Thursday 1 September 2011

காலப்பயணம் சார்பியலின் கணித சூத்திரப்படி சாத்தியமா ?

,

கதைகளிளும் ஆங்கிலப்படங்களிளும் வரும் காலப்பயணம் , சார்பியலின் கணித சூத்திரப்படி சாத்தியமா ?
சார்பியல் தத்துவப்படி ஒரு பொருளின் வேகம் அதிகரிக்கும் போது அப்பொருளை பொறுத்தவரை காலமானது மெதுவாக இயங்குகிறது வேகமானது ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 299727.74  கிலோமீட்டரை நெருங்கிவிட்டால் காலமானது செயல்படாமல் நின்று விடும் . ஒளியின் திசைவேகத்தை மிஞ்சும் பொருளில் பயணம் செய்தால் காலப்பயணம் மூலம் திருவள்ளுவர் காலத்திற்கு  போய் அவருடன் கைகுலுக்கி வரலாம் அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகள் முன்நோக்கி சென்று வருங்கால  நமது பரம்பரை சந்ததிகளை கொஞ்சிவிட்டு வரலாம்

அருகில் உள்ள படத்தின் சூத்திரப்படி t என்பது காலம்  c என்பது  ஒளியின் திசைவேகம் v என்பது பொருளின் வேகம் ஆகும் .    நீங்களும் நானும் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் வேகத்தில் பயனம் செய்வதாக வைத்துக்கொண்டால் இந்த கணித சூத்திரத்தின்படி  பின்னம்    1/60*60*299727.74 க்கான விடை காண வேண்டும் கிடைக்கும் விடையை பூச்சியம் என்றே சொல்லிவிடலாம் ஏன் எனில்  அவ்வளவு சிறியது  (அல்ஜீப்ரா தெரிந்த யாரிடமாவது கேட்டு பாருங்கள் 0.000000000000000….என ஒரு விடையை அறிவியல் குறியீடு மூலம் சொல்லி தினற அடிப்பார்கள் )

அதாவது ஒரு பொருள் சாதரண நிலையில் இருக்கும் போது உள்ள நிறையும் வினாடிக்கு ஒரு கிலோமீட்டர் சொல்லும் போது உள்ள நிறையும் சமம் எனவே பொருளின் நிறை மாறுவது இல்லை  மாற்றத்தை நாம் உணருவதும் இல்லை . ஆனால் பொருளானது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது அதனுடைய இயக்கத்தினால் ஆற்றலானது நிறையாக மாற்றப்படும் அதாவது ஒளியின் வேகத்தில் செல்லும் பொருள் அசைக்கமுடியாத நிறையை அடைந்துவிடும் ஆகவே அசைக்க முடியாத பொருளுக்கு மகத்தான விசையை கொடுத்தால்தான் அப்பொருள் தொடர்ந்து ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும் , அசைக்கவே முடியாத பொருளுக்கு மகத்தான விசையை கொடுப்பது என்பது நடைபெறவே முடியாத ஒன்று

உண்மை என்னவெனில் நிறையுடைய எந்த பொருளும் ஒளிவேகத்தை அடைவதை இயற்கையானது தடுக்கிறது ஆகவேதான்  மாபெரும் மேதை ஐன்ஸ்டீன் “ எந்தப்பொருளும் பொருள் வடிவில் இருந்து கொண்டு ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். ஆகவே காலப்பயணம் சார்பியலின் கணித சூத்திரம் மூலம் சாத்தியமாகாது .

டிஸ்கி - 1
யெஸ் பாஸ் ஆங்கிலப்படங்களில்  வரும் கால இயந்திரங்களைப்பார்த்தும் ஏலியன்களை பார்த்தும் விசிலடிக்க கற்றுக்கொள்ளோம் ஏன்னா ஓவரான அறிவியல் சங்கதிகள் நம்ப உடம்புக்கு ஆகாதுங்க.

0 comments to “காலப்பயணம் சார்பியலின் கணித சூத்திரப்படி சாத்தியமா ?”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates