Showing posts with label 3டி புகைப்படங்கள். Show all posts
Showing posts with label 3டி புகைப்படங்கள். Show all posts

Saturday, 12 November 2011

நம்பினால் நம்புங்கள் – உங்கள் முன் தோன்றும் இயேசு உருவம்

,

மாயபிம்ப(Illusion) புகைப்பட வகையைச்சார்ந்த இந்த இயேசு புகைப்படத்தின் நெற்றியில் உள்ள நான்கு புள்ளிகளை 30 வினாடிகள் கண்களை இமைக்காமல் உற்று பாருங்கள் பின்பு சுவற்றினை பாருங்கள் அதில் ஒரு வெளிச்ச வட்டம் தெரியும் அதை உற்று பாருங்கள் அதில் இயேசு உருவம் இயேசு உருவம் தெரியும்  இது சில வினாடிகள் மட்டுமே தெரியும். பின்பு நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புகைப்படத்தை 30 வினாடிகள் உற்றுநோக்கிவிட்டு சுவரை பார்த்தால் ஒவ்வொரு முறையும் இயேசு உருவம் தெரியும் .

டிஸ்கி

என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துரை வழங்கியும் ஓட்டளித்தும் என்னை உற்சாகப்படுத்தி வரும்  நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன் . மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்டாலின்  

Sunday, 6 November 2011

ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்கள் ஒரு அறிமுகம்

,
ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்கள் பார்க்க பார்க்க பரவசத்தை ஏற்படுத்தி நம்மை மாய உலகத்திற்கு அழைத்து செல்பவை இந்த புகைப்படங்களை பார்க்க 3டி கண்ணாடிகள் தேவையில்லை வெறும் கண்களால் பார்க்க முடியும் .
ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படங்களை கண்களுக்கு ஒரு அடி தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் புகைப்படத்தின் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டு கண்களின் பார்வைகளையும் குவித்து ஒரு சில நிமிடங்கள் பார்க்க வேண்டும் பின் மெதுவாக அந்த புகைப்படம் முழுவதையும் பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் புகைப்படத்தின் ஒரு சில இடங்கள் பள்ளமாகவும் சில இடங்கள் மேடாகவும் தெரிய ஆரம்பிக்கும் பின்பு  மேலும் கூர்ந்து கவனித்தால் ஸ்டீரியோகிராம் எனப்படும் 3டி புகைப்படத்தில் மறைந்து இருக்கும் உருவம் தெரிய ஆரம்பிக்கும் நம்மை மாய உலகத்திற்கு அழைத்து செல்லும்.







   
எந்த ஒரு 3டி படத்தை பார்த்தாலும் அதில் மறைந்து இருக்கும் உருவம் தெரிய ஆரம்பித்து உங்களை வியப்பில் ஆழ்த்தும் முதல் முறை பார்க்கும் போது கண்களை அதிக சிரமப்படுத்தி பார்க்காதீர்கள். ஒரு முறை 3டி புகைப்படங்களை பார்க்க பழகிக்கொண்டால் உங்களுக்கு பின் சிரமம் ஏற்படாது . 3டி புகைப்படங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு அனுபவமாக உங்களுக்கு இருக்கும்.

டிஸ்கி 1
மொபைல் பதிவிடல் செய்வதால் சில 3டி புகைப்படங்களை மட்டுமே இனைத்துள்ளேன் . நீங்கள் Google மூலம் 3D அல்லது Stereogram  என டைப் செய்து படங்களை தேடினால் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் உங்களுக்கு கிடைக்கும். 3டி புகைபடங்களை பார்த்து மறைந்து இருக்கும் உருவங்கள் தெரிய ஆரம்பித்து நீங்கள் மாயஉலகத்தை உணர ஆரம்பித்தால்  கருத்துரை இடுங்கள் நண்பர்களே 
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates