தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபனுக்களை மாற்றம் செய்து பல்வேறு சாதனைகளை விஞ்ஞானம் படைத்திருந்தாலும் முதல் முறையாக கணினி மென்பொருள் மூலம் செயற்கை மரபனுவை வடிவமைத்து செயற்கை இரசாயணங்கள் மூலம் புதிய உயிரி உருவாக்கப்பட்டுள்ளது.
அமொரிக்காவின் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகணங்களில் செயல்படும் ஜே.சி.வி.ஐ என்ற ஆராய்ச்சிக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கணினி மொன்பொருள் உதவியுடன் மைகோபிளாஸ்மா மைகாயிட்ஸ் என்ற பாக்ட்டீரியாவில் மாற்றம் செய்து செயற்கையாக ஒரு பாக்டீரியாவிற்க்கான மரபணுக்கட்டமைப்பை உருவாக்கினர். அதன் பெயர் மைகோபிளாஸ்மா காப்ரிகாலம் ஆகும்.
மைகோபிளாஸ்மா காப்ரிகாலம் என்ற உயிரியின் மரபணு பாரம்பரியம் என்பது கணினிதான் .ஆகவே செயற்கையாக படைக்கப்பட்ட முதல் உயிரினம் மைகோபிளாஸ்மா காப்ரிகாலம்தான் என்று இந்த செயற்கை உயிரியை படைத்திருக்கும் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க்வெண்டர் கூறுகிறார்
செயற்கையாக பாக்டீரியாக்களை உருவாக்க முடியும் என்றால் பல உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்க முடியும் மேலும் உயிரி தொழில்நுட்பத்திலும் மரபணுபொறியலிலும் புதிய வியத்தகு சாதனைகளை படைக்க முடியும் என்று அறிவியல் உலகம் விளக்கம் கொடுத்துள்ளது .
அதே நேரம் சுற்று சூழல் ஆர்வலர்கள் இயற்கைக்கு எதிரான மாற்றங்களை புகுத்த நினைத்தால் உலகம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அறிவியலின் எல்லைகளை எட்டிபிடிக்க ஆரம்பித்துள்ளான் மனிதன் அதற்கான பின் விளைவுகள் நல்லதோ ? கெட்டதோ ? அவன் அனுபவித்துதான் தீர வேண்டும்