இருபதாம் நூற்றான்டு தொடக்கம் வரை நியூட்டனின் இயற்பியல் கொள்கைகள் பிரபஞ்சமானது வெளி , காலம் என்ற நிலையான அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது
என்று நம்பப்பட்டு வந்தது . மைக்கேல்சன் – மார்லி சோதனையில் ஒளியானது நியூட்டனின் கொள்கை விதிகளை பின்பற்றவில்லை இதற்கு விளக்கமாக ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சத்தில் தனித்துவம் என்று ஒன்று இல்லை என தமது சார்பியல் கொள்கை மூலம் விளக்கினார்
சார்பியல் கொள்கையை பற்றி அறிய கீழே உள்ள சுட்டியை தட்டுங்கள்
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாட்டின்படி ஒரு பொருளின் பொருண்மை அதன் திசைவேகத்தை சார்ந்தது என்கிறார். விரைவாக ஒரு பொருள் நகர்ந்தால் அதன் பொருண்மையும் அதிகமாகிறது ஒளியின் வேகமே இந்த பிரபஞ்த்தில் உயர் வேகம் அதை எதுவும் மிஞ்ச முடியாது . இதிலிருந்து பொருளும் ஆற்றலும் (matter & energy) சம மதிப்பு உடையன
ஆற்றலின் அளவானது பொருளின் பொருண்மையை ஒளியின் வேகத்தின் இரண்டுமடங்கால் பெருக்கி வரும் மதிப்புக்கு சமம் அதாவது
E = mc2 என்றார் ஐன்ஸ்டீன் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறது இவைகள் தன்னுடைய நாட்டிற்க்கு பாதுகாப்பு என்ற பெயரில் மற்ற உலக நாடுகளை பயமுறுத்த பயன்படுகிறது ஜப்பானில் நடைபெற்ற போரில் அணுகுண்டுகளின் கொடூரம் நாம் அறியாதது அல்ல . அணுவை சிதைத்து மின்சாரம் தாயாரித்து ஆக்க சக்திக்கும் பயன்படுகிறது
Albert instein is a great man. mirracle!