Friday 3 December 2021

உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி - How to play Freefire game on your PC

,

 நண்பர்களே உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் .

உங்களது கணினியில் FreeFire Game விளையாட வேண்டுமெனில் உங்களது கணினியில் Phoenix OS  இருக்க வேண்டும் .Phoenix OS எப்படி உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழ்கண்ட லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள் 

https://nilanilal.blogspot.com/2021/12/os-how-to-install-android-os-in-your-pc.html

உங்களது கணினியில் Phoenix OS இன்ஸ்டால் செய்தபிறகு ஏதாவது ஒர் இணைய உலாவியில் freefire appk என தேடினால் கீழ்கண்ட இணைப்பு கிடைக்கும் அதை கிளிக் செய்தால் freefire டவுன்லோட் செய்யும் தளம் கிடைக்கும் .

Free fire download link

அந்த தளத்தில்  Download Garena Free Fire - New Age 1.68.1.apk மற்றும் Download OBB 1.68.1.zip என இரண்டினையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் OBB பைலினை Unzip செய்து வைத்துக்கொள்ளுங்கள்   .அதை ஏதாவது ஒரு டிரைவில் சேமித்து கொள்ளுங்கள் . பின்பு உங்களது கணினியில் Phoenix OS னை திறந்து கொள்ளுங்கள் பின்பு Garena Free Fire - New Age 1.68.1.apk என்ற பைலினை டபுள் கிளிக் செய்தால் இஸ்டால் ஆக தொடங்கும் பின்பு OBB பைலினை Android → obb எனும் Path சென்று சேமித்துக்கொள்ளுங்கள் . உங்களது கணினியில் இணையை இணைப்பினை ஏற்படுத்திய பிறகு உங்களது Start menuவில் Free Fire என்பதை கிளிக் செய்தால் Free Fire திறக்கும் அதில் Free Fire  ஐ பெரிய திரையில் விளையாடி மகிழுங்கள். 


Thursday 2 December 2021

உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி விளையாடுவது எப்படி - How to install Android OS in your PC

,

 


நண்பர்களே உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி அதன் மூலம் இலட்சக்கனக்கான கேம்ஸ்களை விளையாடி மகிழ்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் .

முதலில் Phoenix OS குறிந்து அறிந்து கொள்வோம் . Phoenix OS என்பது இலவசமாக கிடைக்க கூடிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் ஆகும் இதை நம் கணினியில் சாதாரன மென்பொருள் போல நிறுவினால் போதும் , நம்து கணினி Dual Booting இல் விண்டோஸ், ஆண்ட்ராய்ட் என தேர்வு செய்ய இரு இயங்குதளங்கள் கிடைக்கும் . அதில் Phoenix OS தேர்வு செய்தால் நமது மொபைலில் இருப்பது போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இருக்கும் . இணையயமும் சிறப்பாக செயல்படும்  கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல ஆயிரக்கனக்கான ஆப்ஸ்களை  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . மேலும் இணையத்தில் உள்ள ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . சாதாரணமாக் நாம் விண்டோஸ் கணினியில் செய்யும் படம் பார்த்தல் , பாட்டு கேட்டல் , மெயில் அனுப்புதல் இணையதள உலாவல் என அனைத்து செயல்களையும் இந்த Phoenix OS இயங்குதளத்திலும் செய்ய முடியும் . 


Phoenix OS கணினியில் இன்ஸ்டால் செய்வது எப்படி

முதலில் ஏதாவது இணைய உலாவியில் Phoenix OS என தேடினால் Phoenix OS இயங்குதளம் டவுன்லோட் செய்யும் தளம் முதலில் இருக்கும் . 

http://www.phoenixos.com/en/download_x86   

என்ற அந்த தளத்தை கிளிக்செய்தால் அந்த தள திறக்கும் அதில்  Phoenix OS  என்ற மெனுவின் கீழ்  .Exe வகை கோப்பும் Image file foramat வகை இருக்கும் அதில் நமக்கு தேவையான PhoenixOSInstaller-v3.6.1 (Based on Android7.1) என்ற.Exe வகை டவுன்லோட் மெனுவினை க்ளிக் செய்தால் டவுன்லோட் ஆக தொடங்கும் . டவுன்லோட் முடிந்த பின்பு அதை டபுள் க்ளிக் செய்தால் கணினியில் உள்ள டிரைவ்கள் பட்டியலிடப்படும் அதில் நமக்கு தேவையான டிரைவினை தேர்வு செய்தால் Phoenix OS இன்ஸ்டால் ஆக தொடங்கும் இன்ஸ்டால் முடிந்த பின்பு Restart கேட்கும் அதை க்ளிக் செய்தால் நமது கணினி மீண்டும் இயங்க தொடங்கும் பொழுது விண்டோஸ் இயக்கசூழல்  மற்றும் Phoenix OS இரண்டில் எதில் Boot ஆகவேண்டும் என கேட்கும் அதில் Phoenix OS எனும் மெனுவினை தேர்வு செய்தால் Phoenix OS இயக்கச்சூழல் திறக்கும் .


Phoenix OS ஆனது நமது மொபைலில் உள்ள ஆண்ட்ராய்ட் இயக்கச்சூழல் போலவே இருக்கும் . நாம் மொபைலில் செய்யும் அனைத்து செயல்களையும் இந்த இயங்குதளத்திலும் செய்ய முடியும் 










Sunday 21 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - All Parts

,

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 4

,

 

Olabs பயன்படுத்துவது எப்படி ?

 Olabs என்பது ஆன்லைனில் செயல்படும் ஆன்லைனில் செயல்படும் ஒரு விர்ச்சுவல் லேப் ஆகும் . கூகுளில் Olabs என  தேடி அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை கிளிக் செய்தால் Olabs அதிகாரபூர்வ தளாத்திற்கு அழைத்து செல்லப்படுவோம் . இத்தளம் இந்திய அரசின் மணவர்களுக்கான விர்ச்சுவல் லேப் ஆகும் . 



Online Labs for schools - Developed by Amrita Vishwa Vidyapeetham and CDAC Online Lab (olabs.edu.in)  

ஓலாப்ஸ் இணைய தளம் சென்றால் அங்கு இயற்பியல் வேதியியல்,உயிரியல், கனிதம் , ஆங்கிலம் என தனி தனி பாடங்களுக்கு வெவ்வேறு வகுப்புகளுக்கு பல்வேறு உருவகப்படுத்தும் செயல்பாடுகள் இருக்கின்றன . நமக்கு தேவைய பாடத்தினை தேர்வு செய்த பின் வகுப்பினையும் தேர்வு செய்து அந்த அந்த வகுப்புகளுக்கு உரிய செயல்பாடுகளை செய்து கற்க முடியும்  ஓலாப்ஸ் இணைய தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் ஆசிரியர் , மாணவர் , பள்ளிகள் என தனி தனியாய் பதிவு செய்து மேலதிக வசதிகளை பெறலாம் 



Saturday 20 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 3

,

 

Molecular workbench  பயன்படுத்துவது எப்படி ?


 கூகுளில் Molecular workbench   என தேடி அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை கிளிக் செய்தால் Molecular workbench   அதிகாரபூர்வ தளாத்திற்கு அழைத்து செல்லப்படுவோம்

 அங்கு உள்ள டவுன்லோட் என்பதை கிளிக் செய்தால்  எளிதாக டவுன்லோட் ஆக தொடங்கும் . டவுண்ட் செய்தபின் அதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் . Molecular workbench    எனும் உருவகப்படுத்ஹ்டுதல் மென்பொருள் இயங்க நமது கணினியில் ஜாவா நிரலாக்கச்சூழல் நிறுவப்பட்டு இருக்க வேண்டும். Molecular workbench   எனும் மென்பொருளை நமது இன்ஸ்டால் செய்த பின்னர் அதை திறந்தால் கிடைக்கும் முகப்புத்தோற்றம் 

அங்கே பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் அட்டவனைபடுத்தப்பட்டு இருக்கும் அதில் நம்க்கு தேவையானவற்றை க்ளிக் செய்து அந்த செயல்பாட்டினை செய்து கற்க துவங்கலாம்   இம் மென்பொருளில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் காண Browse entire library என்பதை க்ளிக் செய்தால் அனைத்து அறிவியல் செயல்பாடுகளையும்  காணலாம் 

மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......

 

Friday 19 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 2

,

 

அறிவியல் கற்பித்தல் மென்பொருள்கள்

               அறிவியல் கற்றல் கற்பித்தலில் பல்வேறு வணிக , இலவச மென்பொருள்கள் உள்ளன . இதன் ஒரு பகுதியாக  அறிவியல் உருவகப்படுத்துதல் (Science simulations )மென்பொருள்கள் பயன்படுகின்றன. இவ்வகையான உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் Online / Offline முறையில் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆய்வகம் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வல்லவை . இவைகளை உருவாக்க மிகுந்த பணச்செலவு ஆகும் மேலும் அதிக முன் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் ஏன் எனில் ஒரு சிறு தவறும் அதிக பாதிப்பினை உண்டாக்க கூடும் . ஆனால் அறிவியலில் உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் விர்ச்சுவல் லேப் ஆக செயல்படுகின்றன. இவ்வகையான மென்பொருளில் அறிவியல் ஆய்வகத்தில் நாம் செய்து கற்பது போலவே உருவகப்படுத்தும் மென்பொருளில் செய்து கற்க முடியும் இதனால் பொருட்செலவின்றியும் மிக மிக பாதுகாப்பாகவும் அறிவியல் ஆய்வுகளை மாணவர்கள் செய்து பயன் பெற முடியும் . 

Offline Science simulations software

v  PhET

v  Molecular workbench

Online  Science simulations software

v  Olabs

 உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் இயங்க கணினியில் ஜாவா என்ற நிரலாக்க சூழல் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் மேலும் HTML5 எனும் நிரலாக்க மொழியை ஆதரிக்கும் Google chrome Browser போன்ற ஏதாவது ஒரு  Browser இருக்க வேண்டும்

 PhET பயன்படுத்துவது  எப்படி  ?

PhET எனும் மென்பொருள் ஆனது ஆன்லைன் / ஆப்லைன் இராண்டிலும் இயங்க கூடியது ஆப்லைனில் இயங்க வைக்க வேண்டுமெனில்  முதலில்

https://phet.colorado.edu  தளத்திற்கு சென்று  ஒரு Account உருவாக்கி கொள்ள வேண்டும் பின்  ஆப்லைனில்  இயங்கும் மென்பொருளை எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம் . பதிவிறக்கிய பின்பு நமது கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். நமது கணினியில் PhET மென்பொருள் இயங்க ஜாவா என்ற நிரலாக்க சூழல் நிறுவப்பட்டு இருக்க வேண்டும் . ஜாவா எனும் நிரலாக்க சூழல் இலவசமானது , கூகுளில் JAVA என்று தேடி வரும் முடிவுகளில் முதல் முடிவினை கிளிக் செய்தால் ஜாவா நிரலாக்க சூழலின் அதிகாரபூர்வ தளத்திற்கு நாம் அழைத்து செல்லப்படுவோம் அங்கிருந்து எளிதாக டவுன்லோட் செய்து , நமது கணினியில் ஜாவா நிரலாக்க சூழலை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் .

PhET எனும் மென்பொருளை திறந்த உடன் அதில்

v  HTML5

v  JAVA

v  ALL

எனும் மூன்று மெனுக்களில் பல்வேறு அறிவியல் ஆய்வக செயல்பாடுகள் வரிசைபடுத்தப்பட்டு இருக்கும் அதில் நம்க்கு தேவையானவற்றை தேர்வு செய்தால் தனி விண்டோ ஒன்று திறக்கும் அதில் குறிபிட்ட அந்த செயல்பாடு பற்றிய விளக்கமும் அதைசெய்து கற்கும் வகையில் இருக்கும் . 

  PhET எனும் மென்பொருளை ஆன்லைனில் பயன்படுத்த  PhET வளைதளமான  PhET: Free online physics, chemistry, biology, earth science and math simulations (colorado.edu) எனும் தளத்திற்கு செல்ல வேண்டும் .

PhET எனும் வலை தளத்தில்  Simulations எனும் தலைப்பின் கீழ்

v  Physics

v  Chemistry

v  Math

v  Earth science

v  Biology

v  Browse sims

v  Proto types

v  Translated sims

 என பல்வேறு மெனுக்கள் இருக்கும்  நமக்குதேவையான படங்களை தேர்வு செய்தால் அந்த பாடம் தொடர்பான செயல்பாடுகள் அட்டவனைப்படுத்தப்பட்டு இருக்கும்  அதில் நம்க்கு தேவையானவற்றை தேர்வு செய்தால் தனி விண்டோ ஒன்று திறக்கும் அதில் குறிபிட்ட அந்த செயல்பாடு பற்றிய விளக்கமும் அதைசெய்து கற்கும் வகையில் இருக்கும் . 

 மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......

 

Thursday 18 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1

,

 

நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும் மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது .

தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலுமே கணினிகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு அரசுத் துறைகளிலும், பெரிய நிறுவனங்களிலும் பயன்படுத்தப் பட்டன. அதன்பின் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், சிறு சிறு வணிக நிறுவனங்களுக்கும் பரவின. இன்றைக்கு வீடுகளிலும்கூட கணினிகள் உலா வருகின்றன.

வீட்டுப் பயன்பாடுகள் என்பவை பெரும்பாலும் பொழுதுபோக்கு மென்பொருள்களாகும். இன்றைக்கு, ஏறத்தாழ அனைத்து வீடுகளிலும் கணினிகள் இன்றிமையாத பொழுதுபோக்குச் சாதனமாக இடம் பெற்றுள்ளது. அதுபோலக் கணினியையும் வீட்டிலுள்ள குழந்தைகளும் பெரியவர்களும் பயன்மிக்க சாதனமாகப் பயன்படுத்துவதற்கு வழியுள்ளது. அதற்கான மென்பொருள் தொகுப்புகளைப் பார்ப்போம்.

ஊடக இயக்கிகள் (Media Players)

இந்த வகை மென்பொருள்கள் இசைப் பாடல்களைக் கேட்பதற்கும், நிழற்படக் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுகின்றன. தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் திரைப்படங்களைக் கணினியில் கண்டு களிக்க முடியும். இசைப்பாடல் ஆல்பங்கள், திரைப்பாடல் திரட்டுகள் கேட்பொலிக் குறுவட்டுகளில் (Audio CDs) , இணையத்தில் கிடைக்கின்றன.. அவற்றைக் கணினியிலுள்ள குறுவட்டு ( Hard disk ) இயக்கத்தில் வைத்து இயக்க முடியும். ஊடக இயக்கி மென்பொருள் அவற்றை இயக்குகிறது. இன்றைக்கு விண்டோஸ் மீடியா பிளேயர், வி எல் சி பிளேயர் , ரியல் பிளேயர், குவிக்டைம் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்படும் ஊடக இயக்கிகளாகும்.

குரல் பதிவிகள் (Voice Recorder)

பேசுவதையும் பாடுவதையும் கணினியில் பதிவுசெய்து, கோப்புகளாக வட்டுகளில் சேமிக்க முடியும். அந்தக் கோப்புகளை இயக்கிப் பேச்சையும் பாட்டையும் மீண்டும் கேட்டு மகிழ முடியும். குரல் பதிவி (Voice Recorder) மென்பொருள் இதற்குப் பயன்படுகிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் ஒலிப்பதிவி (Sound Recorder) மென்பொருள் உள்ளிணைக்கப் பட்டுள்ளது.

பயன்பாட்டு மென்பொருட்கள் ( Application software)

 அலுவலகப் பயன்பாடுகள் , வரைகலை பயன்பாடுகள் , போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காக  மென்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பட்டு  வணிக நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் , அடோப் நிறுவனத்தின் தயாரிப்புகள்  உலகத்திலேயே மிகவும் அதிகமான கணினிகளில் பயன்படுத்தப் படுகிறது. இவற்றிற்கு மாற்றாக கட்டற்ற திற மூல மென்பொருட்கள் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தல் மென்பொருள்கள்

               அறிவியல் கற்றல் கற்பித்தலில் பல்வேறு வணிக , இலவச மென்பொருள்கள் உள்ளன . இதன் ஒரு பகுதியாக  அறிவியல் உருவகப்படுத்துதல் (Science simulations )மென்பொருள்கள் பயன்படுகின்றன. இவ்வகையான உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் Online / Offline முறையில் கிடைக்கின்றன .

அறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆய்வகம் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வல்லவை . இவைகளை உருவாக்க மிகுந்த பணச்செலவு ஆகும் மேலும் அதிக முன் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் ஏன் எனில் ஒரு சிறு தவறும் அதிக பாதிப்பினை உண்டாக்க கூடும் . ஆனால் அறிவியலில் உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் விர்ச்சுவல் லேப் ஆக செயல்படுகின்றன. இவ்வகையான மென்பொருளில் அறிவியல் ஆய்வகத்தில் நாம் செய்து கற்பது போலவே உருவகப்படுத்தும் மென்பொருளில் செய்து கற்க முடியும் இதனால் பொருட்செலவின்றியும் மிக மிக பாதுகாப்பாகவும் அறிவியல் ஆய்வுகளை மாணவர்கள் செய்து பயன் பெற முடியும் . 


மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......


 

Tuesday 26 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 3

,

 

நம்முடை புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்வது எப்படி  ?

முதல் நிலை தேர்வு மெனுவில் Capture எனும் மெனுவின் கீழ் உள்ள  Upload என்பதை தேர்வு செய்தால் கூகுள் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்கு நமது புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்து கொள்ளலாம் .

நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்வது எப்படி ?

நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்யும் முன் ShareX மென்பொருளின் இரண்டாம் நிலை தேர்வு நிலையில் உள்ள Task settings  என்பதில் Screen recorder  screen recording option என்பதை தேர்வு  தேர்வு செய்து அதில் Audio source என்பதில் நாம் கணினியில் இணைத்துள்ள  ஒலி மூலத்தை தேர்வு செய்ய வேண்டும்  அப்பொழுதுதான் திரைப்பதிவில் நாம் பேசும் ஒலியும் சேர்ந்து பதிவாகும் இல்லையெனில் ஒலி பதிவாகாது.

 

நமக்கு வேண்டிய விடியோக்களை திரைப்பதிவினை பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின் அதில் முதல் நிலை தேர்வில் உள்ள


Workflows                 start /Stop screen recording

என்பதை தேர்வு செய்தால் வீடியோ திரைப்பதிவாக பதிவாக தொடங்கும் நம்முடைய   செயல்பாடு முடிந்தவுடன் Stop என்பதை க்ளிக் செய்தால் நம்முடைய செயல்பாடு வீடியோ ஆக சேமிக்கப்பட்டு இருக்கும் .

நம்முடைய புகைப்படம் / வீடியோ எங்கு சேமிக்கப்பட்டு இருக்கும்  ?

ShareX மென்பொருளில் நாம் சேமித்த புகைப்படங்கள் / வீடியோக்களை காண வேண்டும் என்றால்  மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் Screenshot folder என்பதை தேர்வு செய்தால் அந்த folder திறக்கும் அதை நாம் தேவையான இடங்களிலோ அல்லது பெண்டிரைவ் போன்ற சோமிப்பகங்களிளோ சேமித்துக்கொள்ளலாம் .




ShareX மென்பொருளில் மூன்றாம் நிலை தேர்வு மெனுவில் History  என்பதை தேர்வு செய்தால் நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் . மேலும் Image History என்பதை தேர்வு செய்தால் புகைப்படம் சார்ந்து நாம் செய்த அனைத்து செயல்களின் History அங்கே சேமிக்கப்பட்டு இருக்கும் .


 ShareX மென்பொருளின் சிறப்பியல்புகள் 

ShareX மென்பொருளில் பல்வேறு சிறப்பியல்பு மென்பொருள் கருவிகள் உள்ளன . நாம் திரைப்பதிவாக சேமிக்கும் புகைப்படங்களை இமேஜ் எடிட்டர் மூலம் அழகாக்கி கொள்ளலாம்  . மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறப்பியல்பு கருவிகள் உள்ளன .                                                                                                                                        நமக்கான குறுக்கு விசைகளை (Shortcut keys) உருவாக்கி கொள்வது எப்படி ?

ShareX மென்பொருளில் செயல்புரியும் போது குறுக்குவிசைகளை உருவாக்கி கொள்வது  நாம் செய்யும் செயல்கள் விரைவாகவும் எளிதாகவும் அமையும் குறுக்கு விசைகளை பெற இரண்டாம் நிலை தேர்வு மெனுவில் Hot key settings என்பதை தேர்வு செய்தால் குறுக்கு விசைகளை அமைத்துக்கொள்ளலாம்

ShareX மென்பொருளில் செயல்புரியும் போது மென்பொருளின் Settings களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள  Task key settings உதவுகிறது . மென்பொருளின் பல்வேறு settings களை நாம் நம் விருப்பம் போல மாற்றியமைத்துக்கொள்ளலாம் .

விலை கொடுத்து வாங்கினாலும் கிடைக்காத பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த இலவச மொன்பொருள் ShareX  இல்  கிடைக்கின்றன . இந்த வசதிகள் மூலம் நாமே மிக மிக எளிதாக கல்வியல் சார்ந்த நமது சொந்த வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம் .


Part-1 

Part-2

Wednesday 20 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 2

,

 

ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து   பதிவிறக்கம் செய்து நமது கணினில் பதிவு(Instal) செய்து விட்டால் போதுமானது நமது கணினினியின் திரையினை திரைப்பதிவாக பதிவு செய்து கொள்ள முடியும் . இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது மற்றும் மிக குறைந்த அளவு    7 MB நினைவக கொள்ளளவு உடையதால் விரைவாகவும் எளிதாகவும் பணியாற்ற முடியும்  . 


ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முதலில் கூகுளில் ShareX என தட்டச்சு செய்து தேட வேண்டும்  அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை ளிக் செய்தால் ShareX எனும் மென்பொருளின் அதிகாரபூர்வ தளத்திற்கு நாம் அழைத்து செல்லப்படுவோம்  அங்கே வின்டோஸ் , லினக்ஸ் , போன்ற கணினி இயக்க சூழலுக்கு ஏற்றவற்றை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்  .

Download link

நமது கணினியில் ShareX எனும் மென்பொருளினை டவுன்லோட் செய்த பிறகு அதை இன்ஸ்டால் செய்து அதை திறந்தால் கீழ்கண்டவாறு அதன் முகப்பு தோற்றம் கிடைக்கும் இதில் இடது புறம் மெனுகளும் வலது புறம் நாம் மாற்றியமைக்க கூடிய குறுக்கு விசைகளும் இருக்கும் . 

இதில் மூன்று தேர்வு நிலைகளில் மெனுக்களும் சப்மெனுக்களும் உள்ளன .  இதில் முதல் நிலை தேர்வில்





v Capture

v Upload

v Workflows

v Tools

இரண்டாம் நிலை தேர்வில்

v After capture Task

v After Upload Task

v Destinations

v Application settings

v Task settings

v Hotkey settings

மூன்றாம் நிலை தேர்வில்

v Screen shots folder

v History

v Image histoy

v News

v Debug

v Donate

v About

ஆகிய மெனுக்கள் உள்ளன . இதில் முக்கோண வடிவில் உள்ள ஐகானை க்ளிக் செய்து தேர்வு செய்வதின் மூலம் துணை நிலை மெனுக்களை பெறலாம்

v புகைப்படங்களை திரைப்பதிவு செய்வது எப்படி ?

நமக்கு வேண்டிய புகைப்படங்க்ளை திரைப்பதிவினை பதிவு செய்ய முதலில் ShareX மென்பொருளை திறந்து கொள்ள வேண்டும் பின் அதில் முதல் நிலை தேர்வில் உள்ள


Capture    -     Full screen 

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture       Window

என்பதை தேர்வு செய்தல் கடைசியாக செயல்பட்ட செயல்களின் விண்டோக்கள்  இருக்கும் அதில் நமக்கு தேவையானவற்றை செலக்ட் செய்தால் அந்த விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture   -   Monitor  

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோ புகைப்படமாக சேமிக்கப்படும் .


Capture         Region 

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . .


Capture  -     Region  (Light)

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம் நமது புகைப்படத்தின் பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்


Capture    -   Region  ( Transparent )

என்பதை தேர்வு செய்தல் நம்முடை ஆக்டிவ் விண்டோவின் நமக்கு தேவையான பகுதியை  புகைப்படமாக சேமித்துக்கொள்ளலாம் . இம் மெனுவின் சிறப்பம்சம்மும் நமது புகைப்படத்தின் பின்புறங்கள் நீக்கப்பட்டு இருக்கும்

மீண்டும் அடுத்த பகுதியில் தொடருவோம்.....

 

 

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates