சனி, 24 செப்டம்பர், 2011

மழையில் நனைந்தால் காய்ச்சல் வருவதேன் ?

,

என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா ? மழையில் நனைந்தால் ஏன் காய்ச்சல் வருகிறது என்று ?இந்த கேள்விக்கு விடை அறிந்து கொள்ளும் முன் மனிதனின் உடல் வெப்பச்சமன்பாட்டினை அறிந்து கொள்வோம் .

மனிதன் ஒரு வெப்பஇரத்த பிராணி ஆவான் அதாவது சுற்றுபுறவெப்பநிலைக்கு ஏற்ப ஒரே நிலையான வெப்பநிலையை உடையவன் இவ்வகையில் பறவைகளும் , விலங்குகளும் அடங்கும் . மனித உடலில் இயல்பாகவே ஒரு வித வெப்பம் இருக்கும் வாய் மூலம் அதை அளவிட்டால் 98.4 பாரன்ஹீட் அல்லது 36.8 செல்சியஸ்  இருக்கும் இந்த இயல்பான வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்வது மூளையின் ஹைப்போதலமஸ் ஆகும் .
ஹைப்போதலமஸ் ஆனது உடலின் வெப்பநிலை அதிகமானால் குறைக்கவும் குறைந்தால் அதிகரிக்கவும் உதவுகிறது .மேலும் உடலில் எவ்வளவு வெப்பம் இருக்க வேண்டும் என கட்டுப்படுத்தவும் செய்கிறது . கோடை காலங்களில் ஹைப்போதலமஸின் முன்பகுதி உலர்ந்து இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தும் , அதிகவியர்வையை  உற்பத்தி செய்தும் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது . குளிர் காலங்களில்  தசைகளை சுருக்கி உடலே வெப்பத்தை உருவாக்கச்செய்கிறது. உடலின் வெப்பத்தை சமச்சீராக வைத்திருப்பதால் ஹைப்போதலமஸை தெர்மோஸ்டாப் என்கிறார்கள்.

தெர்மோஸ்டாப் உயர்நிலையில் இயங்கும் போது காய்ச்சல் ஏற்படுகிறது உடலை தொட்டுப்பார்தால் அதிக வெப்பத்தை உணர்வோம்
தெர்மோஸ்டாப் குறைந்த நிலையில் இயங்கும் போதும் காய்ச்சல் ஏற்படுகிறது அதனால் நமக்கு அளவுக்கு அதிகமாக குளிர் ஏற்படுகிறது
காய்ச்சல் என்பது நம் உடலின் தடுப்பு சக்திகள் நோய்க்காரணிகளுடன் போராடுகின்றது என்பதற்கு ஒரு அறிகுறி ஆகும்.

சரி இப்போது மழையில் நனைந்தால் ஏன் காய்ச்சல் வருகிறது  என அறிவோம் .மழையில் நனையும் போது  நமது உடலின் தெர்மோஸ்டாப் மாறுபடுகிறது இதனால் உடலில் உற்பத்தியாகும் பைரோஜன்கள் (phrogens) தெர்மோஸ்டாபை உயர்நிலையில் இயங்க வைக்கிறது  இதனால் மழையில் நனைந்தால் மனிதருக்கு காய்ச்சல் வருகிறது


டிஸ்கி -1
சினிமாவில் ஹீரோவும் ஹீரோயின்களுன் மழையில் நனைஞ்சாலும் , பாட்டுபாடினாலும் அவங்களுக்கு ஏன் காய்ச்சல் வரலைனு யாரவது ஒருத்தர் பதிவு போடுங்கப்பா  நானும் தெரிஞ்சுக்கறேன்

0 கருத்துகள் to “மழையில் நனைந்தால் காய்ச்சல் வருவதேன் ?”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates