Monday, 11 July 2011
சார்பியல் தத்துவம் ஒரு எளிய அறிமுகம்
Posted by
Guru
,
பூமியனது சூரியனை சுற்றுகிறது , சூரியன் நமது ஆகாயகங்கை(milky way) என்ற பால்வெளியின் மையத்தை நோக்கி மெதுவாக நகர்கிறது நகர்கிறது . நமது பால்வெளியோ பிற பால்வெளி மண்டலங்களில் இருந்து விலகி போய்க்கொண்டு உள்ளது அப்படியானால் இந்த பிரபஞ்சத்தில் ஏதாவது நிலையான பொருள் உள்ளதா ? அப்படி இருந்தால் அந்த நிலைப்புள்ளியை மையமாக கொண்டு பூமியின் நகர்ச்சியை தனித்து(Absoluteness) கூறமுடியும் இதுதான் நவீன இயற்பியல் அறிஞர்களின் வாதம். இதை விளக்கி சார்பியல் எனும் அதிநவீன கருத்தினை முன் வைத்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மைக்கேல்சன் மார்லி சேதனையில் ஒளியின் திசை வேகம் வினாடிக்கு சற்றேற குறைய மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள் என நிறுபிக்கப்பட்டுள்ளது . வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் ஒரு போதும் மாறாது என்றார் மாறாத நீளமென்றோ , மாறாத நேரமென்றோ, மாறாத பொருண்மை என்றோ எதுவும் இல்லை ஆனால் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க இவைகள் மாறும் இயல்புடையன என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
சார்பியல் கொள்கைப்படி ஒளி வளையும் என சூரியகிரகணம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது .ஒளியின் வேகத்தில் பயணம் செய்யும் பொருளோடு நாம் பயணம் செய்தால் மாறாத நீளம், மாறாத நேரம் , மாறாத பொருண்மை போன்றவற்றை அறிய முடியாது ஆனால் நிலையாக இருக்கும் ஒருவரால் இந்த மாற்றங்களை அறிய முடியும் .
நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே வருடம் ஒரே மாதம் ஒரே நாள் ஒரே சமயத்தில் பிறந்த சமவயது உடையவர்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து நீங்கள் ஒளியின் வேகத்தில் ஒரு மாதம் பயணித்து விட்டு பூமிக்கு வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் . உங்கள் வயது ஒரு மாதம்தான் அதிகரித்து இருக்கும் .பூமியில் உங்களுக்காக காத்திருந்த உங்களின் சம வயது நண்பருக்கோ பல வருடம் வயது கூடி போயிருக்கும் .
ஒளியின் வேகத்தில் பயணம் செல்லும் போது காலம் மெதுவாக இயங்குகிறது அணுக்கடிகாரங்கள் மூலம் நடந்த சோதனையில் வேகம் கூடினால் காலம் மெதுவாக இயங்குகிறது என நிறுபிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Originally Galileo only told about relativity. that only is expounded by Einstein.
read relativity book by landau and rumer (russian authors for simple understanding) - excellent book.