Monday 14 October 2013

பல்லூடக பாதுகாப்பு - Tamil Cyber crime PPT Free download

,


நண்பர்களே  தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமான இணையம் (Internet) மற்றும் அலைப்பேசியின் (MOBILE) தோற்றமும் அதன் துரித வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கின்றது.  பள்ளி செல்லும் மாணவனாயினும் சரி ஓய்வு பெற்ற வயோதிகராயினும் அவர்களின் அன்றாட வாழ்வில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சாதனமாக இணையமும் அலைபேசியும் நிலை நிறுத்தி கொண்டுள்ளது
நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்  எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. ஆனால் இணையத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், எவ்வித தணிக்கை முறையும் மில்லாத ஊடகத்தின் கூர்மையான பக்கங்கள் உங்கள் குழந்தைகளின் வெள்ளை மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தி, தீய வழியில் செலுத்த வாய்ப்பிருக்கிறது பிள்ளைகள் நல்ல மனப்பக்குவமடையும் வரை இணையத்தின் முள்ளில்லா பாதைகளில் கரம் பிடித்து நடை பழக்குவதும் கூட ஒவ்வொரு பெற்றோரின் கடமை தான்  .
சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றி தமிக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த , சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்னும் தலைப்பில் குறுவள மைய பயிற்சிக்காக தயாரித்த பவர்பாயின்ட் பிரசன்டேஷன்  சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள அனைவருக்கும் பயன்பட உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் .



டிஸ்கி 

பல்வேறு வலைத்தளங்களில் இருந்து திரட்டிய தகவல்களின் தொகுப்புதான் இந்த பிரசன்டேஷன் . குறிப்பாக வலைப்பதிவர் சுடுதண்ணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Friday 2 August 2013

தொலைந்து போன வாசகம்

,


தொலைந்து போன
வாசகத்தின்
பகுதியும் விகுதியுமாய்
நீயும் நானும்.........
நிரம்பாமலே போன
இடைநிலையாய்
நம்
காதல் .

Thursday 25 July 2013

TET தேர்வுக்குத்தேவையான 100 இலவச மென்புத்தகங்கள் - Free 100 TET PDF EBook

,


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற முயற்சித்து வரும் நண்பர்களே உங்களுக்காக 100 இலவச மென்புத்தகங்களை பதிவேற்றி உள்ளேன் . இந்த மென்புத்தகங்கள் பல்வேறு வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டதாகும் . நீங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஓர் இடத்தில் தொகுத்துள்ளேன் இதில் உளவியல் , கல்வியியல் , பாடப்பகுதிகள் என அனைத்தும் உள்ளன நீங்கள் ஆதரவு அளித்தால் இதன் தொடர்ச்சியாக TET தேர்வுக்குத்தேவையான 6,7,8,9,10 அனைத்து சமச்சீர் கல்வி நூல்களையும் பதிவேற்றுகிறேன் .

Thursday 9 May 2013

ஹாம்ரேடியோ - உலகெங்கும் இலவசமாய் பேசலாம் வாங்க !

,

நண்பர்களே அலைபேசியும் , இணையமும் ஒன்றினைந்து இன்று உலகை சுருக்கியதால் .உலகெங்கும் ஒரு நொடியில் தொடர்புகொள்ள முடியும் என்பதும் அடித்தட்டு மக்களும் நவீன தொழில்நுட்பத்தை இலகுவாக பயன்படுத்துகின்றனர்  என்பதெல்லாம் நன்கறிந்த விடயம் . அலைபேசியும் , இணையமும் இல்லாமல் உலகெங்கும் இலவசமாய் பேச ஓரு கருவி உள்ளது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா ? மேலும் அக்கருவிக்கு தொலைத்தொடர்பு சிக்னல்கள் தேவையில்லை  என்பதும் உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த அதிசய கருவியான பற்றி அறிவோம்.

ஹாம்ரேடியோ ஒரு அறிமுகம்

ஹாம்ரேடியோ என்பது ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தும் ஒருகருவியாகும் . நிலநடுக்கம் ,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் போது மின்சாரம் , தொலைதொடர்பு ஆகியவை முற்றிலும் முடங்க்கி போகும் அந்த இக்கட்டான சூழ்நிலைகளில் உலகிற்கு தகவல் தகவல்தெரிவிப்பவை ஹாம்ரேடியோ ஆகும் இதனை அமெச்சூர்ரேடியோ எனவும் அழைப்பர் மேலும் இராணுவம், கடல், விமான போக்குவரத்து தீயனைப்புத்துறை,  என பல்வேறு துறைகளில் ஹாம்ரேடியோ பயன்படுகிறது .

ஹாம்ரேடியோ குழுக்கள்

ஹாம்ரேடியோவினை நம்மை போன்ற சாதாரண நபர்களும் பயன்படுத்தலாம் ஆனால் அதற்கு நமக்கு சிறிது எலக்ட்ரானிக் அறிவும் தொலைதொடர்பு ஆணையம் நடத்தும் ஒரு தேர்வினை  எழுதி வெற்றியும் பெறவேண்டும்  ஹாம்ரேடியோவினை பயன்படுத்தும் தனிநபர்கள், குழுக்கள் உலகெங்கும் உள்ளன இவர்கள் தங்க்களுக்குள்  எளிதாக இலவசமாக கலந்துரையாடிக்கொள்கின்றனர் .

ஹாம்ரேடியோ செயல்படும்விதம்

ஹாம்ரேடியோ ஆனது தொடக்க காலங்க்களில் சாமுவெல்மோர்ஸ் கண்டுபிடித்த தந்திகுறியீடுகளின் அடிப்படையில் இயங்கியது தற்பொழுது கணினி மூலம் நவீன டிஜிட்டல் முறைகளில் ரேடியோஅலைக்கற்றைகளை கொண்டு  இயங்குகிறது . வெறும் 2000 செலவில் ஒரு ஹாம்ரேடியோவினை நாமே உருவாக்க முடியும் அல்லது சந்தைகளில் கிடைக்கும் நவீன ஹாம்ரேடியோ சாதனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் . அல்லது இணையத்தில் கிடைக்கும் ஹாம்ரேடியோ மென்பொருள்களை கணினியில் நிறுவியோ பயனபடுத்த முடியும் . ஹாம்ரேடியோவினை நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில் தொலைதொடர்பு ஆணையம் நடத்தும் அந்த சிறு தேர்வினை  எழுதி வெற்றி பெறவேண்டும்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்  ஹாம்ரேடியோ பற்றி மேலதிக தகவலோ அல்லது அதற்கு தேவையான மென்பெருட்களோ வேண்டுமெனில் கூகுளாடி தெரிந்து கொள்க அல்லது கீழே உள்ள சுட்டிகளை கிளிக் செய்து தெரிந்து கொள்க .

பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்

,

பேருந்தின் முன்னிருக்கையில்
பேரிளம் பெண்ணொருத்தி
காமம் தின்ற பேச்சுகளை
துப்பிக்கொண்டிருந்தாள்
அருகிலிருப்பவரோ
அவளின்பால் வீரியமாகி
கொண்டிருந்தார்
அவளோ பேச்சினுடே
சிணுங்கிகொண்டு
அலைபேசி எண்னை 
தெரிந்ததெப்படியென
வினவிக்கொண்டிருந்தாள் ….
தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்க்களில்
சம்மனமிட்டுக்கொள்கிறது
வாழ்க்கை ……
விரைந்து செல்கிறது பேருந்து.

Thursday 21 March 2013

50000 ஃபார்முலாக்களலான CCE E-Register முற்றிலும் இலவசம்

,

ஆசிரிய நண்பர்களே தற்போது நாம் பயன்படுத்திவரும்  முப்பருவ கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடலில்(CCE) மாணவச்செல்வங்களின் நன்னலம் ,யோகா , உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள், கல்வி இணைச்செயல்பாடுகள் , மனப்பான்மைகள் மற்றும் மதிப்புகள் போன்ற பல்வேறு உள்ளார்ந்த திறன்களையும் மதிப்பிட்டு வருகிறோம் இவற்றையெல்லாம்  குறிப்பேடுகளில் பதிய வைத்து பராமரிப்பது மிகவும் கடினம் மேலும் இம்முறையில் உயர் அலுவலகங்களில் இருந்து கேட்கப்படும் படிவங்களை தயாரிக்க நாள் முழுக்க செலவிடவேண்டி உள்ளது இக்குறையை போக்க வந்துவிட்டது முப்பருவ கல்வி முறைக்கான CCE E-Register இதன் மூலம் முப்பருவ கல்வி முறையின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல்(CCE) படிவங்களை மிக மிக எளிதாக தயாரிக்க முடியும்   இது ஒரு ஆசிரிய நண்பரின் அரும்பணி . மைக்ரோசாப்ட் எக்ஸல் வடிவில் அவர் தயாரித்து இருக்கும் இந்த பைலில் 50000 ஃபார்முலாக்களை அவர்  பயன்படுத்தி உள்ளார் அவருடைய வலைத்தள முகவரி www.kalvisms.blogspot.in  CCE E-Register முற்றிலும் இலவசமாக பெற கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்



பதிவிறக்கம் ட்டிசெய்துவிட்டீர்களா ? உங்களுக்கு வின்ரார் வடிவில் ஒரு கோப்பு கிடைத்து இருக்கும் அதை அன்ஸிப் செய்தால்  CCE E-Register  எக்ஸல்வடிவ கோப்பு , அதை பயன்படுத்தும் முறை மற்றும் அதற்கு தேவையான ஃபான்ட் ஆகிய அனைத்தும் இருக்கும் .

டிஸ்கி

இதை வாசிக்கும் நண்பர்களே உங்களது உறவினர்களோ, நண்பர்களோ ஆசிரியராக இருப்பின் அவர்களுக்கு இந்த CCE E-Register கொடுத்து உதவுங்கள்   மேலும் இதை உருவாக்கிய நண்பரின் வலைத்தளத்திற்கு சென்று அவரின் முயற்சிக்கு ஊக்கம் தாருங்கள் அவரின் வலைத்தளத்தில் வருமானவரியை கணக்கிட உதவும் எக்ஸல் வடிவ கோப்பும் உள்ளது பதிவிறக்கி பயன்பெறுங்கள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates