நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ATM கார்டுகள் ஏற்ப்படுத்திய தாக்கம் மகத்தானது . தற்போதெல்லாம் ஷாப்பிங்கில் பொருட்களை வாங்குவது கூட ATM கார்டுகளை பயன்படுத்திதான் ஆனால் நமது ATM கார்டுகளின் Balance மற்றும் Ministatement க்காக ATM மையங்களையோ அல்லது ஸ்டேட்பேங்கையோ நாட வேண்டியிருக்கிறது .
ஸ்டேட்பேங் போன்று அனைத்து வகை வங்கிகளும் மொபைல்போங்கிங் என்ற வசதியை நமக்கு இலவசமாக அளிக்கிறது இந்த சிறிய மென்பொருள் உங்களின் பெரிய தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த வசதிமூலம் பேலன்ஸ்தொகை அறியலாம் , பணபரிமாற்றம் செய்யலாம் , மொபைல்போன்களுக்கு ரீசார்ஜ் கூட செய்து கொள்ளலாம் இந்த மொபைல்போங் வசதி சிம்பியான் மற்றும் JAVA உள்ள அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்தலாம் இதை பதிவிறக்குவதற்கான சுட்டி கீழே தரப்பட்டுள்ளது ( ஸ்டேட் பேங்கிற்கான பதிவிறக்கச்சுட்டி) இதை பயன்படுதி தரவிறக்கி உங்களின் மொபைலுக்கு மாற்றி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின் ATM மையத்திற்க்கு சென்று ATM கார்டு செலுத்தி ரிஜிட்ரேசன் பகுதியில் உங்களின் மொபைல் எண்ணினை பதிவு செய்து கொள்ளுங்கள் இல்லை எனில் மொபைல்போங்கிங் வசதி செயல்படாது .
உங்களி மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள மொபைல்போங் மென்பொருளை திறந்து கொள்ளுங்கள் அதில் options எனும் மெனு மூலமாக புதிய யூசர்நேம், பாஸ்வேர்டு பெறுங்கள் அதன் மூலம் லாகின் செய்யும் போது புதிய பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளுங்கள் பின்பு பயன்படத்த துவக்குங்கள்
மொபைல்போங் மென்பொருள் இருவழிகளில் செயல்படக்கூடியது அதாவது இணைய இணைப்பு இல்லாமலும் செயல்படும் இணைய இணைப்பிலும் செயல்படும் இணைய இணைப்பு இல்லை எனில் ஒவ்வொரு செயல்பாடும் சாதாரண SMS வழியாக செயல்படும் ஆகவே ஒவ்வொரு SMS க்கும் பணம் செலவாகும் ஆனால் உங்களின் மொபைல்போங் மென்பொருளின் உள்ளே Settings பகுதியில் change channel என்பதை தேர்ந்தெடுங்கள் SMS மற்றும் GPRS என இரண்டு மெனுக்களில் GPRS என்பதை தேர்ந்தெடுங்கள் மிக மிக குறைந்த அளவில் பைசாக்கள் மட்டுமே செலவாகும் . நீங்கள் வார , மாத GPRS பயன்பாட்டை பயன்படுத்துபவர் என்றால் இலவசமாக மொபைல்போங் வசதியை பெற முடியும் .ஸ்டேட் பேங் மட்டுமல்ல அனைத்து வங்கிகளும் இந்த சேவையை வழங்குகின்றன எனவே மொபைல்போங் வசதியை பயன்படுத்தி உங்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்
நண்பா Nokia 2700 classic மொபைலுக்கு ஆக்டிவேசன் செய்ய என்ன பண்ண வேண்டும்?