Showing posts with label எச்சரிக்கை செய்திகள். Show all posts
Showing posts with label எச்சரிக்கை செய்திகள். Show all posts

Sunday, 8 January 2023

உங்களுக்கு கார் லோன் இருக்கா ? அப்படின்னா இதை கண்டிப்பா தெரிஞ்சுக்குங்க

,

நம்மில் பெரும்பாலானோர் கார் வாங்குவது வங்கிக்கடன் பெற்றுதான். கையில் ரொக்கமாக இருந்தால் கூட குறைந்த வட்டி விகிதம் காரணமாக லோனில் கார் வாங்குவோரையும் நான் கண்டுள்ளேன். கார் லோன் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்?

வங்கிக் கடனில் கார் வாங்கியிருந்தால் அதன் ஆர்.சி புத்தகத்திலேயே அது பதியப்பட்டிருக்கும். Hypothecated to ***** bank என. இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் அப்படித்தான் இருக்கும். இது எதற்காக என்றால் கடன் பெற்ற வங்கிக்குத் தெரியாமல் காரை விற்கவோ, டோடல் டேமேஜ் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யவோ கூடாது என்பதற்காக. லோன் முழுவதுமாக கட்டி முடித்த பின் பலரும் சோம்பேறித்தனம் காரணமாக இவற்றை நீக்க மறந்துவிடுகின்றனர். இதனால் திடீரென விற்க நினைக்கும் போதோ, இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யும் போதோ பிரச்சனையில் வந்து முடிகிறது. கடைசி இ.எம்.ஐ கட்டி முடித்த பிறகு வங்கியில் லோன் கணக்கை முடித்து NOC தருவார்கள். அதனுடன் இமெயில் வெரிபிகேசன் ஒன்றும் அனுப்புவார்கள். இந்த NOC 90 நாட்கள் செல்லுபடியாகும். அதற்கு முன்பாக ஆர்டிஓ அலுவலகம் சென்று பழைய ஆர்.சி, இன்சூரன்ஸ், NOC, இமெயில் வெரிபிகேசன், வாகன மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அனைத்தையும் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டும். பிறகு சில நாட்களில் ஆர்சி புத்தகத்தில் (அட்டையில்) வங்கியின் பெயர் நீக்கப்பட்டு நாம் மட்டுமே முழு முதலாளி ஆகிவிடலாம். அடுத்து இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் போது மறக்காமல் ஏஜண்ட்டிடம் கூறி அதிலும் வங்கிப் பெயரை நீக்க வேண்டும்.
NOC வாங்கி 90 நாட்களை கடந்துவிட்டால் மீண்டும் 500 ரூபாய் பணம் கட்டி புது NOC வாங்கலாம். அதன் வேலிடிட்டியும் 90 நாட்கள் தான்.
நிறைய பேர் இதை மறந்து, விற்கும் போதோ அல்லது விபத்திற்கு பிறகோ அவசர அவசரமாக அலைவதைப் பார்க்கிறோம். சில இடங்களில் வங்கியும் NOC அனுப்புவதில்லை, நாம் தான் நினைவில் வைத்து போய் கேட்டு வாங்க வேண்டும். எனவே லோன் முடிந்த உடன் முதல் வேலையாக ஹைபோதிகேசனை நீக்கிவிடவும்.

Saturday, 29 October 2011

அனைத்துவகை மொபைல்களுக்கும் அவசர கால எண்கள் தெரியுமா ?

,

அனைத்து வகை மொபைல்களுக்கும் பொதுவான அவசர கால எண்கள் உள்ளது . உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே  இந்த எண்களினை  டயல் செய்தால் போதும் அந்த அவசர அழைப்பு அருகில் உள்ள காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு  தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது . இந்த அவசர அழைப்பு செய்ய மொபைல்லில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை , மேலும் மொபைலின் கீ பேட் பூட்டி (லாக் ஆக) இருந்தாலும் இந்த எண்களினை டயல் செய்ய முடியும் சிக்னல் சரிவர கிடைக்காத நேரத்திலும்  இந்த எண்கள் சிறப்பாக செயல்படும்
 அனைத்து மொபைல்களுக்குமான 
 அவசர  கால எண்கள்  112 & 911


ஆபத்து காலங்களில் 112 & 911
 என்ற எண்களினை டயல் செய்து பாதுகாப்பு பெறுங்கள்

Sunday, 9 October 2011

அரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD

,

தமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாளர்களும் பெற்றோர்களும் தற்போது  தவிக்க ஆரம்பித்து விட்டனர் . இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளி மாணவர்களிடையே  வேகமாக பரவ ஆரம்பித்து இருக்கும் 50 ரூபாய் ஆபச DVD தான் மிக முக்கிய காரணம்
ஒரு காலத்தில் ஆபசபடங்களை காணுவது என்பது குதிரை கொம்பு ஆனால் கணிப்பொறியும் இணையமும் கை கோர்த பிறகு ஆபச படங்களை காணுவது எளிதானது மொபைலும் மெமரி கார்டும் கைகோர்த பிறகு கதையே மாறிவிட்டது . இந்நிலையில்  இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அரசு லேப்டாப்பில் கோலோச்சப்போகிறது 50 ரூபாய் ஆபச DVD
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச்சேர்ந்த மாணவ மாணவியர் சேலம் மற்றும் நாமக்கல்லில் உள்ள  தனியார் பள்ளிகளில் அதிக அளவில் பயின்று கொண்டு உள்ளனர்  . இம்மாணவர்களை குறி வைத்து ஆபச DVD தயாரிக்கும் கும்பல் ஒன்று 50 ரூபாயில் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆபச குறும்படங்கள்  அடங்கிய டிவிடிகளை விற்பனைக்கு விட்டுள்ளது . விற்பனையோ சக்கை போடு போடுகிறது  மேலும் தமிழகாம் முழுவதும் காவல் துறையின் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு கனஜோராக கல்ல கட்ட காத்து இருக்கிறது  இக்கும்பல் .
ஒரு தனியார் பள்ளியில் சில மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து கும்பலாக ஆபச வீடியோக்களை மொபைலில் பார்த்துள்ளனர் இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளது சில நிமிட சந்தோஷத்திற்காக விட்டில் பூச்சிகளைப்போல் வாழ்கையை தொலைத்துள்ளனர்  அந்த மாணவ மாணவியர் .
அரசு லேப்டாப் எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு தலைவலி அரசு லேப்டப்பில் இணைய  இணைப்பு கொடுத்து விட்டால் விடலைகள் யாருமற்ற  தனிமையை பயன்படுத்திக்கொண்டு  சாட்டிங்கில் ஆரம்பித்து  ஆபச வீடியோக்களை டவுன்லோடிங் செய்வது வரை சும்மா புகுந்து  விளையாட ஆரம்பித்து விடுவார்கள் .
அரசு கொண்டுவந்த மிக உயரிய திட்டம் மிக மிக மோசமான பின் விளைவுகளை  சமுதாயத்தில் ஏற்படுத்தி விடும்
நமது மாணவச்செல்வங்கள்  ஆபச படு குழியில் விழாமலிருக்க கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகள்

* இலவச லேப்டாப் பதினோறாம் வகுப்பு சேரும் மாணவ மாணவியருக்கு இலவசமாக தரும் போது அதை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது . பள்ளியிலேயே இலவச லேப்டாப் இருக்க வேண்டும் +2 முடிக்கும் போது வீட்டுக்கு எடுத்து சென்றுவிடலாம் என திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

* பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் லோப்டப்  செயல்பாடுகளை கண்காணிக்கச்செய்ய வேண்டும்

* தகுந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி போதனை செய்யப்பட வேண்டும்

* மாணவர்களுக்கு  ஒழுக்க கல்வியை போதிக்கும் விழுமக்கல்வி முறை பரவலாக்கப்பட வேண்டும்

* காவல் துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் லேப்டாப் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் தவறான பாலியல் வீடியோக்கள் லேப்டாப்பில்  இருப்பது அல்லது டெலிட் செய்தது  கண்டு பிடிக்கப்பட்டால் லேப்டாப் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்

* வீடியோ ஷோரூம்கள் மற்றும் மொபைல் ஷாப்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்  ஆபச டிவிடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் மிக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

* பள்ளி மாணவர்களை தவிர்த்து  கல்லூரி மாணவ , மாணவியருக்கு  மட்டும் இலவச லேப்டாப் கொடுத்தால் வயது முதிர்ச்சியின் காரணமாக ஆக்கச்செயல்பாடுகளுக்கு மட்டும் பாயன்படுத்துவர்.
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates