ஞாயிறு, 17 ஜூலை, 2011

மின்னல் கவிதைகள் - I

,
இச்சைகள்
வேண்டாம்
இம்சைகள்
போதும்
நீ தானே இம்சை
*******************************

நேற்றின் ஏமாற்றத்தை

நாளைக்கும் சுமக்கிறேன்

இன்றேனும் வா ….

******************************

என் வெட்கத்தின்
வேர்களில்
வெந்நீராய்
உன் பார்வைகள்

******************************

காற்றினிலே கரைந்திருப்பேன்
எனை வாசிப்பாயா
என் புல்லாங்குழலே ….!

******************************

குற்றாலமாய் குதித்து
வந்த வர்த்தைகள்
உனை பார்த்தபின்
ஆயுத எழுத்தாயின.

0 கருத்துகள் to “மின்னல் கவிதைகள் - I”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates