பெட்ரோல் , டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது .இதே சமயத்தில் பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் நுகர்ச்சியும் பல மடங்கு அதிகரித்து வருகிறது பெட்ரோல் , டீசல் ஆகியவற்றிக்கு மாற்றாக காட்டாமணக்கு செடியில் இருந்து பயோ டீசல் ,சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் , இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் போன்றவைகள் இருந்தாலும் வளர்ந்த நாடுகளே பெட்ரோல் , டீசல் ஆகியவற்றிர்காக வளைகுடா நாடுகளை நம்பி இருக்கின்றன .
இந்த குறைபாடுகளை போக்க அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் மாட்டிறைச்சி மற்றும் கோழியின் கொழுப்பை நீக்கி அதை வேதி மாற்றத்திற்க்கு உட்படுத்தி அதிலிருந்து புதிய வகை எரி பொருளை கண்டுபிடித்துள்ளனர் இதில் சிறப்பு என்னவென்றால் இந்த வகை எரிபொருளை விமானங்களுக்கும் பயன்படுத்தலாம் .இந்த வகை எரிபொருளை பயன்படுத்தி விமானங்களையும் நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி காட்டி இருக்கிறார்கள்
இந்த ஆராய்ச்சிகள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள “ நாசா ட்ரைடன்” விமான ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது . இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடுகள் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.