Thursday 21 July 2011

நிலாவில் இருந்து மின்சாரம் – சாதிக்குமா ? ஜப்பான்

,
   

மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மின்சாரத்தின் பயன்பாடும் நீண்டுகொண்டு வருகிறது . நாம் வழக்கமாக தயாரிக்கும் முறைகளில் நமது தேவை தீர்ந்து விடுவதில்லை .எனவே மாற்று மரபு சாரா மின்சக்தி மூலங்களாக காற்று ,சூரியன் ,அலைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம் .மேலும் அணு சக்தியிலிருந்தும் மின்சாரம் எடுத்து வருகிறோம் .இதை நீங்கள் அறிந்ததுதான் .


                                                                        


மின்சாரம் தாயாரிப்பில் புதிய புரட்சியாக ஜப்பானை சேர்ந்த ஷீமிஷீ கார்பரேஷன் என்ற நிறுவனம் நிலவில் இருந்து மின்சாரம் தயாரித்து அதை பூமிக்கு அனுப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது . நிலவில் அதிகப்படியாக விழும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தாயாரிக்கப்போவதாக கூறியுள்ளது . நிலாவின் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை பூமியில் பெற அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாகவும் கூறியுள்ளது . இதனால் ஜப்பானுக்கு போட்டியாக உலக நாடுகளும் இறங்கக்கூடும் . மொத்தத்தில் உலகின் மின்சார தேவை தன்னிறைவு அடைந்தால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தானே.

2 comments to “நிலாவில் இருந்து மின்சாரம் – சாதிக்குமா ? ஜப்பான்”

  • 22 July 2011 at 00:25
    Anonymous says:

    பயனுள்ள பதிவு ...தொடர வாழ்த்துக்கள் ...

  • 25 July 2011 at 19:17
    Guru says:

    Thanks Nanpare ungalilin karuthai yetrukkolkiren.Thanks Nanpare ungalilin karuthai yetrukkolkiren.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates