என்னுடைய ஆசிரியர் நண்பர் வகுப்பில் கணித பாடம் நடத்திகொண்டு இருக்கும்போது ஒரு மாணவன் ஆபச வீடியோவை பார்த்ததால் அந்த மாணவனை கண்டித்து இருக்கிறார் . அவன் என்னுடைய சாவுக்கு காரணம் எனது ஆசிரியர்தான் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான் இப்போது அந்த ஆசிரியர் பணியை இழந்துதது மட்டுமல்லாமல் குற்றவாளி போல் காவல் நிலையத்திற்க்கும் நீதிமன்றத்திற்க்கும் நடந்து கொண்டு இருக்கிறார் ஆகவேதான் இந்த அபாய முன்னெச்சரிக்கை பதிவை வெளியிடுகிறேன்.
மனிதனின் ஆறாவது விரலாகிவிட்ட மொபைல் இல்லாத வீடுகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மொபைல்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது கல்லூரி மாணவ/மாணாவிகள் அதிக நேரம் மொபைலில் பேசுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது என்று நமக்கு தெரியும் ஆனால் இன்று பள்ளி மாணவ/மாணவியரை மொபைல்இண்டெர்நெட் மிகவும் சீரழித்து வருகிறது. பள்ளி பருவ பிஞ்சுகளின் மனதில் மொபைல் இண்டெர்நெட் எப்படி நஞ்சை தடவுகிறது என பார்ப்போம்
கணினி இருந்தால்தான் இணையத்தை அனுக முடியும் என்ற நிலை இன்று மாறிவிட்டது மொபைல் மூலமாக இணையத்தை அணுகுவது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது மொபைல் பயன்பாட்டாளர்களை கவரும் விதமாக இலவச MP3 , இலவச வீடியோக்கள் இலவச மொன்பொருள்கள் போன்றவறை உள்ளடக்கமாக கொண்ட மொபைல்களில் சிறப்பாக இயங்க Wapsite எனப்படும் மொபைல்தளங்கள் புற்றீசல் போல ஆயிரக்கணக்கில் உருவாகி வருகிறது இவைகளில் 90% பாலியல் உள்ளடக்கங்களை கொண்டே வருகிறது .
இணையத்தில் ஒரு ஆபச வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமெனில் பல கட்டுபாடுகள் உள்ளான குறிப்பாக அந்த தளத்தில் பணம் கட்டி உறுப்பினர் ஆனால்தான் டவுன்லோடு செய்ய முடியும் ஆனால் மொபைல் தளங்கள் தங்களுடைய ட்ராபிக்கை உயர்த்திக்கொள்ள மிக மிக எளிதான டவுன்லோடு வசதியை கொண்டுள்ளான இதன் மூலம் யார் சிறியவர் பெரிவர் வேறுபாடு இன்றி யார் வேண்டுமானாலும் எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்
உயரக மொபைல்களில் மட்டும்தான் மொபைல் இண்டெர்நெட்டை அனுகப்பட்டு வந்தது ஆனால் சைனா மொபைல்கள் வந்த பிறகு கதையே மாறி விட்டது 800 ருபாய் 1000 ருபாயகளில் கிடைக்கும் சைனா மொபைல்களில் மெமரிகார்டு வசதி, புளூடூத் , இணைய பயன்பாடு என சகலமும் கிடைக்கிறது என்பதால் பள்ளிமாணவ/ மாணவியருக்கு வீட்டின் மூலமே மொபைல் வாங்கிதரப்படுகிறது . அதுமட்டுமல்ல 5 ருபாய்க்கு 10 ருபாய்க்கு மொபைல் இண்டெர்நெட் கூவி கூவி விற்கப்படுவதால் பள்ளி பள்ளிமாணவ/ மாணவியர் மொபைல் இண்டெர்நெட்டில் சாட்டிங்கில் ஆரம்பித்து ஆபச வீடியோவை டவுன்லோடு செய்வதுவரை சும்மா புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டனர் . மொபைலின் ஆபச தளங்கள் தங்களின் ட்ராபிக் மூலங்களை காட்டுவதால் பள்ளிமாணவ/ மாணவியருக்கு ஆயிரக்கணக்கான ஆபசதளங்களின் பட்டியல் கிடைக்கிறது . நேரம் காலம் ஏதுமின்றி ஆசிரியர் பாடம் நட்த்திக்கொண்டு இருந்தாலும் ஆபச வீடியோக்கள் டவுன்லோடு நடைபெறுவது கொடுமையிலும் கொடுமை
மொபைல்தளங்களில் உள்ள ஆபச வீடியோக்கள் சில வக்கிர மாணவர்களால் தங்களுடைய மொபைல்களில் எடுக்கப்பட்டு அப்லோடு செய்யப்பட்டவை இதை பார்க்கும் மற்ற மாணவர்கள் தாமும் அது போல ஆபச வீடியோவை எடுக்க வேண்டும் என்ற ஆவலுக்கு உள்ளாகி தாமும் அதுபோல எடுத்து புளூடூத் மூலம் அதை மற்றவர்களுக்கு பரப்பி பல மாணவிகளின் உயிரை பறிப்பதோடு தங்களுடைய படிப்பினையும் சிதைத்துக்கொள்கின்றனர் மாணவர்கள் மட்டும் இன்றி மாணவிகளும் இதற்கு உடைந்தை என்பது வேதணை தரும் செய்தி . ஆகவே உங்களின் பள்ளி பருவ பிள்ளைக்கள் தவறான வழிக்கு செல்லாதவாறு அடிக்கடி மொபைல்களை சோதியுங்கள் அவர்களுடன் நட்புறவாக பேசி அவர்களின் நட்பு வட்டாரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள் இல்லை எனில் உங்களின் பள்ளிபருவ பிள்ளைகள் ஆபச படுகுழியில் விழுந்து விடுவார்கள் ஜாக்கிரதை
நல்ல கருத்தை தக்க சமயத்தில் பதிவியிட்டதிற்கு நன்றி!