . கீழ்கண்ட  சுட்டியினை கிளிக் செய்து பயன்பெறுங்கள்



Friday, 22 May 2015

குழந்தைகளின் கணித அறிவு வளர டேன்கிரம் Flash Game Free download

,
வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவேளைக்கு பின்பு பயனுள்ள பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . டேன்கிராம் எனும் சீன கணித விளையாட்டில் ஏழு கணித உருவ துண்டுகளைப்பயன்படுத்தி பல்வேறு கணித உருவங்களை உருவாக்க முடியும் . இந்த விளையாட்டில் ஒரு சதுர வடிவ தாள் ஆனது இரு பெரிய செங்கோண முக்கோணம் , கொஞ்சம் சிறிய செங்கோண முக்கோணம் அதைவிட சிறிய இரு செங்கோண முக்கோணம் , ஒரு சதுரம் , ஒரு இனைகரம் என ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அந்த உருவங்களை மாற்றி மாற்றி பொருத்துவதின் மூலம் பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடுவதாகும் . 19 ஆம் நூற்றான்டிலேயே சற்றேறக்குறைய 6500 வடிவங்களை உருவாக்கி இருந்தனர் .  
உங்கள் குழந்தைக்கு ஒரு சதுரவடிவ தாளினை  படத்தில் காட்டியவாறு ஏழு துண்டாக்கி பிரித்து கொடுங்கள்  . பின்பு அவர்களின் கற்பனை வளத்திற்கேற்றவாறு பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடி மகிழ முடியும்  . உருவங்களின் மாதிரி வேண்டுமெனில்  கீழ்கண்ட  எனது முந்தைய பதிவில் இருந்து PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
 டேன்கிராம் விளையாட்டினை கணினியிலேயே விளையாட முடியும் கீழ்கண்ட பிளாஷ் வடிவிலான அப்பிகேஷனை பதிவிறக்கம் செய்து அதை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும் அதை அருகில் இருக்கும் படத்தை போல்  மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும்  . புதிய உருவம் வேண்டுமெனில் அருகில் உள்ள படத்தை கிளிக் செய்தால் புதிய உருவம் கிடைக்கும் . உங்களின் குட்டிச்செல்லங்களுக்கு பதிவிறக்கி கொடுத்து அவர்களின் கணித அறிவினை வளப்படுத்துங்கள் .
  

பின்குறிப்பு 


நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் . 

Sunday, 23 February 2014

MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி

,
வணக்கம் நண்பர்களே MS Word- இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள் . நான் ஏற்கனவே MS Word – இல் கணித சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி எனும் பதிவிட்டு இருந்தேன் அதையும் ஒரு முறை படித்துவிட்டு தொடருங்களேன் .
படித்துவிட்டீர்களா மேற்கண்ட  பதிவு MS Word  2003 க்கானது MS Word  2007 மற்றும் அதற்கு பின் வரும் MS Word  பதிப்புகளில் Insert மெனுவில் Equation மற்றும் Symbolஎனும் இரு தேர்வுகளின் மூலம் கணித குறியீடுகளை உள்ளீடு செய்யலாம்  சரி வாருங்கள் MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி என்றும் அறிந்து கொள்வோம்.  
முதலில் MS Word  ஐ திறந்து கொள்ளுங்கள் , பின்பு உங்களது கணினியில்  Accessories  மெனுவின் கீழே  Math Input Panel      என்பதை தேர்வு செய்தால் கணிதகுறியீடுகளை உள்ளீடு செய்ய புதிய செயலி ஒன்று திறக்கும் அதில் உங்களது Mouse ஆல் கணித குறியீடுகளை வரைந்தால் போதும் அந்த குறியீடு தோன்றும் அந்த செயலியின் கீழே Insertஎனும் வசதி இருக்கும் அதை கிளிக் செய்தால் MS Word –இல் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் . பயன்படுத்தி பாருங்கள்  சந்தேகம் வந்தால் பின்னூட்டமிடுங்கள்


Sunday, 22 April 2012

மனித வாழ்விற்கு கணிதம் கூறும் பத்து கட்டளைகள்

,
     1.   நல்லவைகளை கூட்டிக்கொள்ளுங்கள்(கூட்டல்)
2.   தீயவைகளை கழித்துக்கொள்ளுங்கள்(கழித்தல்)
3.   அறிவை பெருக்கிக்கொள்ளுங்கள்(பெருக்கல்)
4.   நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்(வகுத்தல்)
5.   இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக கருதுங்கள்(சமம்)
6.   செலவை குறைத்து வரவை பெருக்குங்கள்(லெஸ்தன்)
7.   அன்பை பெருக்கி ஆணவத்தை குறையுங்கள்(கிரேட்டர்தன்)
8.    வாழ்க்கை முடிவுள்ளது எனவே முடிந்தவரை மற்றவர்க்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )
9.   கடுமையான  உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள்  (சம்மேஷன்)
10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ் ஆர் மைனஸ் )

Thursday, 19 January 2012

நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் சுவையான விளையாட்டு

,

நண்பர்களே பள்ளி நாட்களில்  நாம் விளையாடிய மிகவும் சுவையான கணித விளையாட்டு நினைத்த எண்ணினை கண்டுபிடிக்கும் விளையாட்டு  இந்த விளையாட்டை விளையாட பல வகை முறைகள் இருப்பினும்  99  தவிர அனைத்து எண்களுக்கும் பொருந்தும் எளிய முறையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 
விளையாடும் முறை

உங்களின் நண்பர்களையோ உறவினர்களையோ ஏதாவது ( 99 தவிர ) ஒரு எண்ணினை மனதில் நினைத்துக்கொள்ளச்சொல்லுங்கள் பின்பு கீழே கொடுக்கப்பட்ட விதிகளை மனதிலேயே பின்பற்ற சொல்லுங்கள் கடைசியில் கிடைக்கும் விடையை மட்டும் சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை  நீக்கி விட்டால் கிடைக்கும் எண்தான் மனதில்  நினைத்த எண் ஆகும்  

விதிமுறைகள்

1 . மனதில் நினைத்த எண்ணினை இருமடங்கு ஆக்குக
2 . 4 கூட்டுக
3 . 5 ஆல் பெருக்குக
4 . 12 கூட்டுக
5 . 10 ஆல் பெருக்குக
6 . 320 கழிக்க
கிடைக்கும் விடையை சொல்லச்சொல்லுங்கள் அதிலிருக்கும் பூச்சியங்களை நீக்கி விட்டால் மனதில்  நினைத்த எண் கிடைக்கும்

எடுத்துக்காட்டு

மனதில் நினைத்த எண் 63 எனில் அதை இரு மடங்காக்கினால் கிடைப்பது 126 அதனுடன்  4 கூட்டினால் கிடைப்பது 130 அதை  5 ஆல் பெருக்க கிடைப்பது  650  அதன்னுடன்  12 கூட்ட கிடைப்பது 662 அதை 10 ஆல் பெருக்கினால் கிடைப்பது 6620 அதிலிருந்து 320 கழித்தால் கிடைப்பது  6300  ஆகும் இதில் உள்ள பூச்சியங்களை  நீக்க கிடைப்பது 63 இதுதான் மனதில் நினைத்த எண்.
 

Friday, 4 November 2011

MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்வது எப்படி ?

,

கணித சமன்பாடுகள் வாழ்வில் தவிர்க்கமுடியாதவை குறிப்பாக பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கணித சமன்பாடுகளின் பயன்பாடுகள் மிக மிக அதிகம் . நம்மில் பெரும்பாலோனர்கு MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்யலாம் என்பது தெரியாமலே இருந்திருக்கும் .அன்புள்ள  நட்பு நெஞ்சங்களே வாங்க ! வாங்க ! MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய கத்துக்கலாம்

MS Word 2003 அல்லது அதற்கு முந்தையை ஆபிஸ் பதிப்புகளில் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய  Insert மெனுவில் Object என்ற துனை மெனுவினுல் Microsoft Equation Editor என்பதை தேர்வு செய்ய வேண்டும் .பின்பு அதில் காணப்படும் வகைகெழுசமன்பாடு, தொகைகெழுசமன்பாடு ,அணிகள், Sin, Cos , Tan  போன்ற திரிகோணமிதி குறியீடுகள் என பல வகையான குறியீடுகள் உள்ளன . நமக்கு தேவையான  சமன்பாட்டு குறியினை தேர்வு செய்து x ,y,,z போன்ற மாறிகளையோ  அல்லது 1,2,3…… போன்ற மாறிலிகளையோ உள்ளீடு செய்து கொள்ளலாம்.

MS Word 2003 அல்லது அதற்கு பிந்தையை ஆபிஸ் பதிப்புகளில் Insert மெனுவின் கீழ் உள்ள பட்டியில் இருந்து Equation என்ற மெனுவினை நேரிடையாக தேர்வு செய்து கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்து கொள்ளலாம்

Tuesday, 4 October 2011

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்

,

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்

Thursday, 1 September 2011

காலப்பயணம் சார்பியலின் கணித சூத்திரப்படி சாத்தியமா ?

,

கதைகளிளும் ஆங்கிலப்படங்களிளும் வரும் காலப்பயணம் , சார்பியலின் கணித சூத்திரப்படி சாத்தியமா ?
சார்பியல் தத்துவப்படி ஒரு பொருளின் வேகம் அதிகரிக்கும் போது அப்பொருளை பொறுத்தவரை காலமானது மெதுவாக இயங்குகிறது வேகமானது ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 299727.74  கிலோமீட்டரை நெருங்கிவிட்டால் காலமானது செயல்படாமல் நின்று விடும் . ஒளியின் திசைவேகத்தை மிஞ்சும் பொருளில் பயணம் செய்தால் காலப்பயணம் மூலம் திருவள்ளுவர் காலத்திற்கு  போய் அவருடன் கைகுலுக்கி வரலாம் அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகள் முன்நோக்கி சென்று வருங்கால  நமது பரம்பரை சந்ததிகளை கொஞ்சிவிட்டு வரலாம்

அருகில் உள்ள படத்தின் சூத்திரப்படி t என்பது காலம்  c என்பது  ஒளியின் திசைவேகம் v என்பது பொருளின் வேகம் ஆகும் .    நீங்களும் நானும் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் வேகத்தில் பயனம் செய்வதாக வைத்துக்கொண்டால் இந்த கணித சூத்திரத்தின்படி  பின்னம்    1/60*60*299727.74 க்கான விடை காண வேண்டும் கிடைக்கும் விடையை பூச்சியம் என்றே சொல்லிவிடலாம் ஏன் எனில்  அவ்வளவு சிறியது  (அல்ஜீப்ரா தெரிந்த யாரிடமாவது கேட்டு பாருங்கள் 0.000000000000000….என ஒரு விடையை அறிவியல் குறியீடு மூலம் சொல்லி தினற அடிப்பார்கள் )

அதாவது ஒரு பொருள் சாதரண நிலையில் இருக்கும் போது உள்ள நிறையும் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் சொல்லும் போது உள்ள நிறையும் சமம் எனவே பொருளின் நிறை மாறுவது இல்லை  மாற்றத்தை நாம் உணருவதும் இல்லை . ஆனால் பொருளானது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது அதனுடைய இயக்கத்தினால் ஆற்றலானது நிறையாக மாற்றப்படும் அதாவது ஒளியின் வேகத்தில் செல்லும் பொருள் அசைக்கமுடியாத நிறையை அடைந்துவிடும் ஆகவே அசைக்க முடியாத பொருளுக்கு மகத்தான விசையை கொடுத்தால்தான் அப்பொருள் தொடர்ந்து ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும் , அசைக்கவே முடியாத பொருளுக்கு மகத்தான விசையை கொடுப்பது என்பது நடைபெறவே முடியாத ஒன்று

உண்மை என்னவெனில் நிறையுடைய எந்த பொருளும் ஒளிவேகத்தை அடைவதை இயற்கையானது தடுக்கிறது ஆகவேதான்  மாபெரும் மேதை ஐன்ஸ்டீன் “ எந்தப்பொருளும் பொருள் வடிவில் இருந்து கொண்டு ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். ஆகவே காலப்பயணம் சார்பியலின் கணித சூத்திரம் மூலம் சாத்தியமாகாது .

டிஸ்கி - 1
யெஸ் பாஸ் ஆங்கிலப்படங்களில்  வரும் கால இயந்திரங்களைப்பார்த்தும் ஏலியன்களை பார்த்தும் விசிலடிக்க கற்றுக்கொள்ளோம் ஏன்னா ஓவரான அறிவியல் சங்கதிகள் நம்ப உடம்புக்கு ஆகாதுங்க.

Monday, 1 August 2011

சுடோகு புதிர் தீர்க்கும் வழிமுறைகள்

,
இன்று உலகம் முழுவதும் சிறுவர்களாளும் பெரியவர்களாளும் விரும்பி ஆடப்படும் கணித விளையாட்டு சுடோகு ஆகும்.சுடோகு என்பதின் பொருள் எண் – இடம் என்பதாகும். 1980 ன் ஆரம்பத்தில் ஜப்பானில் தொடங்கிய சுடோகு விளையாட்டு 2000 ஆண்டு வாக்கில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவியது.

9 * 9 = 81 அமைப்பு கொண்ட சதுரங்களை கொண்டது எனவே இதில் 81 சதுரங்கள் உள்ளது. இதில் 3 * 3 = 9 சதுர அமைப்பு கொண்டது ஒரு அறை ஆகும் எனவே ஒரு சுடோகில் மூன்று அறைகள் இருக்கும்
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் பள்ளிகூடங்களில் சுடோகு சொல்லி தரப்படுகிறது . சுடோகு புதிரை தீர்ப்பதின் மூலம் தர்க்க ரீதியான அறிவு பல மடங்கு பெருகுகிறது என்பது அறிவியல் மூலம்  நிரூவிக்கப்பட்டுள்ளது.
சுடோகு புதிரை தீர்க்க மிகநுண்ணிய கணித அறிவு கூட்டல் , கழித்தல் பெருக்கள் செயல்பாடுகளும் தேவையில்லை என்பது சுடோகின் சிறப்பம்சம்
தர்க்க ரீதியாக எண்களின் இடம் பற்றி சிந்திக்கும் எவரும் சுடோகு புதிரை எளிதில் தீர்க்க முடியும்
சுடோகு புதிரில் 6,670,903,752,021,072,936,960 தீர்வுகள் இருக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நமது அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகம்

                                                                           
விளையாடும் முறை
1. ஒவ்வொறு அறையிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்களை ஒரு முறை மட்டுமே எழுத வேண்டும்.
2.ஒவ்வொரு கிடைமட்ட(Row) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
3. ஒவ்வொரு நெடு(column) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
சுடோகு புதிரை தீர்க்கப்பழகுங்கள் வாழ்கையில் தீர்க்கமான முடிவை எடுக்கும் தர்க்க அறிவை பெற்று உயருங்கள் .
வாழ்த்துகளுடன்
அ.குரு

Sunday, 31 July 2011

தேன்கூடும் கணிதமும்

,
                                                                  
இயற்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் , எந்த ஒரு வடிவிலும் கணிதம் ஒளிந்துள்ளது அந்த வகையில் தேன்கூட்டில் ஒளிந்திருக்கும் கணிதம் பற்றி சிறிது அறியலாம் . தலை சிறந்த பொறியாளரைப்போல் தேனீக்கள் கட்டும் ஒழுங்கு அறுகோணமுள்ள தேன் கூட்டைப்பற்றி பரிமாணவியலின் ஒப்பற்ற அறிஞர் சார்லஸ் டார்வின் என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.
இந்த கட்டமைப்புக்கு மேல் மேலும் வியப்புதரும் வடிவத்தை இயற்கை தன் படிமலர்ச்சியில் உருவாக்கியதே இல்லை
பிற கணிதவியல் உருவங்களை விட ஒழுங்கு அறுகோணத்தை தேனீக்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?
கணிதவியல் முறைப்படி சிறிது கூட இடைவெளி இல்லாமல் தளத்தை நிரப்ப மூன்று சிக்கனமான வடிவங்கள்தான் உள்ளது
1.சமபக்கமுக்கோணம்
2.சதுரம்
3.ஒழுங்கு அறுகோணம்
தேனீக்கள் இந்த மூன்று வடிவங்களில் இருந்து ஒழுங்கு அறுகோணத்தை தேர்ந்தெடுத்ததை கணிதவியல் பரப்பளவு ரீதியாக சற்று அலசி பார்ப்போம்
சமபக்க முக்கோணத்தில் ஒருபக்க அளவு = 1/3 செ.மீ ஆகும் 
எனவே சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு  = 0.096
சதுரத்தில் ஒரு பக்க அளவு  = ¼ செ.மீ ஆகும்
எனவே சதுரத்தின் பரப்பளவு   = 0.0625
ஒழுங்கு அறுகோணத்தில் ஒரு பக்க அளவு = 1/6 செ.மீ
 எனவே ஒழுங்கு அறுகோணத்தில் பரப்பளவு = 0.072
மேற்கண்ட மூன்று பரப்பளவுகளில் ஒழுங்கு அறுகோணத்தின் பரப்பளவே அதிகமாக உள்ளது எனவெ ஒழுங்கு அறுகோணத்தில் அதிக தேனை சேர்த்து வைக்க முடியும் எனவே தேனீக்கள் கூடுகட்ட ஒழுங்கு அறுகோண வடிவத்தை தேர்ந்தெடுத்து உள்ளது
                                                                             
ஒழுங்கு அறுகோணத்தை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணமும் உள்ளது அது மெழுகு பயன்பட்டு சிக்கனம்தான் ஏனைய வடிவங்களை விட ஒழுங்கு அறுகோணத்தில் கூடு கட்டினால் மெழுகு குறைவாக பயன்படுகிறது.
தேன் கூட்டில் உள்ள மெழுகில்  இருந்து அல்கேன்கள்,அமிலங்கள் ஈஸ்டர்கள் ,பாலியீஸ்டர்கள் போன்ற 284 சேர்மங்கள் உள்ளன.
தேன்கூட்டில் ஒன்றின் பின்புறத்தே ஒன்றாக அமைந்த அறுகோணப்பட்டகங்களில் உள்ள சிறு சிறு கண்ணறைகள் 130 பாகை கோண அளவில் மேல் நோக்கிச் சரிந்தபடி அமைந்துள்ளதால் தேன் கீழே கொட்டாமல் பாதுகாக்கப்படுகிறது
ஒரு தேர்ந்த பொறியாளரைப்போல் கணிதவியல் முறைப்படி கூடுகட்டும் திறமை தேனீக்களுக்கு  இயற்கை தந்த பரிசு.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates