சனி, 2 ஜூலை, 2011

பிரபஞ்ச மர்மத்தை தேடும் நவீன அறிவியல்

,
நாம் வாழும் பூமி உருவான விதத்தை அறிய அறிவியல்  அறிஞர்கள் பல நெடுங்காலமாக் முயற்ச்சித்து வருகின்றனர். அந்த முயற்சியில் புதிதாக அணுக்களோடு அணுக்கள் மோத செய்து செயற்கையாக பிரளயம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பூமி தோன்றிய விதத்தை கண்டுபிடிக்க போகிறார்கள் Large Hadron Collider – LHC எனப்படும் ‘மகா செயற்கை பிரளயம்’ உருவாக்கப்போகிறார்கள்.
                                                      
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்து சிதறியதாகவும் பின் அதிலிருந்து அணுக்கள் தோன்றியதாகவும் , அணுக்கள் இணைந்து கிரகங்களும் அதில் உயிரினங்களும் தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.ஆனாலும் அணுக்கள் இணைந்து திடபொருளாக மாறியது எப்படி ? அணுக்களை இணையச்செய்த பொருள் எது விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை .இதற்க்கு விடை காணத்தான் பிரான்ஸ் அருகே ஜெனீவாவில் 27 கி.மீ நீளம் கொண்ட குழாய் வடிவிலான மையம் அமைத்து அதற்க்குள் அணுக்களை மோத செய்து செயற்கை பிரளயம் ஏற்ப்படுத்த போகிறார்கள்.
குழாயின் இரு முனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட்டன்கள் நிறுவப்பட்டுள்ளது .மணிக்கு 1600 கி.மீ வேகத்தில் இவைகள் மோதும் போது பெரிய அணுகுண்டின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இயற்கையை வெல்ல போவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் பொறுத்து இருந்து பார்ப்போம் வெல்லப்போவது விஞ்ஞானிகளா அல்லது இயற்கையா என்று.

1 கருத்துகள்:

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates