இயற்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் , எந்த ஒரு வடிவிலும் கணிதம் ஒளிந்துள்ளது அந்த வகையில் தேன்கூட்டில் ஒளிந்திருக்கும் கணிதம் பற்றி சிறிது அறியலாம் . தலை சிறந்த பொறியாளரைப்போல் தேனீக்கள் கட்டும் ஒழுங்கு அறுகோணமுள்ள தேன் கூட்டைப்பற்றி பரிமாணவியலின் ஒப்பற்ற அறிஞர் சார்லஸ் டார்வின் என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.
“இந்த கட்டமைப்புக்கு மேல் மேலும் வியப்புதரும் வடிவத்தை இயற்கை தன் படிமலர்ச்சியில் உருவாக்கியதே இல்லை”
பிற கணிதவியல் உருவங்களை விட ஒழுங்கு அறுகோணத்தை தேனீக்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?
கணிதவியல் முறைப்படி சிறிது கூட இடைவெளி இல்லாமல் தளத்தை நிரப்ப மூன்று சிக்கனமான வடிவங்கள்தான் உள்ளது
1.சமபக்கமுக்கோணம்
2.சதுரம்
3.ஒழுங்கு அறுகோணம்
தேனீக்கள் இந்த மூன்று வடிவங்களில் இருந்து ஒழுங்கு அறுகோணத்தை தேர்ந்தெடுத்ததை கணிதவியல் பரப்பளவு ரீதியாக சற்று அலசி பார்ப்போம்
சமபக்க முக்கோணத்தில் ஒருபக்க அளவு = 1/3 செ.மீ ஆகும்
எனவே சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு = 0.096
சதுரத்தில் ஒரு பக்க அளவு = ¼ செ.மீ ஆகும்
எனவே சதுரத்தின் பரப்பளவு = 0.0625
ஒழுங்கு அறுகோணத்தில் ஒரு பக்க அளவு = 1/6 செ.மீ
எனவே ஒழுங்கு அறுகோணத்தில் பரப்பளவு = 0.072
மேற்கண்ட மூன்று பரப்பளவுகளில் ஒழுங்கு அறுகோணத்தின் பரப்பளவே அதிகமாக உள்ளது எனவெ ஒழுங்கு அறுகோணத்தில் அதிக தேனை சேர்த்து வைக்க முடியும் எனவே தேனீக்கள் கூடுகட்ட ஒழுங்கு அறுகோண வடிவத்தை தேர்ந்தெடுத்து உள்ளது
ஒழுங்கு அறுகோணத்தை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணமும் உள்ளது அது மெழுகு பயன்பட்டு சிக்கனம்தான் ஏனைய வடிவங்களை விட ஒழுங்கு அறுகோணத்தில் கூடு கட்டினால் மெழுகு குறைவாக பயன்படுகிறது.
தேன் கூட்டில் உள்ள மெழுகில் இருந்து அல்கேன்கள்,அமிலங்கள் ஈஸ்டர்கள் ,பாலியீஸ்டர்கள் போன்ற 284 சேர்மங்கள் உள்ளன.
தேன்கூட்டில் ஒன்றின் பின்புறத்தே ஒன்றாக அமைந்த அறுகோணப்பட்டகங்களில் உள்ள சிறு சிறு கண்ணறைகள் 130 பாகை கோண அளவில் மேல் நோக்கிச் சரிந்தபடி அமைந்துள்ளதால் தேன் கீழே கொட்டாமல் பாதுகாக்கப்படுகிறது
ஒரு தேர்ந்த பொறியாளரைப்போல் கணிதவியல் முறைப்படி கூடுகட்டும் திறமை தேனீக்களுக்கு இயற்கை தந்த பரிசு.