மரபணுக்கள் பரம்பரை பண்புகளை ஒவ்வொறு தலைமுறைக்கும் கொண்டு செல்கிறது .இந்த மரபணுக்குள்ளேதான் உயிரின் இரகசியம் ஒளிந்துள்ளது இந்த மரபணுக்குள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை புரதசத்தாக மாற்றி அதை பல மடங்கு பெருக்குபவைதான் “ரிபோஸோம்” இவைகள்தான் மனித உடலின் புரத தொழிற்சாலை
ரிபோஸோம்கள் 1950 இல் ஜார்ஜ் பலேட் என்ற அறிஞரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட்து .ரிபோஸோம்கள் அளவில் மிக மிக சிறியது .இதன் அளவு சுமார் 20 நானோ மீட்டர்( ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு)
ரிபோஸோம்களில் ஒவ்வொறு அணுவும் எங்கே எந்த திசையில் உள்ளன என்பதை 2009 இல் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி இராமகிருஷ்னன் உள்ளிட்ட மூவர் குழு கண்டுபிடித்தது
தற்போது ரிபோஸோம்களின் முழுவரைபட பட்டியலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை எதிர்க்கும் உயிர்காக்கும் தாயாரிக்கப்பட உள்ளது
மேலும் வருங்காலத்தில் குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே குறைபாடுகள் உள்ள மரபணு மாற்றப்பட்டு நல்ல உடல் ஆரோக்கியமிக்க குழந்தைகள் பெற முடியும்