Monday 28 November 2011

மனித உடம்பில் உள்ள பயோகிளாக் என்பது என்ன ?

,

            சிலர் உறங்க போகும் முன் அதிகாலையில் விரைவாக எழுந்திருக்க  அலாரம் வைத்துக்கொண்டு படுப்பார்கள்  நாளடைவில் அலாரம் தேவையில்லாமலே குறிப்பிட்ட நேரம் ஆனது எழுந்து கொள்வார்கள்  இதற்கான காரணம் மனிதரில் காணப்படும்  Bio clock System எனப்படும் உயிரியல் கடிகாரம் ஆகும் .   இந்த  உயிரியல் கடிகாரமானது சீரான இயக்கம் நடைபெற்றால் அதற்கு ஒத்திசைவாக  இயங்க ஆரம்பிக்கும் இந்த கால ஒழுங்கை பயாலஜிக்கல் ரிதம் என்று அழைக்கப்படுகிறது .
மனித உடம்பில் காணப்படும் Bio clock System அமைப்பை பற்றி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹால்பெர்க் என்ற  விஞ்ஞானி முதன் முதலில் கண்டுபிடித்தார் தினந்தோறும் ஒழுங்குபடுத்தும் கால அளவை circardian Rhythm   என்றும் ஒவ்வொரு மணிதோறும்  ஒழுங்குபடுத்தும் கால ஒழுங்கை chrno Biology Rhythm எனப்படும்
மனிதருக்கு மட்டுமில்லை விலங்குகள் , பறவைகள் போன்றவைகளிலும்   Bio clock System  காணப்படுகிறது இதனால்தான் கோழிகள் அதிகாலையில் தினமும் சரியாக கூவுகின்றன 

Sunday 20 November 2011

பூக்களில் இத்தனை நிறங்களா – அறிவியல் விளக்கம்

,

கற்பனைக்கே  எட்டாத  நிறங்களில் மலர்ந்து  சிரிக்கும் வண்ண வண்ண பூக்களின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை ஆனால் பூக்களின் வண்ணங்களுக்கான அறிவியல் காரணம்  யாருக்கும் தெரிவது இல்லை வாருங்கள்  நண்பர்களே பூக்களின் நிறங்களுக்கான அறிவியலை அறிந்து கொள்வோம்.

பூக்களின் பல்வேறு நிறங்களுக்கு காரணம் ஆந்தோசயனின் எனும் நிறமி ஆகும் . ஆந்தோசயனின்( ஆந்தோபூ  சயனின்நீலம் )  என்பது  சர்க்கரைப்பகுதி இணைந்த ஒரு கரிமச்சேர்மம் இது .பூக்கள், கானிகள், இலை, வேர் என தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது . 1920-களில் சர் ராபர்ட்  ராபின்சனும் அவரது குழுவும் ஆந்தோசயனின்  நிறமிகளை மூன்று வகைப்படுத்தினர் அவைகள் 
1.பெலார்கோனிடின் , 2.சயனிடின் ,3.டெல்பினிடின் ஆகும்  
ஆந்தோசயனில்  ஹைட்ராக்ஸில்  தொகுதிகள் எனப்படும் OH தொகுதிகளின் எண்ணிக்கை , பினைக்கப்பட்ட இடம் , வினையில்  ஈடுபடுவதற்ககான திறம் ஆகியவற்றைப்பொருத்து  நீலம், ஊதா, சிவப்பு , மஞ்சள் என பூக்களின் நிறங்கள் அமைகின்றன.

1943 –இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பூக்களின் நிறங்களுக்கும் உலோகங்களுக்குமான  தொடர்புகள் ஆராயப்பட்டது பூக்களின்  நீல நிறத்திற்க்கு காரணம்  அலுமினியச்சத்துகள், ஊதா நிறத்திற்க்கும் , சிவப்பு நிறத்திற்க்கும் காரணம் இரும்புடன்  சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட உலோகங்கள் காரணம் என கூறப்பட்டது . மேலும்  தாவரங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிறங்கள் மூலம் அறிந்து அதற்கு தகுந்த  நடவடிக்கை  எடுத்தால்  தாவரங்கள் செழித்து வளரும் எனவும் கூறப்பட்டது.

ஒரு பூவில்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆந்தோசயனின்கள் இருக்கலாம் மேலும் குளோரோபில்கள்  போன்ற  அரோமேட்டிக் கரிமச்சேர்மங்கள் இருக்கலாம் . ஆந்தோசயனின்கள் அரோமேட்டிக் கரிமச்சேர்மங்களுடன் இணைந்து  பல்வேறு நிறங்களில் பூக்களை பூக்கச்செய்கின்றன மேலும் பருவகாலமாற்றங்கள் , மரபியல் மாற்றங்கள் போன்றவற்றால்  ஆந்தோசனிகள் மாற்றங்களுக்கு உட்படுகின்றன . ஆந்தோசயனின்களை குரோமோட்டோகிராபி  எனப்படும் வண்ணபகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவற்றின் வேதிக்கட்டமைப்பினை  அறியமுடியும்  இதனால் புதிய புதிய வண்ணங்களில் பூக்களினை பூக்கச்செய்ய முடியும். பூக்களின் அழகில் மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள் , வண்டுகள்  போன்றவைகளும் கவரப்படுகின்றன இதனால் தாவரங்களில் அயல்மகரந்தச்சேர்க்கை  நடைப்பெற்று தாவரங்களின்  இனப்பெருக்கத்திற்கு  ஆந்தோசயனின்கள்  உதவுகின்றன

Tuesday 15 November 2011

மொபைல் போன்களுக்கான புதிய தமிழ் பிரௌசர்

,

அனைத்து மொபைல்களிலும் செயல்படும் தமிழில் மெனுக்கள் அடங்கிய புதிய தமிழ் பிரௌசரினை BOLT வழங்கியுள்ளது . மொபைலில் ஓபராமினி பிரௌசர் மூலம் தமிழ் தளங்களை காணமுடிந்தாலும்  முழுவதுமான கணினி அனுபவத்தை தருவது இல்லை ஆனால் BOLT வழங்கியுள்ள     BOLT Indic தமிழ் பிரௌசர் மூலம் பிரௌசிங் செய்வது கணினி அனுபவத்தை தருகிறது மேலும் இது தமிழில் மெனுக்கள் அடங்கியுள்ளதால்  பிரௌசிங் செய்ய ஆங்கில அறிவு தேவையில்லை தமிழ் தெரிந்த  யார் வேண்டுமானாலும்  இனையத்தை பயன்படுத்தி பயன் பெற முடியும்  இதன் கூடுதல் சிறப்பம்சம் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய மொழிகளையும் ஆதரிக்கிறது
BOLT Indic   இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள்
 அனைத்து ஜாவா மொபைல்களிலும்  சிறப்பாக இயங்கும் BOLT Indic பிரௌசரினை www.boltbrowser.com அல்லது www.getjar.com  தளம் சென்று BOLT Indic  பிரௌசரினை நேரிடையாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் BOLT Indic.jad என்ற ஜாவா எக்ஸிகியூஸன்  பைல் டவுன்லோட் ஆகும் . இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் .
BOLT Indic  இல் தமிழ் மொழியினை ஆக்டிவேட் செய்யும் முறை

BOLT வழங்கும் BOLT Indic  பிரௌசரினை இன்ஸ்டால் செய்தால் அதில் மெனுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும் பின்பு Menu என்பதை தேர்வு செய்து பின்பு Option என்பதனை தேர்வு செய்ய வேண்டும் கிடைக்கும் சப்மெனுவில் language என்பதினை தேர்வு செய்தால் கிடைக்கும் இந்திய மொழிகளில் Tamil  எனபதினை  தேர்வு செய்ய வேண்டும்  இவ்வாறு செய்த  உடனே அனைத்து மெனுக்களும் தமிழில்  தெரிய ஆரம்பிக்கும் . மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க BOLT Indic ஒரு மிகச்சிறப்பான பிரௌசர் ஆகும் .

Monday 14 November 2011

அறிவியல் அலசல் - ரசவாதம் மூலம் தங்கம் பெறமுடியுமா ?

,

சித்தர்களின் காலத்திலிருந்தே ரசவாதம் எனும் உலோக மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள்  நிலவிவந்தன அதனால்தான் பாம்பாட்டி சித்தர்
செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம்என்று பாடியிருக்கிறார் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு  ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் செயற்கையாக தங்கம் பெறமுடியுமா என ஆராய்ந்து வந்துள்ளனர்.

அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வழி வகுத்த ரூதர்போர்டு , ரான்ட்ஜென், ஹென்றிபெக்குரோல் போன்றோர் அணுக்களை பற்றிய தெளிவான கருத்துகளை கூறினர் இதன் மூலம்  ஓர் உலோக அணுவினை மற்றொரு உலோக அணுவாக மாற்ற முடியுமா  என அறிவியல் நோக்கில் ஆராயதொடங்கினர் இருந்தாலும் ஆரம்பக்காலங்களில் அதற்கு தேவையான கருவிகள் இல்லாததால்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம்  ஏற்படவில்லை  .

எந்த ஓரு அணுவின் உள்ளும்  எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் என மூன்று அடிப்படைத்துகள்கள் உள்ளன.எலெக்ட்ரான்கள் எதிர் மின்சுமை பண்பும், புரோட்டான்  நேர்மின்சுமை பண்பும் , நியூட்ரான் மின்சுமையற்றும் இருக்கும் . புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து உட்கருவை தோற்றுவிக்கின்றன. உட்கருவை எலெக்ட்ரான்கள் சுற்றுகின்றன   எலெக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான்  ஒவோரு உலோகத்திற்க்கும் வேறுபடும்  இவைகள்தான் ஒரு உலோகத்தின் பண்பினை தீர்மானிக்கிறது 

அறிவியல் நோக்கில் ஒரு உலோகத்தை தங்கமாக மாற்றுவது  எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள்  நண்பர்களே
லெட்  எனப்படும் காரீயத்தின் உட்கருவின் எடை (அணு எடை) 207  ஆகும் இதில் 82 புரோட்டான்களும்  125  நியூட்ரான்களும் உள்ளன . சைக்க்ளோட்ரான்  எனும் கருவியின் துனை கொண்டு   உட்கருவினைச்சிதைத்து 3 புரோட்டான்களும்  சில நியூட்ரான்களும் வெளியேற்றிவிட்டால் 79 புரோட்டானகளும் அதற்கு இனையான  நியூட்ரான்களும் கொண்ட  தங்க அணு கிடைத்து விடும் இவ்வாறு உலோக மாற்றம் செய்யும் போது சில கதிரியக்க ஐசோடாப்புகளும் கிடைக்கும் இவற்றை மாசு நீக்கி சுத்தம் செய்வதற்க்கு மிக மிக அதிக செலவாகும் சுருங்க சொன்னால் ஒரு கிராம் தங்கம் பெறுவதற்கே  சில  இலட்சரூபாய்கள்  செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பூமியின் சுரங்கங்களில்  இருந்து தங்கம் வெட்டி எடுத்து சில ஆயிரங்களில் கிடைக்கும் போது சில இலட்சங்கள் செலவு  செய்து தங்கம் உருவாக்குவானேன்  என நீங்கள்  நினைப்பது  எனக்கு தெரிகிறது நண்பர்களே . அலுமினியம் அறிமுகம் ஆன போது அதை பணபலம் மிக்க  செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் பொருளாக இருந்தது ஆனால் இன்று அலுமினியம் பாத்திரங்களின் பயன்பாடும் மின்சாதன பொருட்களின் பயன்பாடும்  என அலுமினியம்   ஏழை எளிய மக்களின் தோழனாக விளங்குகிறது .

உலோகமாற்றச்சோதனைகள் இப்போதுதான் அறிவியல்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறது.  யாருக்கு தெரியும்  வருங்காலங்களில் இத்துறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள்  ஏற்ப்பட்டால் உற்பத்தி செலவு குறைந்து தங்கம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாகவும் மாறக்கூடும்   ஆம்  நண்பர்களே  அறிவியல் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates