ஏழ்மையோடும் , கடுமையான நோயோடும் போராடியவன் , உள்ளூர் கல்லூரிகளில் தோல்வியுற்ற ஒருவன் ,இங்கிலாந்து ராயல்சொஸைட்டியின் FRS ஆகி 33 வயதிலே மரணத்தை வென்று தமிழனின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றியவன் ராமானுஜன் .
1887 டிசம்பர் 22 ஆம் நாள் கும்பகோனம் சீனிவாசன் – கோமளத்தம்மாவிற்கு மகனாக ஈரோட்டில் பிறந்தவர் ராமானுஜன் .குடும்ப வறுமையின் காரணமாக ஈரோட்டில் இருந்து சொந்த ஊரான கும்பகோனத்திற்கே குடும்பம் பயனம் ஆனது .கும்பகோணம் தொடக்கப்பள்ளியில் பள்ளி படிப்பை தொடங்கினான் தனது 13 வயதிலே லோனி எழுதிய திரிகோணமிதி என்னும் புத்தகத்தை கரைத்துகுடித்து விட்டான் ராமானுஜன் .
பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்து கல்லூரியில் சேர்ந்த ராமானுஜனுக்கு கணிதம் தவிர வேறு பாடங்கள் எட்டிகாயாக கசந்தது விளைவு கணிதத்தில் மட்டும் 100 க்கு 100 மற்ற பாடங்களில் தோல்வி சென்னை சென்று மேற்படிப்பு படிக்கலாம் என்று 1906 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தா ராமானுஜன் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தான் பச்சையப்பன் கல்லூரியிலும் அதே கதைதான் தொடர்ந்தது ஆம் ராமானுஜத்திற்கு கணக்கை தவிர ஏனைய பாடங்கள் சுட்டு போட்டாலும் வரவில்லை எனவே மீண்டும் கல்லூரி படிப்பில் தோல்வி பட்டம் பெற முடியவில்லை.
ராமானுஜனுடைய வாழ்வையே புரட்டி போட்ட புத்தகம் ஜி.எஸ்.கார் எழுதிய A Synopsis Of Results in Pure and Applied Mathematics ஆகும் இப்புத்தகத்தில் ஆய்லர், காஷி, பெர்னோலி, டயபான்டே,டெஸ்கார்ட்ஸ்.பூயூரியர், லெக்ராஞ்சி போன்ற கணிதமேதைகளின் சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. கையில் காசு இல்லை ,கல்லூரி படிப்பிலும் தோல்வி மேல் தோல்வி ஆகவே சென்னையிலிருந்து மீண்டும் கும்பகோணத்திற்க்கு திரும்பினான் மகன் பொறுப்பில்லாமல் வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் எதையோ கிறுக்கி கொண்டு இருக்கும் மகனுக்கு ஜானகி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ராமானுஜத்தின் தாயார் கோமளத்தம்மாள் .
1912 இல் சென்னை துறைமுகத்தில் கணக்கராக வேலை கிடைத்தது . இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளை பல கணித அறிஞர்களுக்கு அனுப்பி வைத்தார் இராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை ஆனால் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பணியாற்றும் G.H ஹர்டி என்பவர் இராமானுஜத்தின் கணித திறனை புரிந்து கொண்டு அவர் இங்கிலாந்துக்கு இராமானுஜத்தை அழைத்து கணித ஆராய்ச்சி செய்ய ஊக்குவித்தார் . பல நூறு ஆண்டுகள் கணித அரிஞர்களை திக்குமுக்காடச்செய்த பாக எண்களை கண்டுபிடிக்க இராமானுஜன் துல்லியமான சூத்திரத்தை கண்டு பிடித்தார்.1914 இல் Modular Equation and Approximations to Pi எனும் ஆராய்சிக்கட்டுரையை சமர்பித்தார் பகா எண்கள் பகுஎண்கள் மேலும் infinity series எனப்படும் முடிவற்ற தொடர்கள் , மாயசதுரங்கள் , தொடர் பின்னங்கள் போன்றவற்றின் வியத்தகு உண்மைகளையும் பல்வேறு வகையான கணித சமன்பாடுகளையும் இரண்டு பெரிய நோட்டு புத்தகங்களில் எழுதியுள்ளார்.
ஒரு எண்ணினை அதை விட சிறிய எண் கொண்டு எத்தனை வழிகளில் கூட்டி விடை பெறாலம் என்பது பார்ட்டீஸியன் வழி முறையாகும் அதாவது
2=1+1 ;2 p(2)=2
3=1+1+1;2+1;3 p(3)=3
4=1+1+1+1;1+3,2+2;4 p(4)=4 ……
ஆனால் 5 ஐ தாண்டினால் p(n) மதிப்பு மிக அதிகமாக உயர்ந்து கொண்டே போகும் இந்த p(n) மதிப்பை கண்டுபிடிக்க இராமானுஜன் ஒரு வழிமுறையை கண்டு வெளிட்டார் இதற்கிடையே இராமானுஜத்தை இங்கிலாந்தின் காலநிலையும் , இராமானுஜத்தின் குடும்ப நினைவும் வட்டியது மட்டுமில்லாமல் காசநோயும் வட்டியது .
இங்கிலாந்தின் மருத்துவ மனையில் இராமானுஜம் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் அப்போது அவர் காண நண்பர் ஹார்டி வந்து இருந்தார் அப்போது இராமானுஜத்திடம் கொஞ்சம் மன்னித்திக்கொள்ளுங்கள் நான் வந்த டாக்சி மிக மோசமான டாக்சி அது எறும்பு ஊர்வது போல மெதுவாக ஊர்ந்து வந்தது அந்த வண்டியின் எண் 1729 அந்த எண் மிக மிக மோசம் அதனால்தான் டாக்சி மெதுவாக வந்தது என்று கூறினார் உடனே இராமானுஜம் 1729 என்ற எண் மிக மோசமான எண் அல்ல என்றும் ஒரு எண்ணினை இரண்டு வழிகளில் க்யூப் ஆக எழுதுவதில் உள்ள மிகச்சிறிய எண்ணுமாகும் அதாவது
என்றும் கூறினார்.
1914 இல் முதல் உலகப்போர் வெடித்ததால் இராமானுஜத்தால் கணித ஆராய்சி தொடருவதிலும் உடல்நலத்திலும் சிக்கல் நேர்ந்தது மார்ச் 1916 இல் டிரினிடி கல்லூரி இராமானுஜத்திற்க்கு ஆராய்ச்சிக்காக B.A பட்டம் வழங்கியது கும்பகோண கல்லூரியிலும் பச்சயப்பன் கல்லூரியிலும் தோல்வியடந்த இராமானுஜத்திற்க்கு இங்கிலாந்து பல்கலைகழகம் பட்டம் வழங்கி கௌரவித்தது நண்பர்கள் ஹர்டி மற்றும் லிட்டில்வுட் ஆகியோருடன் சேர்ந்து Number theory எனும் கணித பாடத்தில் பல்வேறு உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு கூறினார் . ஹர்டி மற்றும் லிட்டில்வுட் ஆகியோரால் ராமானுஜத்திற்கு ராயல் சொஸைடியின் FRS பட்டம் கிடைத்தது .
1919 ல் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது இராமானுஜத்தின் உடல் நலனிலும் சிறிது முன்னேற்றம் வந்தது ஆகவே இந்தியா திரும்பி தன் மனைவியுடன் சென்னையில் தங்கினார்
1920 ஜனவரியில் மீண்டும் நோயின் தாக்குதல் தீவிரமாயிற்று படுத்த படுக்கையானார் இராமானுஜன் மரணபடுக்கையில் இருந்த போதும் மாக்-தீட்டா மற்றும் மாடுலர் ஃபங்ஷன் பற்றியா ஆராய்ச்சி குறிப்புகளை தன் நண்பர் ஹார்டிக்கு அனுப்பினார்
1920 ஏப்ரல் 26 ஏழ்மையோடும் , கடுமையான நோயோடும் இறுதிவரை போராடியவன் 33 வயது முடிவதற்குள்ளே மரணத்தை வென்றுவிற்றான் ஆம் இராமானுஜன் இறந்துவிட்டாலும் அவனது கணித சமன்பாடுகளை நிரூபணம் செய்ய இன்றைய சூப்பர் கம்பியூட்டர்கள் கூட தடுமாறுகின்றன . இராமானுஜத்தின் கணித சமன்பாடுள் தலைமுறைகள்தோறும் தமிழனின் திறனை உலகிற்கு கூறிக்கொண்டே போகும்.
டிஸ்கி -1
நண்பர்களே இராமானுஜத்தின் கணித ஆராய்சிகளை நான் அதிகம் கூறவில்லை அந்த மேதையின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே கூறியுள்ளேன் அவரின் பகா எண் சாகசங்களை மற்றொரு பதிவில் விரிவாக பதிவிடலாம் என நினைத்துள்ளேன்
உண்மை தான் நன்றி
avar tamilar nu solla unmayile perumaiyaga iruku
வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றிகள் அன்பு உள்ளங்களே.
நல்ல தரமான பதிவு. தொடரட்டும் உங்கள் கணித பதிவு. வாழ்த்துக்கள் நண்பா....
நண்பரே, ரமானுஜத்தைப் பற்றி இன்று தான் தெரிந்துக்கொண்டேன். பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
Very very good article,
This comment has been removed by the author.