வெள்ளி, 1 ஜூலை, 2011

முகம் தொலைந்த முகவரிகள்

,
* நடை மறந்த ஒடைகள்
நாங்கள்
கசப்பு கழிவுகள் . 
* விடை தொலைத்த வினாக்கள்
நாங்கள்
இருட்டின் வெளிச்சங்கள் .
* தலையெழுத்து பிழையெழுத்தான பிரதிகள்
நாங்கள்
சபிக்கப்பட்ட சத்தியங்கள் .
* விதியின் விளையாட்டு பொம்மைகள்
நாங்கள்
குரலை தொலைத்த குயில்கள் .
* முகம் தொலைந்த முகவரிகள்
நாங்கள்
சிவப்பு விளக்கு சீதைகள் .

0 கருத்துகள் to “முகம் தொலைந்த முகவரிகள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates