Showing posts with label பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள். Show all posts
Showing posts with label பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள். Show all posts

Thursday, 2 December 2021

உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி விளையாடுவது எப்படி - How to install Android OS in your PC

,

 


நண்பர்களே உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி அதன் மூலம் இலட்சக்கனக்கான கேம்ஸ்களை விளையாடி மகிழ்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் .

முதலில் Phoenix OS குறிந்து அறிந்து கொள்வோம் . Phoenix OS என்பது இலவசமாக கிடைக்க கூடிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் ஆகும் இதை நம் கணினியில் சாதாரன மென்பொருள் போல நிறுவினால் போதும் , நம்து கணினி Dual Booting இல் விண்டோஸ், ஆண்ட்ராய்ட் என தேர்வு செய்ய இரு இயங்குதளங்கள் கிடைக்கும் . அதில் Phoenix OS தேர்வு செய்தால் நமது மொபைலில் இருப்பது போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இருக்கும் . இணையயமும் சிறப்பாக செயல்படும்  கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல ஆயிரக்கனக்கான ஆப்ஸ்களை  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . மேலும் இணையத்தில் உள்ள ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . சாதாரணமாக் நாம் விண்டோஸ் கணினியில் செய்யும் படம் பார்த்தல் , பாட்டு கேட்டல் , மெயில் அனுப்புதல் இணையதள உலாவல் என அனைத்து செயல்களையும் இந்த Phoenix OS இயங்குதளத்திலும் செய்ய முடியும் . 


Phoenix OS கணினியில் இன்ஸ்டால் செய்வது எப்படி

முதலில் ஏதாவது இணைய உலாவியில் Phoenix OS என தேடினால் Phoenix OS இயங்குதளம் டவுன்லோட் செய்யும் தளம் முதலில் இருக்கும் . 

http://www.phoenixos.com/en/download_x86   

என்ற அந்த தளத்தை கிளிக்செய்தால் அந்த தள திறக்கும் அதில்  Phoenix OS  என்ற மெனுவின் கீழ்  .Exe வகை கோப்பும் Image file foramat வகை இருக்கும் அதில் நமக்கு தேவையான PhoenixOSInstaller-v3.6.1 (Based on Android7.1) என்ற.Exe வகை டவுன்லோட் மெனுவினை க்ளிக் செய்தால் டவுன்லோட் ஆக தொடங்கும் . டவுன்லோட் முடிந்த பின்பு அதை டபுள் க்ளிக் செய்தால் கணினியில் உள்ள டிரைவ்கள் பட்டியலிடப்படும் அதில் நமக்கு தேவையான டிரைவினை தேர்வு செய்தால் Phoenix OS இன்ஸ்டால் ஆக தொடங்கும் இன்ஸ்டால் முடிந்த பின்பு Restart கேட்கும் அதை க்ளிக் செய்தால் நமது கணினி மீண்டும் இயங்க தொடங்கும் பொழுது விண்டோஸ் இயக்கசூழல்  மற்றும் Phoenix OS இரண்டில் எதில் Boot ஆகவேண்டும் என கேட்கும் அதில் Phoenix OS எனும் மெனுவினை தேர்வு செய்தால் Phoenix OS இயக்கச்சூழல் திறக்கும் .


Phoenix OS ஆனது நமது மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட் இயக்கச்சூழல் போலவே இருக்கும் . நாம் மொபைலில் செய்யும் அனைத்து செயல்களையும் இந்த இயங்குதளத்திலும் செய்ய முடியும் 










Friday, 22 May 2015

குழந்தைகளின் கணித அறிவு வளர டேன்கிரம் Flash Game Free download

,
வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவேளைக்கு பின்பு பயனுள்ள பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . டேன்கிராம் எனும் சீன கணித விளையாட்டில் ஏழு கணித உருவ துண்டுகளைப்பயன்படுத்தி பல்வேறு கணித உருவங்களை உருவாக்க முடியும் . இந்த விளையாட்டில் ஒரு சதுர வடிவ தாள் ஆனது இரு பெரிய செங்கோண முக்கோணம் , கொஞ்சம் சிறிய செங்கோண முக்கோணம் அதைவிட சிறிய இரு செங்கோண முக்கோணம் , ஒரு சதுரம் , ஒரு இனைகரம் என ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அந்த உருவங்களை மாற்றி மாற்றி பொருத்துவதின் மூலம் பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடுவதாகும் . 19 ஆம் நூற்றான்டிலேயே சற்றேறக்குறைய 6500 வடிவங்களை உருவாக்கி இருந்தனர் .  
உங்கள் குழந்தைக்கு ஒரு சதுரவடிவ தாளினை  படத்தில் காட்டியவாறு ஏழு துண்டாக்கி பிரித்து கொடுங்கள்  . பின்பு அவர்களின் கற்பனை வளத்திற்கேற்றவாறு பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடி மகிழ முடியும்  . உருவங்களின் மாதிரி வேண்டுமெனில்  கீழ்கண்ட  எனது முந்தைய பதிவில் இருந்து PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
 டேன்கிராம் விளையாட்டினை கணினியிலேயே விளையாட முடியும் கீழ்கண்ட பிளாஷ் வடிவிலான அப்பிகேஷனை பதிவிறக்கம் செய்து அதை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும் அதை அருகில் இருக்கும் படத்தை போல்  மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும்  . புதிய உருவம் வேண்டுமெனில் அருகில் உள்ள படத்தை கிளிக் செய்தால் புதிய உருவம் கிடைக்கும் . உங்களின் குட்டிச்செல்லங்களுக்கு பதிவிறக்கி கொடுத்து அவர்களின் கணித அறிவினை வளப்படுத்துங்கள் .
  

பின்குறிப்பு 


நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் . 

Monday, 17 September 2012

TNPSC போட்டித்தேர்விற்கான தமிழ் இலக்கண ஒலி நூல்கள் TNPSC Tamil Ilakkanam Audio Book

,


நண்பர்களே TNPSC போட்டித்தேர்விற்காக தமிழ் இலக்கன மென்நூல்களை ஒலி வடிவில் பதிவிட்டு 
உள்ளேன் . இதில் தமிழ் இலக்கணம்  ஒலி  வடிவில் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது  இணைய தேடலில் எனக்கு 
கிடைத்த ஒலி  நூல்களை  உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்   கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி 
பயன் பெறுங்கள்

Sunday, 2 September 2012

வேர்டு பார்மெட்டில் 60 ரெஸ்யூம்கள் MS Word Format 60 Resume’s

,
Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் . திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும்  . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . Resume தயாரிப்பு என்பது இன்றை இளைஞர்களுக்கு  சரிவர தெரிவது இல்லை  Resume தயாரிக்க உதவ பல இணைய தளங்கள் இருப்பினும் அதன் மூலம் சரியாக தயாரிக்க முடிவது இல்லை எனவே வேர்டு பார்மெட்டில் 60 மாடல் ரெஸ்யூம்களை தயாரித்து உள்ளேன்  இதை இலவசமாக பதிவிறக்கி  உங்கள் பெயர் முகவரி, திறமைகள் போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள் அவ்வாறு செய்யும் போது கீழ் கண்ட உதவிக்குறிப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . 60 மாடல் ரெஸ்யூம்களை வின் ஸிப் செய்து உள்ளேன் அதை நீங்கள் Extract செய்து கொள்ளுங்கள்



*  நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .
* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுதுங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.

*  அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
*  இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டு Jollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய  இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்

*  நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்
*  கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்
*  உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை  தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள்  உதாரணமாக
கல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா  என யோசியுங்கள்.

* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.
*  Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்
* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு  அனுப்புங்கள்

*  இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால்  ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்  
*  இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக   Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என  கொடுக்காதீர்கள்
*  இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்
* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .
Dear friends here I am attached 60 model Resume in Ms word format if you want model Resume please click here

Sunday, 15 April 2012

அட்டகாசமான கேம்ஸ்கள் , Flash Games , வால்பேப்பர்கள், இலவச டவுன்லோட்

,
அட்டகாசமான கேம்ஸ்கள், வால்பேப்பர்கள் , சாப்ட்வேர்கள், போன்றவற்றின்  அறிமுகத்தோடு அவற்றின் நேரிடையான டவுன்லோட் லிங்குகள் அடங்கிய நோட்பேட் டாக்குமென்டை பதிவேற்றி உள்ளேன் . உங்களுக்கு தேவையானவற்றை நேரிடையாக  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . சில டவுன்லோட் லிங்குகளில் 20 , 15, கேம்ஸ்கள் தொகுப்பாக காணப்படும் . டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்
                  

Sunday, 1 April 2012

அழகாக எழுத 100 Joint Handwriting Fonts இலவச பதிவிறக்கம்

,

மல்டிமீடியா பயில்வோர்க்கும் DTP துறையில் பணிசெய்வோர்க்கும்          Joint Handwriting பான்ட்கள் மிகவும் தேவையான ஒன்றாகும் . ஆங்கிலத்தில்  நம்மால் Joint Handwriting எழுத முடியாமல் போனாலும் நம்மிடம் Joint Handwriting பான்ட்கள் இருந்தால் அட்டகாசமாக டைப் செய்து எல்லோரையும் அசத்த முடியும். கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் 100 Joint Handwriting பான்ட்களையும்  பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் உங்களின் டாக்குமென்ட்களை அழகாக டைப் செய்து அனைவரிடமும் பாரட்டினை பெறுங்கள். 100 பான்ட்களையும் WinRar பார்மெட்டில் வைத்துள்ளேன் அதை நீங்கள் எக்ஸ்ட்ராட் செய்துகொள்ளுங்கள்

Saturday, 14 January 2012

வித விதமாக Tie கட்டுவது எப்படி ?

,

நண்பர்களே Tie கட்டுவது  என்பதும் ஒரு கலையே ஆனால் நம்மில் பலருக்கு Tie கட்டுவது என்பது தெரியாது Tie கட்டுவதில் பல முறைகள் உள்ளன .  இக்குறைபாட்டை போக்க வேர்டு டாக்குமெண்டில் படிப்படியான பட உதாரணாங்களுடன் உள்ள File ஐ பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் .உங்களுக்கு பயன்பட்டது எனில் கருத்துரையிடுங்கள்
நன்றியுடன்
அ.குரு

Saturday, 31 December 2011

விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்

,

நண்பர்களே நம் ஒவ்வொருவரின் கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய  ஒரு எளிய freeware மென்பொருள் விரல் நுனியில் குறள் . இதில் அனைத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம் .அதிகாரங்களின் அடிப்படையிலோ அல்லது எத்தனையாவது குறள் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும் மெனு உள்ளது. இந்த சிறிய மென்பொருளை  இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை .exe வடிவில் உள்ள இந்த மென்பொருளை இயக்கினாலே போதும்  மவுஸ் மூலம் ரைட்கிளீக் செய்வதின் மூலம் மெனுக்களை தேர்வு செய்யலாம் இதை உருவாக்கியது அன்பு நண்பர் இளங்கோ சம்பந்தம் . இனைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்பொருள் உங்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவிடுகிறேன்  கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை இயக்கி பயன்பெறுங்கள்.



டிஸ்கி

அன்புள்ளம் கொண்ட பதிவுலக சொந்தங்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் புதிய வருடம் மகிழ்ச்சிகளையும் சாதனைகளையும் கொண்டுவரட்டும் உங்களுடனான  நட்பு பயனத்தில் புதிய வருடத்தில் கைகோர்த்து நடப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நேசம்மிகுந்த நெஞ்சமுடன்
அ.குரு 

Wednesday, 28 December 2011

MP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து

,

நண்பர்களே நம் மொபைலில் அவசியம் இருக்க வேண்டியது  தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து ஆகும் ஆனால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நம்மில் எத்தனை பேரிடம் இந்த பாடல்கள் இருக்கிறது என்று  ? 
கீழே உள்ள சுட்டியை இயக்கி இந்த இரு பாடலையும் பதிவிறக்கி பயன்படுத்துங்கள் .


ஜெய்ஹிந்

Thursday, 6 October 2011

எக்ஸல் ஃபார்மெட்டில் இலவச ஃலைப் டைம் காலாண்டர்

,

அன்புள்ள நண்பர்களே எக்ஸல் ஃபார்மெட்டில் இலவச ஃலைப் டைம் காலாண்டர் உங்களுக்காக பதிவேற்றி உள்ளேன் பதிவிறக்கி பயன்பெறுங்கள் இந்த லைப் டைம் காலாண்டரில் 1900 ஆண்டு முதல் 2078 வரை தேதி , கிழமைகளை அறிய முடியும் . பயன்படுத்த மிக மிக எளியது  Enter year for calendar என்னும் இடத்தில் உங்களுக்கு  தேவையான வருடத்தை மட்டும் உள்ளீடு செய்தால் போதும் அந்த வருடத்திற்கு தேவையான காலான்டர் கிடைக்கும்  இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்
 


Sunday, 24 July 2011

இலவச PDF converter

,
திறமையான , இலவச PDF மென்பொருளை தேடுபவரா ?


பல வகையான PDF மென்பொருள்கள் word, pagemaker போன்றவற்றில் தயாரித்த நாம்முடைய கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றும் போது அதில் அந்நிறுவனத்தின் water mark இமேஜ்களையோ அல்லது நமக்கு எரிச்சலூட்டும் pupup விளம்பரங்களையோ வெளிப்படுத்தும் ஆனால் CUTE PDF என்ற ஒரு இலவச மென்பொருள் உங்களின் PDF தேவைகளை சுலபமாக தீர்த்து விடும் .

இதை பதிவிறக்கி , Instal செய்து விட்டபின்பு நீங்கள் தாயாரித்து வைத்திருக்கும் கோப்பை திறந்து கொள்ளுங்கள் .இப்போது அதில் print மெனுவை தேர்ந்தெடுத்து பிரின்டர் பெயருக்கு முன் CUTE PDF என்பதை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான PDF கோப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்

இதற்கான பதிவிறக்க சுட்டி

http://www.cutepdf.com/products/cutepdf/Writer.asp#download



Saturday, 9 July 2011

கணினி வழி கணிதம்

,
                                                      

கணினி இயக்கம் தெரிந்த பலருக்கும் கணித குறியீடுகளை உள்ளீடு செய்வதென்பது சற்று கடின செயல்தான். நம் வீட்டு பிள்ளைகள் கணிதத்தை கணினி மூலம் கற்க Microsoft ஒரு திறன்மிக்க இலவச
கிராபிகல் கால்குலேட்டரை வழங்குகிறது .இதில் நாம் கணித செயல்பாடுகளை அமைக்கையில் ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகிறது என அறியலாம். இதில் பல சமன்பாடுகள் பதியப்பட்டு கிடைக்கின்றது மேலும் நம் தேவைக்கேற்ப்ப Real ,Degrees,Radians மற்றும் complex number ஆகிய பிரிவுகள் கிடக்கின்றன. மேலும் நமக்கு எத்தனை Decimal இலக்கத்தில் விடை வேண்டும் என்று அமைத்துக்கொள்ளலாம்.


இதில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் நாம் கைகளினால் சமன்பாடுகளையும் அமைக்கலாம் இதற்க்கென Work sheet area என்ற பகுதி உள்ளது இத்தகைய செயல் திறன் மிக்க மென்பொருளை பதிவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் அவர்களை கணிதத்தில் சிறப்புற செய்யுங்கள் இதை பதிவிறக்க கீழே உள்ள சுட்டியை தட்டுங்கள் கணிதத்திற்கான கதவுகள் திறக்கும்.

http://www.microsoft.com/download/en/details.aspx?id=15702


 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates