Showing posts with label அறிவியல் கேள்விகளும் பதில்களும். Show all posts
Showing posts with label அறிவியல் கேள்விகளும் பதில்களும். Show all posts

Thursday, 29 December 2022

விமானத்தில் போகும் போது , மொபைலை ஏன் ப்ளைட்மோடில் போட வேண்டும் ?

,
நாம் காரில் போகும்போது FM கேக்குறோம்னு வைச்சுக்குவோம் , அந்த FM ஒரு குறிப்பிட்ட தூரம் போன , கொரகொரன்னு சத்தம் வரும் சிக்னல் ஒழுங்கா இல்லாம பாட்டு விட்டு விட்டு கேட்கும். அதாவது சிக்னல ரிசீவ் பண்ண நம்ம FM திணறும், அதனால் விட்டு விட்டு கொறகொறன்னு மட்டும் சத்தம் வரும். அதே போல தான் பூமியில் இருந்து பல ஆயிரம் உயரம் பறக்கும் விமானத்திற்கு என்று தகவல் தொடர்புக்க்காக சிக்னல் பயன்படுத்தப்படும். தகவல் தொடர்பு என்பதை தாண்டி Auto Landing கிற்கும் அந்த சிக்னல் தேவைப்படும். அதற்கு பெயர் உணர்திறன். அந்த சிக்னல்களுக்கு இடையூரா இருப்பது செல்போன் சிக்னல்கள். அதாவது காற்றுவழி சிக்னல்கள் அனைத்தும் ரேடியோ அலைவரிசை ஸ்பெக்ட்ரமின் வெவ்வேறு பகுதிகளைப் பயன்படுத்துகின்றன. அப்படி நாம் செல்போன் எரோப்லேன் மோடில் போடாமல் போனால் ACI எனப்படும் Adjacent Channel interference, நிகழும். அதாவது   க்ராஸ் டாக் போல. க்ராஸ்டாக் ஏற்படுவதை போல விமானம் எங்கே பறகுதோ அதற்கு அருகிலுள்ள சேனலின் குறுக்கீடு ஒரு இடையூராக மாறி, சிக்னல் தடை ஏற்படுகிறது. ஏசிஐ என்பது ஒரு ரேடியோ ரிசீவர், அருகிலுள்ள அதிர்வெண்ணில் உள்ள டிரான்ஸ்மிட்டரிலிருந்து ஒரு பரிமாற்றத்தை எடுப்பது அதன் வேலை. அதை செல்போன் சிக்னல்கள் குறுக்கிடும் போது விமானிக்கும், கூடவே விமானத்தின் AUTO LANDING சிஸ்டம்க்கும் சேர்த்து தொடர்பு பாதிக்கப்பட்டு அது ஆபத்தில் கொண்டு விடும். அதனால் விமானத்தில் பறக்கும்போது செல்போன் எரோப்லேன் மோட் போடவேண்டியது கட்டாயம்.

Tuesday, 2 June 2015

லீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் ?

,
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகும் இதைத்தான் நாம் ஒரு வருடம் என்கிறோம் . ஆனால் ஒரு லீப் வருடத்திற்கு மட்டும் 366 நாட்கள் வரும் காரணம் என்னவென்று தெரியுமா ?

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகிறதல்லவா இதில் 6 மணி நேரத்தை ஒதுக்கிவிட்டு 365 நாட்களை ஒரு வருடம் என்கிறோம் இந்த விடுபட்ட 6 மணி நேரம் இரண்டாம் ஆண்டு 12 மணிநேரமாகிறது . மூன்றாம் ஆண்டு  இன்னும் ஆறு மணிநேரம் சேர்ந்து 18 மணி நேரமாகிறது நான்காம் ஆண்டு 24 மணிநேரமாகிறது ஆகையால் இந்த நான்காம் ஆண்டு 365 நாட்களுடன் ஒரு நாள் சேர்ந்து 366 நாட்களுடன் லீப் வருடமாகிறது . 

Sunday, 22 April 2012

இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?

,
இரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்)  கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின்  உயிரை காப்பாற்றிய  இயற்கை சலைன் எது  தெரியுமா ? நாம்  தாகம் தணிக்க அருந்தும் இளநீர் தான்  அது . 

இளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது  மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .
பழங்காலங்களில்  மக்களுக்கு  மரணபயத்தை கொடுத்த  அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது  இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை  கரைப்பதற்கும்  , மஞ்சள் காமலையை போக்குவதற்கும்  இளநீர் அருமருந்தாகும் .
அவசர காலங்களில்  ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில்  குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால்  குளுக்கோஸுக்கு மாற்றாக  சுத்தமான இளநீரை  பயன்படுத்தலாம்

Saturday, 7 January 2012

குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் பூக்கள், கனிகள் தோன்றுவது ஏன் ?

,

மனிதர்களின் பாலின பண்புகளுக்கு காரணமான ஹார்மோன்களை போல தாவரங்களுக்கும் ஹார்மோன்கள் உள்ளான.இந்த ஹார்மோன்கள்தான் குறிப்பிட்ட பருவத்தில் பூக்கள், கனிகள் தோன்றுவிக்கிறது. ஆக்ஸின்கள், ஜிப்ரலின்கள் , சைடோகைனின் புளோரிஜென் போன்றவை குறிப்பிட்த்தக்க தாவர வளர்ச்சி ஹார்மோன் ஆகும் .

தாவர வளர்ச்சி ஹார்மோன் என்பது தாவரங்களில் மிக குறைந்த அளவில் செயல்புரியும் அங்ககப்பொருள்கள் ஆகும் .பொதுவாக தாவர ஹார்மோன்கள் ஒரு பகுதியில் உற்பத்தியாகி மற்றொரு பகுதிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து அங்கு குறிப்பிட்ட உயிர்வேதிச்செயல்கள் , வாழ்வியல் செயல்பாடுகள்  மற்றும் புறத்தோற்ற அமைப்பின் பல விளைவுகளை சீராக்கும் அல்லது கட்டுப்படுத்தும் செயல்களை செய்கின்றன.
ஆக்ஸின்கள் வளர்ச்சியை தூண்டுகின்றன ,
ஜிப்ரலின்கள் வேர்கள், தண்டுத்தொகுதி ,இலைகள், கனிகள் போன்றவற்றின் திறனை தூண்டுகின்றன ,
புளோரிஜென்கள் பூக்கள் பூப்பதை ஊக்குவிக்கின்றன.

Sunday, 18 December 2011

நவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன ?

,

இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் கொள்கை சுதந்திரம் வழங்குவதே நவரத்தின தகுதி இந்திய அரசின் பப்பிளிக்என்டர்பிரைசஸ் துறையே இந்த நவரத்தின தகுதியை வழங்குகிறது இந்த தகுதியை பெறும் நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய் வரை அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ எந்தவிதமான திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்  மேலும் வெளிநாடுகளுடன்  கூட்டுத்தொழில் தொடங்கலாம்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல் , பாரத்பெட்ரோலியம்,  கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்  போன்ற  பதினெட்டு இந்திய பொதுத்துறை  நிறுவனங்கள் நவரத்தின தகுதியை பெற்று உள்ளன 

Monday, 28 November 2011

மனித உடம்பில் உள்ள பயோகிளாக் என்பது என்ன ?

,

            சிலர் உறங்க போகும் முன் அதிகாலையில் விரைவாக எழுந்திருக்க  அலாரம் வைத்துக்கொண்டு படுப்பார்கள்  நாளடைவில் அலாரம் தேவையில்லாமலே குறிப்பிட்ட நேரம் ஆனது எழுந்து கொள்வார்கள்  இதற்கான காரணம் மனிதரில் காணப்படும்  Bio clock System எனப்படும் உயிரியல் கடிகாரம் ஆகும் .   இந்த  உயிரியல் கடிகாரமானது சீரான இயக்கம் நடைபெற்றால் அதற்கு ஒத்திசைவாக  இயங்க ஆரம்பிக்கும் இந்த கால ஒழுங்கை பயாலஜிக்கல் ரிதம் என்று அழைக்கப்படுகிறது .
மனித உடம்பில் காணப்படும் Bio clock System அமைப்பை பற்றி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹால்பெர்க் என்ற  விஞ்ஞானி முதன் முதலில் கண்டுபிடித்தார் தினந்தோறும் ஒழுங்குபடுத்தும் கால அளவை circardian Rhythm   என்றும் ஒவ்வொரு மணிதோறும்  ஒழுங்குபடுத்தும் கால ஒழுங்கை chrno Biology Rhythm எனப்படும்
மனிதருக்கு மட்டுமில்லை விலங்குகள் , பறவைகள் போன்றவைகளிலும்   Bio clock System  காணப்படுகிறது இதனால்தான் கோழிகள் அதிகாலையில் தினமும் சரியாக கூவுகின்றன 

Tuesday, 1 November 2011

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?

,

சயனைடுகளில் – பொட்டாசியம் சயனைடு(KCN) சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை அதிக நச்சு தன்மை கொண்டவை  இந்த வகை சயனைடுகளில் உள்ளா CN – அயனி தான் நச்சு பண்பிற்கு காரணம் .

சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினோடு இணைகிறது . ஹீமோகுளோபினுள் உள்ள இரும்பு அணுக்களோடு வினைபுரிந்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேருவதை தடை செய்கிறது இதனால் சுவாசம் தடைபடுகிறது மேலும் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாத நிலையில் மரணம் சம்பவிக்கிறது . இத்துனை செயல்படுகளும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும் .சுருக்கமாக சொன்னால் சயனைடு உட்கொண்டு அது என்ன வித சுவை என உணரும் முன்பே மரணம் நிகழ்ந்துடும்.

சயனைடுகள் தங்கம் மற்றும் வெள்ளி சுத்தப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது உண்மையில்  தங்கம்  ஜொலி ஜொலிக்க சயனைடும் ஒரு  காரணம்.

Saturday, 22 October 2011

மணலில் இருந்து கண்ணாடி எப்படி தாயரிக்கிறார்கள் ?

,

கண்ணாடி பல நூற்றான்டுகளாக மக்களால் அலங்கார பொருளாகவும் அத்தியாவசியமான பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது கண்ணாடியை விரும்பும் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் வெப்பம் , தூசு மற்றும்  வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுவதும் இல்லை.  

மணல்களில் காணப்படும் சிலிக்கா 1700 செல்ஸியஸில் உருகும் தன்மை கொண்டது இத்துடன் சேடியம் கார்பனேட்டும் , நீரால் பாதிக்கப்படாமல் இருக்க கால்சியம் கார்பனேட்டும் சேர்த்து கண்ணாடிகள் தயாரிக்கப்படுகிறது . தற்போது பல்வேறு நவீன இயந்திரங்கள் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது ஆனால் பழங்காலங்களில் உருகிய கண்ணாடி குழம்பை வாயினால் ஊதி வேண்டிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டது .
உருகிய கண்ணாடி குழம்பில் செலோனியம் சல்பைடு கலந்தால் சிகப்பு வண்ண கண்ணாடியும் , காப்பர் ஆக்சைடு கலந்தால் நீல நிற கண்ணாடியும் கிடைக்கும்  பால் வண்ண கண்ணாடி தயாரிப்பிற்க்கு பஸ்பேட் பயன்படுத்தப்படுகிறது 

Monday, 10 October 2011

கார்பன் டேட்டிங் என்பது என்ன ?

,

டையனோஸர் போன்ற உயிரினங்கள் மற்றும் பழங்கால பொருள்களின் வயதை  நிர்ணயம் செய்யும் முறை கார்பன் டேட்டிங் என்பதாகும்  பாஸில் வடிவில் கிடைத்திருக்கும் பழங்கால பொருள்களின் வயதினை கார்பன் டேட்டிங்  மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

தாவரங்கள் , விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்கள் உட்பட உணவுச்சங்கிலியில் உள்ள அனைத்துமே கார்பனை எடுத்துக்கொள்பவைகள்தான் .கார்பனின் நிறை எண் 14 ஆகும் மற்ற தனிமங்கள் போல் இல்லாமல் கார்பன் ஆனது ரேடியோ அலைகளை நீண்ட காலத்திற்கு வெளியிடுபவை ஆகும் இந்த ரேடியோ அலைகள் சற்றேறக்குறைய 6000 ஆண்டுகள் வரை நிலைக்க கூடியவை
ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்து போன உயிரினத்தின் பாஸில் வடிவ அதாவது படிவ உரு நிலையில் உறைந்து காணப்படுபவைகளில் உள்ள கார்பனின்  ரேடியோ அலைகளை அளப்பதின் மூலம் அந்த உயிரினம் வாழ்ந்த காலத்தை கண்டறிய முடியும்
தற்போது காவல் துறையில் உள்ள மிகச்சிக்கலான வழக்குகளில் இறந்துபோனவர்களின் வயதினை கண்டுபிடிக்க கார்பன் டேட்டிங் பயன்படுகிறது
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates