தொலைக்காட்சியில் பிரகாஷ்ராஜே சொல்லிட்டார் டையில் அமோனியா இல்லை அதனால் டையை தைரியமாக போடலாம் என்று தலைமுடிக்கு சாயம் போடுபவர நீங்கள் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு இது.
.தலைமுடிக்கு சாயம் போடுவதினால் வெளித்தோற்றத்திற்க்கு அழகாக தெரிந்தாலும் உடலுக்கு பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று பல ஆரய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.
தலைச்சாயத்தில் அரோமேட்டிக் அமைன்கள், அரோமேட்டிக் நைட்ரஜன் வழிப்பொருள்கள் , பீனால் வழிச்சேர்மங்கள் மிக முக்கியமாக பாராபினைலின் டை அமின் போன்ற மிக தீவிரமான வேதிச்சேர்மங்கள் உள்ளது .இவற்றில் பாராபினைலின் டை அமின்தான் தலைமுடிக்கு கருப்பு நிறத்தை அளிக்கிறது இவ்வகை வேதிசேர்மங்கள் தலைமுடியின் கார்டெக்ஸி அடுக்கில் சென்று சாயங்களை தங்கவைக்கிறது . இதனால் தலைமுடி சில நாட்களுக்கு கறுப்பாக தெரியும் பின்பு நிறம் மங்கி கொண்டே வரும்.
தலைச்சாயம் இடுவதால் பெரும்பாலனவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் தலையில் எரிச்சல் ,தலைமுடி உதிர்தல் ,முடியில் பிளவு ஏற்படுதல் ,தலையில் செதில் செதில்லாக தோல் உதிர்தல், தலையில் கொப்புளங்கள் போன்றவையும் உருவாக கூடும் .
பாராபினைலின் டை அமின் வாசமே சிலருக்கு ஆஸ்துமா, தீவிர சளி போன்றவைகளை உருவாக்கும் .
கண்புருவத்திற்கு பயன்படுத்தினால் பார்வை இழப்பு நேரக்கூடும்
அரோமேட்டிக் நைட்ரஜன் வழிப்பொருள்கள் ரத்த சோகை ,இரப்பை அழற்சி, போன்றவைகளையும் அரோமேட்டிக் அமைன்கள் செல் மரபு மாற்றங்களை தூண்டி மிக தீவிரமான புற்றுநோய் ஊக்குவிக்கிகளாகவும் செயல்படுகின்றன கருவுற்ற தாய்மார்கள் தலைச்சாயத்தை பயன்படுத்தினால் பிறக்கப்போகும் குழந்தைக்கு உடல் ஊனங்களை தோற்றுவிக்கும் என்றும் கூறப்படுகிறது .
நரை என்பது மனித உடல்நலத்தில் எவ்வித ஆபத்தையும் விளைவிக்காது ஆனல் நரையை மறைக்க பூசும் தலைச்சாயங்கள் மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பது நிதர்சனமான உண்மை . ஆகவே
தோழர்களே அடுத்த முறை சாயமிடும் போது உங்களின் உடல் நலத்திற்கு தேவைதான என்று யோசியுங்கள்
மெய்பொருள் காண்பது அறிவு
கரு சாயம் தலைக்கு பயன்படுத்தும் அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள படைப்பு..
நன்றி..!!