சனி, 10 செப்டம்பர், 2011

எரிமலைகுழம்பில் பூமியின் முதல் உயிரினம் ஆர்சியா("Archea" )

,

உயிர்களின் தோற்றங்களை பற்றிய நம்முடைய அறிவியல் சித்தாந்தங்களை  திருத்தி எழுதும் காலம் வந்து விட்டது எரிமலை குழம்பிலும் , கனாடாவின் கொதிக்கும் வெந்நீர் ஊற்றுகளிலும் ஆர்சியா எனும் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் வியப்பின் உச்சியில் உறைந்துபோய் உள்ளனர் உயிர்கள் எப்படி உருவாயின என்ற வினாவிற்க்கு ஆர்சியாவைதான் கை காட்டுகின்றனர்

பிரபஞ்சவெளியில் முதல் பெரு வெடிப்பு நிகழ்ந்த பின் கணக்கிட முடியாதா வெப்பம் பிரபஞ்ச வெளியில் பரவியது பின் பிரபஞ்சம் விரிவடைய ஆரம்பித்ததால் வெப்பம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது பூமியும் ஒரு  நெருப்புகோளமாக சுற்றிக்கொண்டு இருந்தபோது ஆர்சியா என்ற வெப்பத்தில் உயிர் வாழும் பாக்டீரியா தோன்றியுள்ளது பூமி கொஞ்சம் கொஞ்சமாக குளிர தொடங்கியதால் ஆர்சியா  பரிணாம மாற்றம் அடைந்து சைனோபாக்டீரியமாக மாறியது சைனோபாக்டீரியம் ஆனது கார்பன்டைஆக்சைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் அற்புத பண்பை பெற்று இருந்தது காலப்போக்கில் சைனோபாக்டீரியம் சுவாசிக்க தேவையான கார்பன்டை ஆக்சைடு குறைந்து போனதால் ஆக்ஸிஜனையே சுவாசிக்க ஆரம்பித்து ஏரியோபிக்பாக்டீரியமாக மாறியது . நமது  உடலில் இப்போதும் கூட ஏரியோபிக்பாக்டீரியம் உள்ளது என  தற்போது  நிரூபிக்கப்பட்டுள்ளது . நாம் ஆக்ஸிஜனை உட்கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவதால் மனித இனம் ஆர்சியாவில் இருந்துதான் தோன்றியது என அடித்து கூறுகின்றனர்
ஆர்சியாவினால் படைப்பின் ரகசிய முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழும் என அறிவியல் உலகம்  நம்ப ஆரம்பித்துள்ளது  நாமும் நம்புவோம்

4 கருத்துகள் to “எரிமலைகுழம்பில் பூமியின் முதல் உயிரினம் ஆர்சியா("Archea" )”

 • 10 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:00
  stalin says:

  தேங்க்ஸ்...........

 • 10 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:02
  stalin says:

  comment box -ல் word verification ஐ எடுத்து விடவும் .........

 • 10 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:14

  மிக மிக நன்றி ஸ்டாலின் கருத்துரைக்கு சொல்சரிபார்ப்பை நீக்கி விடலாம் என்பது நீங்கள் கூறிய பிறகு செயல்படுத்தி பார்த்து புரிந்துகொண்டேன்

 • 10 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:07

  அருமையான அறிவியல் பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates