Sunday 11 May 2014

பாஸ்பரஸ் - உயிரைக்குடிக்குமா ? உயிரின் ஆதாரம்

,
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு அறிவியல் பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நம்முடைய தினசரி வாழ்விலும்  பல்வேறு உள்நாட்டு போர்களில் எதிரிகளை அழிக்கவும் பயன்படுத்தும் பாஸ்பரஸ் நம்முடைய உயிரின் அடிப்படை சாராம்சம் உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்வோம் .

பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை


பன்னெடுங்காலாமாகவே உலோகங்களை தங்கமாக்கும் இரசவாத முயற்சிகள் நடைபெற்று வந்து இருக்கின்றன குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் இம்முயற்சிகள் அதிகரித்தன . ஐரோப்பிய வியாபாரியான ஹென்னிங் பிராண்ட்டும் இம்மாதிரியான இரசவாத முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார் 1969 ஆண்டில் சிறுநீரை சுத்தப்படுத்த ஒரு தாதுப்பொருளை போட்டு காய்ச்சிக்கொண்டு இருந்தார் .குடுவையின் அடியில் படிந்திருந்த பொருள் பசும்மஞ்சள் ஒளியில் மின்னிக்கொண்டு தீடீரென தீப்பிடித்து எரிந்தது . ஆச்சரியப்பட்டுப்போனார் ஹென்னிங் . ஹென்னிங் பாஸ்பரஸை கண்டுபிடித்த பின்னும் சற்றேறக்குறைய  ஒரு நூற்றாண்டுக்குபின் ஜேம்ஸ் ரெட்மேன் கால்சியம் பாஸ்பேட்டையும் மணலையும் கலந்து மின் அடுப்பில் எரித்து பாஸ்பரஸ் உருவாக்கும் முறையை கண்டறிந்தார் . 

உயிரின் ஆதாரம்

நமது உயிரின் ஆதாரமான புரோட்டோபிளாசத்தின் மையப்பொருள்  பாஸ்பரஸ்தான்  DNA மற்றும் RNA வில் உள்ளவை பாஸ்பேட் சர்கரைகள் ஆகும் . நமது உடலில் 85 % பாஸ்பரஸ் எலும்புகளிலும் மீதி இரத்தம் , நிணநீர், இதயம், சிறுநீரகம் மூளை, தசை என அனைத்து உறுபுகளிலும் காணப்படுகிறது . பாஸ்பரஸ் இல்லை எனில் சிந்திக்கும் திறன் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . மேலும் செல்சுவர் பலமடையவும் உடல்வளர்ச்சிக்கும் பாஸ்பரஸ் மிகமுக்கியமானதாகும்

வகைகளும் பயன்களும்

நமது புவியின் மேலோட்டில் இயற்கையாக கிடைக்கும் தனிமம் இதில் பல வகைகள் காணப்பட்டாலும் வெண்பாஸ்பரஸ் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது . வெண்பஸ்பரஸ் நச்சுத்தன்மை கொண்டது எளிதில் தீப்பற்றக்கூடியது , நீரில் கரையாது எனவே  வெண்பாஸ்பரஸ் நீருக்குள்தான் வைத்திருக்கப்படுகிறது . சிவப்பு பாஸ்பரஸ்  எளிதில் தீப்பற்றாது அதிக நச்சுத்தன்மையும் கிடையாது  . சிவப்பு பாஸ்பரஸ் தீக்குச்சி தயாரிப்பில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது மேலும் பட்டாசு தயாரிப்பிலும் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது
கண்ணாடியில் பாஸ்பரஸ் கலக்கப்பட்டு சோடியம் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது , கடின நீரை மென்நீராக்க பாஸ்பரஸ் பயன்படுகிறது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உரங்களாக பயன்பட்டு வருகிறது  பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் பயன்படுகிறது அலோபதி மருந்துகளில் பாஸ்பரஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . 

பாஸ்பாரஸ்சின் வேறுமுகம்

பல்வேறு ஆக்கச்செயல்களுக்கு பயன்பட்டாலும் பாஸ்பரஸ் ஒரு உயிர்க்கொல்லி ஆயுதாமாகும் அமெரிக்கா ஈராக்கின் மேல் பாஸ்பரஸ் குண்டுகளை போட்டது உங்களுக்கு நினைவு இருக்கிறதா  நண்பர்களே ? பாஸ்பரஸ் மனித உடலில் பட்டு எரியத்துவங்கிவிட்டால் சதை எரிந்து எலும்பு மட்டுமே பாக்கி என்ற நிலையில்தான் அனையும் பாஸ்பரஸ் தீயை அணைப்பது அவ்வளவு சுலபமல்ல
பல்வேறு உள்நாட்டு போர்களில் புகைமூட்டத்தை உருவாக்கவும் எதிரிகளை  அழிக்கவும் இராணுவ வீரர்களின் வேதியியல் ஆயுதமாக பயனப்டுகிறது என்றாலும் பல்லாயிரக்கனக்கான அப்பாவி பொதுமக்களையும் பஸ்பமாக்கியிருகிறது பாஸ்பரஸ்

படங்கள் உதவி : கூகுள்
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates