Sunday, 10 July 2011
தொலையுணர் தொழில் நுட்பம்(Remote Sensing Technology)
Posted by
Guru
,
இருபதாம் நூற்றான்டு தொடக்கம் வரை புவி ஆராய்ச்சியாளர்கள் இயற்கை வளங்களையும் , புவிநிலப்பரப்புகளையும் ஆராய அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது.இதனால் செலவு மிகுதி ,கால விரயம் மற்றும் பல்வேறு இடர்பாடுகளையும் சந்திக்க நேர்ந்தது.ஆனால் தொலையுணர் தொழில் நுட்பம் வந்த பிறகு இருந்த இடத்திலிருந்தே எதையும் ஆராய முடியும் என்ற நிலை வந்துவிட்டது .
ஒவ்வொறு பொருளும் ஒளியை தனக்குள் உள்வாங்கி அதை வெளியிடும்போது தனித்தன்மையுடைய நிறமாலையை வெளியிடுகிறது உதாரனமாக நமது வீடுகளின் காங்கீரிட் சுவர்கள் வெளியிடும் நிறமாலையும் தாவரங்கள் வெளியிடும் நிறமாலையும் வேறு வேறு தன்மைகள் உடையது இதையே ஆதார தத்துவமாக கொண்டு தொலையுணர் தொழில் நுட்பம் உருவாக்கப்படுகிறது . தொலையுணர் தொழில் நுட்பகருவிகள் இரண்டு வகைப்படும்
1.சூரிய ஒளியானது பொருட்களின் மீது பட்டு எதிரொளிக்கும் அலைகளை படமெடுக்கும் கருவி(Passive Remote Sensing Sensor)
2.செயற்கையாக மின்காந்த அலைகளை உருவாக்கி பொருட்களின் மீது படச்செய்து கிடைக்கும் எதிரொளிப்பை படமெடுக்கும் கருவி (Active Remote Sensing Sensor)
தொலையுணர் தொழில் நுட்பம் மூலம் சிறப்பான நகர்பகுதிகளை திட்டமிட முடியும் , வனப்பகுதிகளின் தன்மையை அறிய முடியும் , இயற்கை வளங்கள் கிடைக்கும் பகுதிகளை அறிய முடியும்
வருங்காலத்தை ஆட்சி செய்யக்கூடிய தொழில் நுட்பங்களில் முக்கிய இடத்தில் இருக்கப்போகிறது தொலையுணர் தொழில் நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)