திங்கள், 31 அக்டோபர், 2011

உயிரோவியம்

,

உனக்கான
என் கவிதையை
எங்கோ
படித்த மாதிரி
இருக்கிறது என்கிறாய்  ….!
இல்லையடி இல்லை
பார்த்த மாதிரி
என்று சொல்
தினந்தோறும் கண்ணாடியில்
உன்னைதானே
பார்த்து கொள்கிறாய் ....!

சனி, 29 அக்டோபர், 2011

அனைத்துவகை மொபைல்களுக்கும் அவசர கால எண்கள் தெரியுமா ?

,

அனைத்து வகை மொபைல்களுக்கும் பொதுவான அவசர கால எண்கள் உள்ளது . உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே  இந்த எண்களினை  டயல் செய்தால் போதும் அந்த அவசர அழைப்பு அருகில் உள்ள காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு  தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது . இந்த அவசர அழைப்பு செய்ய மொபைல்லில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை , மேலும் மொபைலின் கீ பேட் பூட்டி (லாக் ஆக) இருந்தாலும் இந்த எண்களினை டயல் செய்ய முடியும் சிக்னல் சரிவர கிடைக்காத நேரத்திலும்  இந்த எண்கள் சிறப்பாக செயல்படும்
 அனைத்து மொபைல்களுக்குமான 
 அவசர  கால எண்கள்  112 & 911


ஆபத்து காலங்களில் 112 & 911
 என்ற எண்களினை டயல் செய்து பாதுகாப்பு பெறுங்கள்

புதன், 26 அக்டோபர், 2011

தண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா ? சர்வரோக நிவாரணியா ?

,சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர் . ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் தண்ணீர் விட்டன் கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர் .

வளரியல்பு
அல்லி குடும்ப(Lilliaceae) தாவரமான தண்ணீர் விட்டான் கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும் வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும் நுனி கிளைகளே  இலைகளாகவும் உருமாறியுள்ளன  முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை , வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர்தன்மையும் கொண்டவை .வேர்கிழங்குகள் மூலமாகவும் , விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணாப்படுகிறது வடமொழியில் சதாவரி என்று அழைக்கப்படுகிறது
தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு
தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணாப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவ குணங்கள்
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்கசெய்கிறது, உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும் . பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப்பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகுதாவரம் தண்ணீர்விட்டன் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்கவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது அழகிற்காக வளர்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை

தண்ணீர் விட்டான் கிழங்கு 
ஆரோக்கிய பானம் தயாரிப்பு
நான் கூறப்போகும் ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி இடித்து சாறு எடுக்க வேண்டும் ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்கரை கலந்து காலையில் பருக வேண்டும்  இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் 

திங்கள், 24 அக்டோபர், 2011

கிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்

,
புத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக  இருந்துவரும் வழக்கம் .தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்விரும்பப்படுவது மூன்று வகைகள் ஆகும்
1.கிரீன் டீ
2.ஊலாங்
3.பிளாக் டீ
கிரீன் டீகேமிலியா சைனன்ஸிஸ்  எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது .கிரீன் டீயில் ஆறுவிதமான பாலிஃபீனால்கள் உள்ளன அவைகள்
1.எபிகேட்சின்
2.கேலோகேட்சின்
3.கேட்சின்
4.எபிகேட்சின் கேலட்
5.எபிகேட்சின்கேலோகேட்சின்
6.எபிகேலோ கேட்சின்
மேலும் கேஃபின் , தியோபுரோமின் , தியாஃபிலின் போன்ற ஆல்கலாய்டுகளும் உள்ளன  இவைகள் மனித உடலுக்கு புத்துணர்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாக உள்ளன . கிரீன் செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறியியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்படுவது ஆகும்  .
விஞ்ஞானிகள் பரிந்துரைத்த சில பரிந்துரைகள்
வாழ்நாளை அதிகப்படுத்த
கிரீன் டீயில் அதிகமாக காணாப்படும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்கச்செய்கிறது
 உடல் எடையை குறைக்க
உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது
நினைவுத்திறன் அதிகப்படுத்த
கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின்  மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவற்றலை பெருக்குகிறது
புற்று நோய்களுடன் போராடுகிறது
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்று நோய்செல்களை வளரவிடாமல் அழிக்கிறது தீங்கிழைக்கும் என்சைம்களின் வளர்ச்சியை தடுத்து ரத்தப்புபுற்று, நுரையீரல் புற்று, தொண்டைபுற்று, வயிறு,குடல்,ஈரல் புற்று மற்றும் மார்கப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது
சர்கரை நோயை குறைக்க
கிரீன் டீயில் உள்ள தியோபிளவின்கள் இரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்துகிறது
மன அமைதிக்கு
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் மன இறுக்கத்தை போக்கி மூளையில் ஆல்பா அலைகளை தூண்டி மனதுக்கு அமைதியை தருகிறது
தோல் பாதுகாப்பு
முகப்பரு, வறன்ட சருமம், சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் தருகிறது
இரத்த அழுத்தம், பக்கவாதம் அல்சைமர்  போன்றவற்றை தவிர்க்கிறது  எலும்புகள் பலமடையவும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் செய்கிறது
டிஸ்கி – 1
உண்மைதாங்க நானும் ஆறு மாதமாய் கிரீன் டீ குடிக்கறேன் எனது உடலின் ஆரோக்கிய மாற்றங்கள் எனக்கே புரிகிறது அதனாலதான் இந்த பதிவையே போட்டேன் இந்த பதிவை படிச்சுட்டு நீங்களும் கிரீன் டீ குடிக்க ஆரம்பிச்சு உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆரம்பிச்சா அதுதான்  இந்த  பதிவின் உண்மையான வெற்றி  . வாழ்க வளமுடன்


 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates