திங்கள், 28 ஜூலை, 2014

இடைவெளி

,
உனக்கும் 
எனக்குமான
இடைவெளியியை
நினைவுகளால்
நிரப்பிக்கொள்கிறது

காதல்.

சனி, 10 மே, 2014

பாஸ்பரஸ் - உயிரைக்குடிக்குமா ? உயிரின் ஆதாரம்

,
வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு அறிவியல் பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நம்முடைய தினசரி வாழ்விலும்  பல்வேறு உள்நாட்டு போர்களில் எதிரிகளை அழிக்கவும் பயன்படுத்தும் பாஸ்பரஸ் நம்முடைய உயிரின் அடிப்படை சாராம்சம் உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்வோம் .

பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை


பன்னெடுங்காலாமாகவே உலோகங்களை தங்கமாக்கும் இரசவாத முயற்சிகள் நடைபெற்று வந்து இருக்கின்றன குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் இம்முயற்சிகள் அதிகரித்தன . ஐரோப்பிய வியாபாரியான ஹென்னிங் பிராண்ட்டும் இம்மாதிரியான இரசவாத முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார் 1969 ஆண்டில் சிறுநீரை சுத்தப்படுத்த ஒரு தாதுப்பொருளை போட்டு காய்ச்சிக்கொண்டு இருந்தார் .குடுவையின் அடியில் படிந்திருந்த பொருள் பசும்மஞ்சள் ஒளியில் மின்னிக்கொண்டு தீடீரென தீப்பிடித்து எரிந்தது . ஆச்சரியப்பட்டுப்போனார் ஹென்னிங் . ஹென்னிங் பாஸ்பரஸை கண்டுபிடித்த பின்னும் சற்றேறக்குறைய  ஒரு நூற்றாண்டுக்குபின் ஜேம்ஸ் ரெட்மேன் கால்சியம் பாஸ்பேட்டையும் மணலையும் கலந்து மின் அடுப்பில் எரித்து பாஸ்பரஸ் உருவாக்கும் முறையை கண்டறிந்தார் . 

உயிரின் ஆதாரம்

நமது உயிரின் ஆதாரமான புரோட்டோபிளாசத்தின் மையப்பொருள்  பாஸ்பரஸ்தான்  DNA மற்றும் RNA வில் உள்ளவை பாஸ்பேட் சர்கரைகள் ஆகும் . நமது உடலில் 85 % பாஸ்பரஸ் எலும்புகளிலும் மீதி இரத்தம் , நிணநீர், இதயம், சிறுநீரகம் மூளை, தசை என அனைத்து உறுபுகளிலும் காணப்படுகிறது . பாஸ்பரஸ் இல்லை எனில் சிந்திக்கும் திறன் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் . மேலும் செல்சுவர் பலமடையவும் உடல்வளர்ச்சிக்கும் பாஸ்பரஸ் மிகமுக்கியமானதாகும்

வகைகளும் பயன்களும்

நமது புவியின் மேலோட்டில் இயற்கையாக கிடைக்கும் தனிமம் இதில் பல வகைகள் காணப்பட்டாலும் வெண்பாஸ்பரஸ் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது . வெண்பஸ்பரஸ் நச்சுத்தன்மை கொண்டது எளிதில் தீப்பற்றக்கூடியது , நீரில் கரையாது எனவே  வெண்பாஸ்பரஸ் நீருக்குள்தான் வைத்திருக்கப்படுகிறது . சிவப்பு பாஸ்பரஸ்  எளிதில் தீப்பற்றாது அதிக நச்சுத்தன்மையும் கிடையாது  . சிவப்பு பாஸ்பரஸ் தீக்குச்சி தயாரிப்பில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது மேலும் பட்டாசு தயாரிப்பிலும் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது
கண்ணாடியில் பாஸ்பரஸ் கலக்கப்பட்டு சோடியம் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது , கடின நீரை மென்நீராக்க பாஸ்பரஸ் பயன்படுகிறது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உரங்களாக பயன்பட்டு வருகிறது  பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் பயன்படுகிறது அலோபதி மருந்துகளில் பாஸ்பரஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . 

பாஸ்பாரஸ்சின் வேறுமுகம்

பல்வேறு ஆக்கச்செயல்களுக்கு பயன்பட்டாலும் பாஸ்பரஸ் ஒரு உயிர்க்கொல்லி ஆயுதாமாகும் அமெரிக்கா ஈராக்கின் மேல் பாஸ்பரஸ் குண்டுகளை போட்டது உங்களுக்கு நினைவு இருக்கிறதா  நண்பர்களே ? பாஸ்பரஸ் மனித உடலில் பட்டு எரியத்துவங்கிவிட்டால் சதை எரிந்து எலும்பு மட்டுமே பாக்கி என்ற நிலையில்தான் அனையும் பாஸ்பரஸ் தீயை அணைப்பது அவ்வளவு சுலபமல்ல
பல்வேறு உள்நாட்டு போர்களில் புகைமூட்டத்தை உருவாக்கவும் எதிரிகளை  அழிக்கவும் இராணுவ வீரர்களின் வேதியியல் ஆயுதமாக பயனப்டுகிறது என்றாலும் பல்லாயிரக்கனக்கான அப்பாவி பொதுமக்களையும் பஸ்பமாக்கியிருகிறது பாஸ்பரஸ்

படங்கள் உதவி : கூகுள்

புதன், 5 மார்ச், 2014

CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி ?

,
பென்டிரைவில் தகவல்களை எளிதாக சேமிக்க முடிவதோடு  தேவை இல்லாத போது அதை அழித்து விட்டு வேறு தகவல்களை சேமித்துக்கொள்ளலாம் என்பதால் இன்றைய தொழில்நுட்ப உலகில் பென்டிரைவ் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது 1GB, 2GB என ஆரம்பித்து 1TB , 2TB என சேமிப்பகங்களின் கொள்ளளவு அதிகரித்து கொண்டே செல்கிறது சரி வாருங்கள்  நாம் CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி என்று அறிவோம் .

CD / DVD ஆனது Read only Memory எனப்படும் ROM வகையைச்சார்ந்தது அதில்  நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் ஒரு முறை தகவல்களை எழுதிவிட்டால் அதை அழிக்க முடியாது ஆனால் அதை எத்தனை முறை வேண்டுமானலும் படித்துக்கொள்ளலாம் . Read and Write எனப்படும் CD / DVD களும் கிடைக்கின்றன ஆனால் அவற்றின் விலை மிக அதிகம்
நாம் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD யை பொன்டிரைவ் போல பயன்படுத்த போகின்றோம் .

பென்டிரைவ்கும் CD / DVD க்கும் ஒரு வித்தியாசம் உண்டு பென்டிரைவ்வில் நாம் வெட்ட(Cut) ,  நகலெடுக்க (Coppy ) , ஒட்ட (Paste  ) தகவல்களை அழிக்க முடியும் ஆனால் CD / DVD யிலிருந்து நகலெடுக்க மட்டுமே முடியும் நமது  CD / DVD களிலும் பென்டிரைவ் போல வெட்ட,ஒட்ட,நகலெடுக்க தகவல்களை அழித்தல்  போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும் அதில் தகவல்களை எழுத நீரோ போன்ற மென்பொருட்களும் தேவை இல்லை  இந்த செயல்பாடுகளை செய்வதற்கு உங்களிடம் வின்டோஸ் 7 அல்லது வின்டோஸ் 8 ஆபரேட்டிங்சிஸ்டம் இருக்க வேண்டும் . 

நீங்கள் புதிய CD / DVD யை உங்களது டிரைவில் போட்ட உடனே
பின்வரும் புதிய வின்டோ திறக்கும்  இதில் Burn files to disc என்பதை தேர்வு செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்
அதில் Like a USB Flash Drive என்பதை தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களது CD / DVD ஆனது Formatting ஆக தொடங்கும் சில வினாடிகளுக்குப்பிறகு பின்வரும் விண்டோ திறக்கும் அவ்வளவுதான் நன்பர்களே உங்களது CD / DVD ஆனது பென்டிரைவ் போல மாறிவிட்டிருக்கும்  இனி உங்களாது CD / DVD யில் Cut ,Copy, Paste போன்ற செயல்களை செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்களாது CD / DVD யில் இருக்கும் தகவல்களை அழித்துவிட்டு(delete) மீண்டும் புதிய தகவல்களை எழுதிக்கொள்ள முடியும்   இந்த செயல்களை செய்யத்தானே அதிக செலவு செய்து பென்டிரைவ்களை வாங்குகின்றோம்  மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD க்களிலே இந்த செயல்களை செய்து கொண்டால் பென்டிரைவ் வாங்கும் செலவு மிச்சந்தானே அதுமட்டுமில்லாமல் பென்டிரைவ் இல்லாத சிக்கலான சூழ்நிலைகளில் CD / DVD யை பென்டிரைவ் போல பயன்படுத்திக்கொள்ளலாம் பயன்படுத்தி பாருங்கள் நன்பர்களே . உங்களுக்கு பயன்பட்டால் சமூக வலைதளங்களில் பகிருங்கள்.


ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி

,
வணக்கம் நண்பர்களே MS Word- இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள் . நான் ஏற்கனவே MS Word – இல் கணித சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி எனும் பதிவிட்டு இருந்தேன் அதையும் ஒரு முறை படித்துவிட்டு தொடருங்களேன் .
படித்துவிட்டீர்களா மேற்கண்ட  பதிவு MS Word  2003 க்கானது MS Word  2007 மற்றும் அதற்கு பின் வரும் MS Word  பதிப்புகளில் Insert மெனுவில் Equation மற்றும் Symbolஎனும் இரு தேர்வுகளின் மூலம் கணித குறியீடுகளை உள்ளீடு செய்யலாம்  சரி வாருங்கள் MS Word –இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி என்றும் அறிந்து கொள்வோம்.  
முதலில் MS Word  ஐ திறந்து கொள்ளுங்கள் , பின்பு உங்களது கணினியில்  Accessories  மெனுவின் கீழே  Math Input Panel      என்பதை தேர்வு செய்தால் கணிதகுறியீடுகளை உள்ளீடு செய்ய புதிய செயலி ஒன்று திறக்கும் அதில் உங்களது Mouse ஆல் கணித குறியீடுகளை வரைந்தால் போதும் அந்த குறியீடு தோன்றும் அந்த செயலியின் கீழே Insertஎனும் வசதி இருக்கும் அதை கிளிக் செய்தால் MS Word –இல் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் . பயன்படுத்தி பாருங்கள்  சந்தேகம் வந்தால் பின்னூட்டமிடுங்கள்


வியாழன், 20 பிப்ரவரி, 2014

உங்கள் கணினியில் Automatic update ஐ நிறுத்துவது எப்படி

,
நமது கணினியில் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல்கொண்டு பல்வேறு மென்பொருட்கள்  Automatic update ஐ கொண்டிருக்கும் எனவே நாம் இணையத்தில் இணையும் போதெல்லாம் நமக்கு தெரியாமலே Automatic update நடைபெறும் . இதனால் நமது Internet Data  காலியாகிவிடும் சில சமயம் crack மென்பொருட்களை பயன்படுத்தும் போது அது Automatic update ஆகி நாம் பயன்படுத்தும் மென்பொருள் போலி என சொல்லும்  இத்தகைய பிரச்சனைக்ளை தவிர்க்க நாம் நம் கணினியில் Automatic update ஐ நிறுத்திவிட்டால் இத்தகைய பிரச்சனைகள் வராது .
கணினியில் Automatic update ஐ நிறுத்துவது எப்படி

உங்களது கணினியின் Start மெனுவிற்கு மேலே உள்ள Search பாரில் Services  என டைப் செய்யுங்கள் Services மெனு  திறக்கும் அதில் Background intelligent Transfer service எனும் செயல்பாட்டினை கிளிக் செய்தால் இடதுபுற பேனலில் Start மற்றும் Stop எனும் செயல்பாடுகள் இருக்கும் அதில் Stop என்பதை தேர்வு செய்தால் உங்களது கணினி Automatic update ஆவது நிறுத்தி வைக்கப்படும் மேலும் இந்த Services  மெனுவில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் பட்டியலும் இருக்கும் அந்த பொருளை  Stop செய்தால் அம் மென்பொருள் Automatic update ஆவதும் நிறுத்திவைக்கப்படும் .பயன்படுத்தி பாருங்கள் சந்தேகம் வந்தால் பின்னூட்டமிடுங்கள்
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates