திங்கள், 22 அக்டோபர், 2012

திசைமாறும் பறவைகள் அறிவியல் விளக்கம் - வலைசைபோதல்

,

பண்டைய தமிழர்கள் ,கிரேக்கர்கள்,ரோமானியர்கள், எகிப்தியர்கள் பறவைகளை செய்தி அனுப்ப பயன்படுத்தி வந்தனர் பறவைகள் வலசைபோதலைப்பற்றி நமது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்வோம் .
பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் 
பூமியின் வடதுருவத்தில் தோன்றிய பறவையினம் பிளிஸ்டோசின் காலத்தின் இறுதிப்பகுதி வரை வசித்தபின்  அங்கே பனிக்கட்டிகள் தோன்றிய பூமியின்  தென் அரைக்கோளத்திற்கு சென்றுவிட்டு வடதுருவத்தில் பனி குறைந்தபின் மீண்டும் வடதுருவத்திற்கு திரும்பின
மீண்டு திரும்பும் பறவைகள்
பறவைகள் அற்புதமான வழியறியும் உயிரினம் ஆகும் வலசை செல்லும் பறவைகள் சூரியன், காற்றுவீசும் திசை ,நிலக்குறியீடுகள், நிலா , நட்சத்திரங்கள் , புவியீர்ப்புவிசை , பூமியின் காந்தப்புலம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள்  வலசை சென்றுவிட்டு மீண்டும் தன் வாழிடத்திற்கே திரும்புவது அதிசயமான ஒன்றுதான்
பறக்கும் வேகம் – டாப்ளர் ரேடர்
வலசை செல்லும் சில வகை பறவைகள் மணிக்கு 90 கி.மீ தூரத்தை கடக்க கூடியன  வலசை பறவைகளின்  வேகமானது டாப்ளர் ரேடார் மூலம் கணக்கிடப்படுகிறது . ஒலி மூலத்தின் சலனத்தாலோ காற்றின் சலனத்தாலோ ஒலியின் அதிர்வெண்ணில் மாறுதல் ஏற்படுவது போல தோன்றுவது டாப்ளர் விளைவு ஆகும் இதன் அடிப்படையில் அமைந்தது டாப்ளர் ரேடார் ( டாப்ளர் விளைவினை மிக எளிதாக விளங்கி கொள்ள  புகைவண்டி நிலையத்தில் நிலையாக நிற்பவரை நோக்கி வரும் புகைவண்டியின் ஊதல் ஒலி அருகில் வர வர அதிகமாகும் அதை போலவே புகை வண்டி விலகிச்செல்ல செல்ல ஊதல் ஒலி குறைந்து கேட்கும் )
வலசை போக காரணம்
பறவைகளின் சிற்றினங்களுக்குள் ஏற்படும் உணவு, எல்லை , கூடுகட்டுமிடம்  ஆகிய காரணங்களுக்காக போட்டிகள் ஏற்படுகின்றன எனவே வேறு இடங்களுக்கு இடம்பெயரும் தேவை ஏற்படுகிறது மேலும் சூழல்மாற்றம் , காற்றுதிசைமாற்றம் ஆகியவை பறவைகள் வலசை செல்ல தூண்டுகின்றன  பறவைகள் வலசைசெல்வது  மரபியல்படி அவைகளுக்கு உதவுகிறது  அதிகதூரம் பயணிக்கும் பறவை குளிர்கால வாழிடங்கள் , மிதவெப்ப நாடுகளில் பல்வேறு இனப்பெருக்க பகுதிகளை தேர்ந்தெடுக்கிறது  அங்கு நிலவும் வெவ்வேறு சூழல் மற்றும் தகவமைப்பு பகிர்வுகளினல் திடீர்மாற்றம் ஏற்பட்டு  புதிய இனங்கள் தோன்றி பரிமாண வளர்ச்சி வீதம் அதிகரிக்கிறது
பறவைகள் வலசை செல்வதை அறியும் முறைகள்
பல்வேறு வகையான பறவையினங்கள் இரவுநேரத்திலும்,பகல்நேரத்திலும்  வலசைபோகின்றன பனிமூடிய சிகரங்கள் , பெருங்கடல்கள் வழியே செல்லும் அவற்றை ஆய்வு செய்வது கடினம் ஆனாலும் ரேடியோடெலிமெட்ரி முறையிலும் , பறவைகாலில் வளையமிடுதல் முறையின்மூலமும் பறவைகள் வலசைபோதலை அறிவியல் அறிஞர்கள் கண்டறிகின்றனர்
ரேடியோடெலிமெட்ரி என்பது பறவையின் கழுத்துப்பகுதியில் மிகநுண்ணிய டிரான்ஸ்மீட்டரை பொருத்தி பறவைகள் பறந்து செல்லும் பகுதிகளை ரீசிவர் மூலம் கண்காணித்தல் ஆகும் .
பறவை காலில் வளையமிடுதல் முறை என்பது பரவலாக அனைத்து நாடுகளும் பின்பன்றும் ஒரு முறையாகும் வண்ண பிளாஸ்டிக் வளையங்களில் எண், நாடு, நிறுவனப்பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அதை பறவையின் காலில் கட்டி விடுகின்றனர் வண்ணவளையமிடப்பட்ட அயல்நாட்டுப்பறவைகள்  வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு இரு நாடுகளின் வலசை ஆய்வு மையங்கள் தகவலை பறிமாற்க்கொள்ளுகின்றன . அமெரிக்காவின் லாரல் மற்றும் மேரிலாண்ட் நிறுவனம் 30 மில்லியன்  வண்ணவளைய தகவல்களை பதிவு செய்துள்ளது  இந்தியாவில் பறவையியல் நிபுணரான டாக்டர் சலீம் அலி அவர்களின் தலைமையில் மும்பாய், ராஜஸ்தானின் பரத்பூர் , மற்றும் தமிழ்நாட்டின் கோடியக்கரை  போன்ற பகுதிகளில் வண்ணவளையங்களை ஆய்வு செய்ய ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட்டன . பல தன்னார்வ பறவையாளர்கள் உலகெங்கும் பறவை வலசைபோதலை ஆராய்ந்து வருகின்றனர் .


ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பிரியங்களில் ஒளிந்திருக்கும் பிரிவுகள்

,

காமம் தின்ற
பின்னிரவின்
கடைசி வினாடியை
நீளச்செய்யும்.....
உன் பிரியங்களில்
ஒளிந்திருக்கிறது
என்னை உதாசீனப்படுத்தும்
போது உதிர்க்கும்
வார்த்தைகள் !

காற்றில் அலையும் பித்தனின் மொழி

,

போகுமிடமெல்லாம்
அந்தரத்தில் கையையாட்டியபடி
காலத்தின் பக்கங்களில்
தன் வாழ்வை
கிறுக்கிச்செல்லும்
பித்தனின்
மொழி
காற்றிலெங்கும் அலைகிறது
மனிதத்தின் முகவரி
தேடி

திங்கள், 1 அக்டோபர், 2012

Tower of Hanoi - கணிதப்புதிர்

,

நண்பர்களே நாமது குழந்தைகள் செய்து மகிழ மிகவும் சுவையான கணிதப்புதிர் விளையாட்டினை பார்ப்போம் இந்த புதிர் இந்தியாவின் காசி நகரை மையமாக வைத்து தோன்றியது

நிலையாக நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று குச்சிகள் உள்ளது அதில் ஒரு குச்சியில் ஒரு சிறு தட்டு அதன் மேல் சற்று பெரிய தட்டு அதன் மேல் இன்னும் கொஞ்சம் பெரிய தட்டு என வரிசைகிரமமாக ஏறு வரிசையில் அமைந்த சில தட்டுகள் உள்ளது இப்போது புதிர்  என்னவெனில்
மேலிருந்துதான் தட்டுக்களை  வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி  எடுக்க கூடாது.
ஒருமுறை ஒரு தட்டை மட்டும்  எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும்.
பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது .
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் அடியில் உள்ள பழுப்பு மிக பெரிய தட்டு நீலம் அதைவிட சிறியவை நீல தட்டும் மஞ்சள் தட்டும் கடைசியில் உள்ள சிவப்புதட்டு எல்லாவற்றையும் விட மிக மிக சிறியது முதலில் சிவப்புத்தட்டினை எடுத்து காலியாக உள்ள இரண்டு குச்சிகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தவேண்டும் அடுத்தபடியாக மஞ்சள் தட்டினை எடுக்க வேண்டும் மஞ்சள்தட்டினை சிவப்புதட்டின் மீது பொருத்த முடியாது  ஏன் எனில் மஞ்சள் தட்டினைவிட சிவப்புதட்டு சிறியது எனவே மீதி காலியாக உள்ள குச்சியில் பொருத்த வேண்டும் . இப்பொழுது நீல தட்டினை  எடுக்க முடியாது ஏன் எனில் நீலத்தட்டினை எடுத்து எதன் மீதும் பொருத்த முடியாது மஞ்சளும், சிவப்பும் நீலத்தட்டினைவிட சிறியது.  எனவே மிகச்சிறிய சிவப்பு தட்டினை எடுத்து அதைவிட பெரிய தட்டான மஞ்சள் தட்டின் மேல் வைக்க வேண்டும் இப்பொழுது நீல தட்டினை  எடுத்து காலியாக உள்ள குச்சியின் மேல் பொருத்தலாம் மீண்டும் இதே வழிமுறையை தொடர வேண்டும் .

இந்த புதிருக்கான தீர்வு 2n – 1 கணித சூத்திரம் ஆகும்
மூன்று தட்டுகள் எனில்  7 நகர்தல்களில் அதே வரிசை கிரமத்தில் மற்றொரு இடத்தில் நகர்த்த வேண்டும்
 23-1=8-1=7
 நான்கு தட்டுகள்  எனில் 15 நகர்தல்களில் செய்ய வேண்டும் மூன்று அல்லது நான்கு தட்டுகள் இருந்தால்   எளிமையாக செய்யலாம் ஆனால் தட்டுகளின்  எண்ணிக்கை அதிகரித்தால்  இதை செய்வது கடினம் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நகர்தல்களில் செய்ய முடியும்

பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை !

,

அதிகாரவர்க
சாக்கடைப்புழுக்களின்
சல்லாபதேவைக்கு
காக்கிச்சட்டைகளால்
ஜனநாயகம்
கதற கதற
கற்பழிக்கப்படுவதால்
பாதசாரிகளின் கவனத்திற்கு
கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை .
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates