புதன், 26 டிசம்பர், 2012

ஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download

,

    நண்பர்களே BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது  நல்லவேளை  இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன் மூலம் வாங்காமல்  டீலரிடம் வாங்கியிருந்தேன் அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து தந்தார் அவரிடம்  அந்த OS யை பென்டிரைவில் காப்பி செய்து தருமாறு கேட்டேன் அவரோ நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும்  தரமுடியாது இது பென்டா டேபிளட் நிறுவனம் தந்தது எனக்கூறிவிட்டார் நானும் டேபிளட்டை  சரி செய்து தந்ததே  போதுமென்று மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன் ஆனால் எனது மகிழ்ச்சி சில மாதம் கூட நீடிக்க வில்லை  . டேபிளட்டில் Game விளையாடிய நண்பரின் மகன் தெரியாமல்  OS  ஐ பார்மெட் செய்துவிட்டான் .எனவே இந்த முறை டீலரிடம் செல்லாமல் இதற்கான தீர்வை இணையத்தில் தேடினேன் நான் கண்ட தீர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே ஒரு சிறு குறிப்பு .
 ஒரு நல்ல Card Reader இல் 2GB Micro SD மெமரி கார்டினை பொருத்தி USP போர்டினுள் சொருகி விடுங்கள் உங்களது கணினியில் கண்டிப்பாக
 வின்டோஸ் xp இருந்தால் மட்டுமே ஆன்ட்ராய்ட்  OS பெறமுடியும் . வின்டோஸ் 7 இல் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
சரி வாருங்கள் ஆன்ட்ராய்ட் OS பெறும் வழிமுறை அறிவோம்
முதலில் கீழ்கண்ட பதிவிறக்கச்சுட்டிகளின் மூலம் ஆன்ட்ராய்ட் 2.3 OS யினை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்  முதல் பதிவிறக்கச்சுட்டியில் HDMI போர்ட் உள்ள டேபிளட்டிற்கானது  இரண்டாவது பதிவிறக்கச்சுட்டி HDMI போர்ட் இல்லாத டேபிளட்டிற்கானது

ஆன்ட்ராய்ட்  பதிவிறக்கம் செய்து விட்டீர்களா 
உங்களுக்கு WIN Rar ZIP பார்மெட்டில் ஒரு File கிடைத்து இருக்கும் அதை unzip செய்து கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருக்கும் போல்டரை திறந்தால் உள்ளே இரண்டு போல்டர் போல்டர்கள் இருக்கும் அதில் iuw1.2(Tool)எனும் போல்டரை திறந்து கொள்ளுங்கள் அதில் அதில் iuw1.2எனும் .exe பைல் இருக்கும் அதை ரன் செய்யுங்கள் . கீழே உள்ளது போல் ஒரு விண்டோ திறக்கும்

 அதில் Choose on SD card எனுமிடத்தில் நீங்கள் மெமரி கார்டினை USP போர்டினுள் பொருத்தியிருந்தால் Removeable Diskஎன வந்து இருக்கும் தற்போது அதற்கு மேல் pathஎனுமிடத்தில் Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த போல்டரினுள் முதல் போல்டரில் IS701cAndroid .ius என முடியும் Wrapped இமேஜ் வடிவில் இருக்கும் file ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் தற்பொழுது burn எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் ஆன்ட்ராய்ட் os ஆனது உங்களது மெமரி கார்டினில் burn ஆகதொடங்கும் .

 burn completeஎன வந்த பிறகு உங்களது டேபிளட்டில் Micro SD மெமரி கார்டினை சொருகி பவர் பட்டினை ஆன் செய்யுங்கள் அதன் பின்பு டேபிளட் ஸ்கீரீனில் சொல்லப்படும் எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்களது டேபிளட்டினில் ஆன்டிராய்ட் 2.3  os பதிவு செய்து கொள்ளுங்கள் .   சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும் 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்

,
பூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்  செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
பிறப்பும் இளமைபருவமும்
காப்ரேகர் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மும்பாய்க்கு அருகில் தஹானூ என்னுமிடத்தில்  இராமசந்திர தேவகாப்ரேகருக்கும் ,ஜானகிபாய் என்பவருக்கும் மகனாய் பிறந்தார் . தந்தை ஜாதக தொழில் செய்து வந்தாலும் குடும்பம் என்னவோ  ஏழ்மையில் சிக்கிதவித்தது தனது 8 வயதில் தாயை இழந்த காப்ரேகர்  தன் மாமாவின் அரவணைப்பில் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடர்ந்தார்  வகுப்பில் மிக சாதாரண மாணவனான காப்ரேகருக்கு கனித ஆசிரியரை மட்டும் மிகவும் பிடித்து போனது .கணித ஆசிரியரின் புதிர்கணக்குகளும் , சுருக்குவழிகளும் எண்கணிதத்தில்  ஈடுபாட்டை வளரச்செய்தது  தனது தந்தை ஜாதக தொழில்  இருந்ததால் ஜாதக கணிதத்தின் மீதும் ஆர்வம் வந்தது .
ஆசிரியர் பணி
மும்பையின் அருகே உள்ள தேவ்லாலி என்னும் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாராக 1930 முதல் 1962 வரை முப்பதாண்டுகள் பணிபுரிந்தார் 1932 இல் இந்திராபாய் என்பரை திருமணம் செய்து கொண்டார்.  பள்ளியில் கணக்கு ,அறிவியல் ,சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்பித்தார்
கணிதத்திற்கு ஆற்றிய தொண்டுகள்
கணிதத்தில் முதுகலைபட்டம்கூடா பெறாத ஒரு சாதரண பள்ளி ஆசிரியரான காப்ரேகரின் கணித சமன்பாடுகளை கொண்டு இன்று பலர் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்று  வருகின்றனர் .தனது கணித ஆராய்ச்சிக்காக யாரிடம் சென்று உதவி கேட்டதில்லை தனி ஒரு மனிதனாக நின்று கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார் தனது ஆராய்ச்சிக்கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளியிட்டார் .என்கணித குறிப்புகள் பலவற்றை கொண்டு சில நூல்களையும் எழுதியுள்ளார் . விஜயாஎண்கள் , மந்திஎண்கள் , தாத்ரேய எண்கள் ,ஹர்ஷத்எண்கள்,டெம்லோ எண்கள்,பல்வேறு மாயசதுரங்கள் என விளையாட்டுக்கணிதம்எனும் Recreational Mathematics பிரிவில் பல புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் காணுவதிலே தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் . இராமனுஜத்திற்கு ஒரு ஹார்டி தேவைப்பட்டதைப்போல  காப்ரேகருக்கும் ஒருவர் தேவைப்பட்டார் அவர்தான் மார்டின் கார்ட்னர் . பொழுதுபோக்கு கணிதம்எனும் கணித துறையில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் காப்ரேகரை புகழ்ந்து Scientific Americanஎனும் பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதியபிறகுதான் உலகம் முழுவதும் காப்ரேகர் கவனிக்கப்பட்டார்  .ஸ்வீடனில் வெளியான கணித அறிஞர்களின்  பட்டியலில் ஒரு சிறந்த கணித விஞ்ஞானி என போற்றப்பட்டார்
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates