Showing posts with label விந்தை உலகம். Show all posts
Showing posts with label விந்தை உலகம். Show all posts

Saturday, 28 April 2012

ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !

,

1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா ? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்கு  தெரியுமா ? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு  தெரியுமா ?  வாருங்கள்  நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம் .

1828ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதியினர்க்கு மகனாக பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமையை நிலையிலும் இயற்பியல் , வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார் .
தனது 22 ஆம் வயதிலே அதாவது 1850 ஆம் ஆண்டிலேயே பல்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜோசப் ஸ்வான்  கண்ணாடியிலான வெற்றிடக்குழாயில் மெல்லிய கம்பியிலான இழையை(Filament) சூடாக்குவதின் மூலம் ஒளியை பெற முடியும் கண்டறிந்தார் அதிக மின்சாரம் பாய்வதால் கம்பியிலான இழையை சூடு தாங்காமல் அறுந்து அறுந்து போனது  தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத ஸ்வான்  வேறு வேறு உலோகங்களை மெல்லியகம்பி இழையாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்து பார்த்தார் இதே சமயம் தாமஸ் ஆல்வா எடிசன்,  ஹம்பிரிடேவி ,ஜேம்ஸ் பவ்மான்      போன்ற பலரும் பல்பினை கண்டுபிடிக்க ஆராய்ந்து வந்தனர் .

 1875 இல் ஜோசப் ஸ்வான் அதிக மின்தடையை தாங்கும் கார்பன் இழையை கொண்டு பல்பினை தயாரித்தார்  அதை மேலும் மேலும் மெருகேற்றி 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் விஞ்ஞானிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் 1879 ஆம் ஆண்டு ஜனவரி 17 பொதுமக்களுக்கும் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தார் அதை காப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ஆனால் அவரது காப்புரிமை விண்ணப்பம் சரியாக நிரப்பப்படவில்லை என்று அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது அவருக்கு பின்  சற்றேறக்குறைய அவரை போலவே பல்ப் தயாரித்து 1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் வெளியிட்டு தனது செல்வாக்கால் காப்புரிமை பெற்றுக்கொண்டார் ஆனால் ஜோசப்ஸ்வானால் ஏழ்மையாலும் ஆதரவின்மையாலும் எடிசனுடன் போட்டி போட முடியவில்லை  . ஸ்வான் எங்கே தனியே வேறு முறையில் பல்ப் செய்து வரலாற்றில் இடம்பிடித்துவிடுவாரென்று பயந்து ஜோசப்ஸ்வானை தன்னுடன் கூட்டு சேருமாறு அழைத்தார் தன் குடும்ப வருமையை போக்க ஜோசப்ஸ்வான் எடிசனுடன் கூட்டு சேர்ந்தார்  .  பின்னர் பல முயற்சிக்களுக்கு பிறகு எடிசன் டங்ஸ்டனை மின் இழையாக கொண்டு தற்போது  நாம் பயன்படுத்திவரும் எலெக்ட்ரிக்பல்பினை கண்டுபிடித்தது தனி வரலாறு எடிசனை பற்றிய ஒரு வரலாற்று பதிவிடல் செய்யும் போது இதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம் எப்படியோ பல்பினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு நாம் ஜோசப்ஸ்வான் என்று  பதில் கூறுவதில்லை எடிசன் என்றுதான் கூறுகிறோம் தனது செல்வாக்கால் ஜோசப்ஸ்வானுக்கு கிடைக்க வேண்டிய புகழை தட்டி பறித்துக்கொண்டார் தாமஸ் ஆல்வா எடிசன் .

Friday, 27 April 2012

ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?

,
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது கொலை ஆனால் ஒரு இனத்தையே  அழிப்பது ஹாலோ காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது  ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும்  ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது

 ஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும் மகிந்தராஜபக்க்ஷேவும்  ஹாலோ காஸ்ட் செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின் முடிவு ?

Tuesday, 19 July 2011

வண்ணங்களின் வசிப்பிடம்

,
இயற்க்கை அன்னையின் இனையில்லா வண்ணங்களின் அழகு கொட்டி கிடக்குமிடம் “கிராண்ட் கென்யான்” இது அமெரிக்காவின் அரிசேனாவில் இருக்கிறது . இது 446 கிலோமீட்டர் நீளமுடையது . கொலராடோ ஆற்றினால் அது பாய்கிற பீட பூமியை அரித்தெடுத்ததால் உருவானது . பல கிலோமீட்டர் ஆழமுடைய கிராண்ட் கென்யான்னில் பழுப்பு , சாம்பல், சிவப்பு , துளிர்பச்சை , ஊதா என இயற்க்கை தாய் வண்ண வண்ண அடுக்குகளில் பாறைகளை படைத்துள்ளாள்









                                                                        
கிராண்ட் கென்யான்னின் நிலவியல் அமைப்புகளை உலகின் வேறு எந்த பகுதியுடனும் ஒப்பிட முடியாது. கிராண்ட் கென்யான் பாறைகள் சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது



 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates