Saturday 30 July 2011

கணக்கதிகாரம் – குருவிகளின் கணக்கு

,
 ஒரு கிராமத்தின் ஆல மரத்தில் குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. சாயங்கால வேளையில் வானில் சில குருவிகள் பறந்து போனது பறக்கும் குருவிகளை பார்த்து மரத்தில் உள்ள குருவி கேட்டது .நூறு குருவிகளே எங்கே போகிறீர்கள் ?  அதற்க்கு பறக்கும் குருவிகளின் தலைவன் சொன்னது நாங்கள் மட்டும் நூறு குருவிகள் அல்ல நாங்களும் , எங்களின் இனையும்,  எங்களில் பாதியும் , பாதியில் பாதியும் நீயும் சேர்ந்தால் நூறு குருவிகளாவோம் என்று
அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள் எத்தனை குருவிகள் பறந்து வந்தது ?
பறந்து வந்த குருவிகள் = X என்க.
எனவே ….
பறந்து வந்த குருவிகள்   = X
அவற்றின் இனை                = X
அவற்றில் பாதி                     = X/2
பாதியில் பாதி                      = X/4
மரத்தில் உள்ள குருவி   =  1
                    X + X + X/2 + X/4 + 1 = 100
                   2X + X/2 + X/4      = 100 – 1
                  ( 8X + 2X + X )/4      = 99
                                            11X =99*4
                                               X = 396 /11
                        X = 36 
எனவே பறந்து வந்த குருவிகள் 36 ஆகும்

0 comments to “கணக்கதிகாரம் – குருவிகளின் கணக்கு”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates