புதன், 28 செப்டம்பர், 2011

கணக்கதிகாரம் - அரசனும் முத்துமாலையும் –கணிதப்புதிர்

,

நமது பழந்தமிழரின் ஒப்பற்ற கணித நூலான கணக்கதிகாரத்தில் இருந்து  அரசனும் முத்துமாலையும் என்ற புதிரை பதிவிடுகிறேன் .
ஒரு அரசனிடம் ஒரு முத்துமாலையும் ஏழு மகள்களும் இருந்தனர் . முத்து மாலையில் 49 முத்துக்கள் இருந்தன . முதல் முத்தின் விலை மதிப்பு ஒரு ரூபாய் ,இரண்டாவது முத்தின் விலை மதிப்பு இரண்டு ரூபாய் ,மூன்றாவது முத்தின் விலை மதிப்பு மூன்று ரூபாய் ……. 49வது முத்தின் விலை மதிப்பு 49 ரூபாய் .
புதிர் என்னவென்றால் அரசன் தன் மகள்களுக்கு 49 முத்துக்களையும் சரிசமமாக பிரித்து தரவேண்டும் மேலும் அனைவருக்கும் முத்தின் விலைமதிப்பு சரிசமமாக இருக்க வேண்டும் . உங்களால் பதில் கூற முடியுமா ? 

ஆண்மையின் வலியறிதல்…

,

உன்னால்
கர்பம் தரித்த
நினைவுகளை
சுமக்கிறேன்
தினம் தினம்
பிரசவ வலியுடன்

சனி, 24 செப்டம்பர், 2011

மழையில் நனைந்தால் காய்ச்சல் வருவதேன் ?

,

என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ? மழையில் நனைந்தால் ஏன் காய்ச்சல் வருகிறது என்று ?

வியாழன், 22 செப்டம்பர், 2011

தலைமுடிக்கு சாயம் போடுவதால் புற்றுநோய் உறுதியா ?

,

தொலைக்காட்சியில் பிரகாஷ்ராஜே சொல்லிட்டார் டையில் அமோனியா இல்லை அதனால் டையை தைரியமாக போடலாம் என்று தலைமுடிக்கு சாயம் போடுபவர நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு இது.

கணக்கதிகாரம் – பச்சோந்தி மரமேறும் புதிர் கணக்கு

,

நமது பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றும் கணக்கதிகாரத்தில் இருந்து மேலும் ஒரு புதிரை பதிவிடுகிறேன்

         “ முப்பத்தி ரண்டு முழம்உளமுப் பனையைத்
          தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்
          சாணேறி நான்கு விரற்கிழியும் என்பரே
          நாணா தொருநாள் நகர்ந்து

ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி  ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒரு நாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை  நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?

விளக்கம்
முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்
12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம்  ஆனது 32*24=768 விரற்கடை ஆகும் .

பச்சோந்தி நாள் ஒன்றுக்கு  12 விரற்கடை ( 1 சாண் ) ஏறி  நாலு விரற்கடை கீழிறங்குகிறது  .எனவே அது  ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.

பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
                 768/8 =96
ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்

டிஸ்கி – 1
கணக்கதிகாரம் என்பது 1862 இல் அச்சுப்பதிப்பாக வெளிவந்த நம் பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றிய நூல்  இதன் ஆசிரியர் காரி நாயனார் 1958 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் மறுபதிப்பு செய்தது   இந்நூலில் 64 வெண்பாக்கள் உள்ளது  .நண்பர்கள் திரு .செந்தில் மற்றும் இ.பு.ஞானபிரகாசம்   இந்த மூல நூலை  பகிர்ந்து கொள்ள சொன்னார்கள் என்னிடம் முழுமையான நூல் இல்லை 10 வெண்பாக்கள் எனக்கு தெரியும் அதைதான் பதிவிட்டு வருகிறேன் மீதி முத்துமாலை புதிர் தெரியும் அடுத்த பதிவாக அதையும் பதிவிடுகிறேன் . முழு நூலையும் பெறுவதற்க்கு முயற்ச்சித்து வருகிறேன்  நூல் கிடைத்த  உடனே அதை மென்நூல் வடிவில் பதிவிடுகிறேன் . நண்பர்களின் கருத்துக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

500 ரூபாய்ல கல்யாணமும் டாஸ்மாக் சரக்கும்

,

தந்தை 1 : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி என் பொண்ணுக்கு கல்யானம் பன்னிட்டேன்
தந்தை 2 : நான் என் பொண்ணுக்கு 500 ரூபாய்ல கல்யாணம் பண்ணிட்டேன்
தந்தை 1 : 500 ரூபாய்ல கல்யாணமா எப்படிப்பா ?
தந்தை 2 : 500 ரூபாய்ல ஒரு மொபைல் வாங்கி கொடுத்தேன் எவன் கூடவே ஓடி போய்ட்டா
 ************************************************************************************************************
கணவர் 1 : உங்களை தினமும் டாஸ்மாக்கில் பார்க்கிறேனே
கணவர் 2 : கவிதாவை மறக்கத்தான் தினம் தினம் குடிக்கறேன்
கணவர் 1 : அடடா உங்களுக்கு காதல் தோல்வியா ? உங்க காதலியை மறக்க முடியலையா ?
கணவர் 2  : அட போய்யா ! காதலி கவிதாவைதான் கல்யாணம் பண்ணியிருக்கேன்

திங்கள், 19 செப்டம்பர், 2011

கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்

,

ஒரு சர்தார்ஜி ரிலாக்ஸாக கடற்கரையில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அப்போது அந்த வழியாக வரும்  ஒரு அமெரிக்கர் கேட்கிறார்
அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?
சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்
சர்தார்ஜி வேறு ஒரு இடத்தில் போய் அமர்கிறார்
அந்த வழியாக வரும்  வேறு அமெரிக்கர் கேட்கிறார்
அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?
சர்தார்ஜி : நோ நோ  ஐ ஆம் ரன்பீர் சிங்
சர்தார்ஜி கடுப்பாகி வேகமாக நடக்கிறார்  கடற்கரை ஓரமாக ஒரு அமெரிக்கர் அமர்ந்து இருக்கிறார்  சர்தார்ஜி அவரிடம் கேட்கிறார்
சர்தார்ஜி : ஆர் யு ரிலாக்ஸ்ஸிங் ?
அமெரிக்கர் : யா ஐ ஆம் ரிலாக்ஸிங்.
சர்தார்ஜி : கொய்யால உன்னைதான்ட ஊரு பூரா தேடறாங்க இங்க என்ன மணியாட்டிக்கிட்டு இருக்க

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates