வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அசத்தலான செக்போஸ்ட் IQ புதிர்

,

சென்னையிலிருந்து சேலம் வரை 25 செக்போஸ்ட்கள் உள்ளன .நீங்கள் இரண்டு மூட்டையில் மூட்டைக்கு 25 தேங்காய்கள் வீதம் கொண்டு வருகிறீர்கள் .ஒவ்வொறு செக் போஸ்டிற்க்கும் ஒரு மூட்டைக்கு ஒரு தேங்காய் சுங்க வரியாக தர வேண்டும் . மூட்டையின் கொள்அளவு 25 தேங்காய்கள் மட்டுமே . நீங்கள் புத்திசாலி  எனில் சேலம் வரும் போது உங்களிடம் 12 தேங்காய்கள் வைத்திருக்க முடியுமா ?


முதல் 12 செக்போஸ்ட்களுக்கு ஒரு மூட்டையில் இருந்து இரண்டு மூட்டைக்குமாக இரண்டு இரண்டு காய்கள் கொடுத்தீர்கள் என்றால் 13 வது செக்போஸ்டில் ஒரு மூட்டை காலியாகி அடுத்த மூட்டையில் இருந்து ஒரு காய் எடுப்பீர்கள் .இப்போது உங்களிடம் இருப்பது ஒரு மூட்டையில் உள்ள 24 தேங்காய்கள். மீதி உள்ள 12 செக்போஸ்ட்களுக்கும் ஒவ்வொறு தேங்காய்கள் கொடுத்தீர்களானால் சேலம் வரும் போது உங்களிடம் மீதி 12 தேங்காய்கள் இருக்கும்.

1 கருத்துகள்:

  • 16 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:32

    மூளைக்கு வேலைகொடுத்த பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates