சனி, 31 மார்ச், 2012

அழகாக எழுத 100 Joint Handwriting Fonts இலவச பதிவிறக்கம்

,

மல்டிமீடியா பயில்வோர்க்கும் DTP துறையில் பணிசெய்வோர்க்கும்          Joint Handwriting பான்ட்கள் மிகவும் தேவையான ஒன்றாகும் . ஆங்கிலத்தில்  நம்மால் Joint Handwriting எழுத முடியாமல் போனாலும் நம்மிடம் Joint Handwriting பான்ட்கள் இருந்தால் அட்டகாசமாக டைப் செய்து எல்லோரையும் அசத்த முடியும். கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் 100 Joint Handwriting பான்ட்களையும்  பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் உங்களின் டாக்குமென்ட்களை அழகாக டைப் செய்து அனைவரிடமும் பாரட்டினை பெறுங்கள். 100 பான்ட்களையும் WinRar பார்மெட்டில் வைத்துள்ளேன் அதை நீங்கள் எக்ஸ்ட்ராட் செய்துகொள்ளுங்கள்

வியாழன், 29 மார்ச், 2012

அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்

,

போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நண்பர்களே தமிழில் இலவச பொது அறிவு நூல்களை கூகிளில் தேடி நேரத்தை கழித்தவர்களில்  நானும் ஒருவன் நேரவிரயம் தான் மிச்சம் எனவே  இனைய தேடலில் அவ்வப்போது கிடைக்கும்  இலவச மென்நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்காக  பதிவிட்டு உள்ளேன் . இதில் காணப்படும் நூல்கள் எனது சொந்த படைப்பு அல்ல . பொது அறிவு என்பது எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல அதை உருவாக்கிய உள்ளங்கள்  www.tamilgk.com க்கு நன்றி கூறிவோம்  . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம்  பதிவிறக்கிஅனைவரும் பயன் பெற வேண்டுகிறேன்செவ்வாய், 27 மார்ச், 2012

வட்டத்துள் சிக்குமா எண்கள் ? – கணித புதிர்

,
நண்பர்களே இங்குள்ள புகைப்படத்தில்  ஒன்பது சிறிய வட்டங்கள் உள்ளது இதில் நீங்கள் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை நிரப்பவேண்டும். ஒரு எண்ணினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் முடிவில்  மூன்று மூன்று வட்டங்கள் உள்ள நான்கு நேர் கோடுகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் முயற்சித்து பாருங்கள்சனி, 24 மார்ச், 2012

பொதுஅறிவு மென்நூல்கள் - PDF General Knowledge E Books

,
நண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்


டிஸ்கி
டெம்பிளேட் வடிவமைப்பில் உதவிய அன்பு தம்பி ஸ்டாலினுக்கு  உள்ளம் நிறைந்த நன்றிகள்

வெள்ளி, 9 மார்ச், 2012

வருங்காலத்தில் வாகை சூடப்போகும் கிராபைட் தொழில்நுட்பம்

,

பள்ளி வயது நாட்களிலே நமக்கு அறிமுகமாகும் கிராபைட்  வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் வாகை சூடப்போகிறது என்பது  உங்களுக்கு  தெரியுமா  நண்பர்களே ?  வாருங்கள்  கிராபைட் செய்யப்போகும் அதிசயங்களை காண்போம்.

எழுதுதல் எனப்பொருள்படும் கிராபின் எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதுதான் கிராபைட் . கிராபைட்டையும் களிமண்ணையும் சேர்த்து நன்றாக அரைத்து சன்னமான குச்சிகளாக உருட்டி சூளைகளில் இட்டு சூடாக்கி பென்சில்கள் தயாரிக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள கம்பர்லாந்து என்ற  இடத்தில் சுரங்க வேலை நடைபெறும்போது தற்செயலாக கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டது .கிராபைட் என்பது  கார்பன் என்ற கரிப்பொருள் ஆகும் .

தற்பொழுது கிராபைட்டினுள் உள்ள கார்பன் அனுக்களை உரிய தொழில்நுட்ப முறையில் வலுவான பசைப்பொருள்களை கொண்டு பினைத்து கிராபைட்கூட்டுமங்கள் பெறப்படுகின்றன. 1980 களிலேயே கிராபைட் கூட்டுமங்கள் பெறப்பட்டாலும் உற்பத்திசெலவு மிக அதிகம் ஆனால் தற்பொழுது தொழில்நுட்பத்தால் உற்பத்திச்செலவு  வெகுவாக குறைந்திருக்கிறது.

கிராபைட்கூட்டுமங்கள் வெப்பத்தாலோ , குளிரினாலோ பாதிக்கப்படுவதில்லை எனவே  விமானப்பகுதிகள், ஏவுகனைகள் , மற்றும்  வின்வெளிகலங்கள் போன்றவை மட்டுமல்ல சாதாரன நடைமுறை கருவிகளை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது . எடைகுறைவான தன்மையாலும் அதிக வலுவாக இருப்பதாலும் செயற்கை கைகள் , செயற்கை கால்கள் போன்ற செயற்கை உடல் உறுப்புகள் தயாரிக்ப்படுகிறது இது மனித குலத்திற்கு வரப்பிரசாதமாகும் மேலும் பந்தய கார்கள் , மீன்பிடி படகுகள், கூடரம் அமைக்க தேவைப்படும் துணிகள் , பஞ்சாலைகளில் பயன்படும் எந்திரங்கள் , இசைக்கருவிகள் , சைக்கிள்கள் போன்ற என்னற்ற பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன .
பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மனித குலத்தை காக்க கிராபைட்கூட்டுமங்களில் ஆன  நுண் இழைகளை கொண்டு கட்டுமானங்கள் செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது மற்றொறுபுறம் நானோ தொழில்நுட்பம் மூலம் கிராபைட்கூட்டும ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றது .  நண்பர்களே கண்ணாடி இழை(fibre glass) எப்படி பரபரப்பை ஏற்ப்படுத்தி சாதனை செய்கின்றதோ அதுபோல் கிராபைட் வருங்காலத்தில் வெற்றி வாகை சூடப்போகிறது
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates