வெள்ளி, 1 ஜூலை, 2011

மயிலிறகும் பொண்வண்டும்.....

,
பிள்ளையர் எறும்புகளும்
பெருமாள் பூச்சியும்
சொல்வதில்லை மழை
திசையை !
மயிலிறகும் பொண்வண்டும்
குட்டி போடுவதில்லை !
ஓட்டாஞ்சில்லும்
அஞ்சாங்கல்லும்
அனாதையாக கிடக்கின்றன !
பூச்சான்டிகளே தெரியாமல்
குறுந்தகவல்களில்
தொலைந்து போனது
குழந்தைதனம்.


0 கருத்துகள் to “மயிலிறகும் பொண்வண்டும்.....”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates