Thursday, 26 April 2012

ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ

,

நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு  நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்

இன்று ஆனந்தவிகடனின்(02.05.2012) வலையோசை பக்கத்தில் எனது வலைப்பூ வந்து உள்ளது . 2008 ஏப்ரல் 2 இல் வலைப்பூ என்னவென்று தெரியாமலே மெயில் ஐடி மூலம் வலைப்பூவை உருவாக்கி விட்டேன் அதில் hai friends this is my first blog pls say about blog. my id aguruking@gmail.com என்று ஒரு பதிவிடல் செய்திருந்தேன் (அந்த பதிவிடலை பார்க்க http://www.haiguru.blogspot.com/ ) தமிழ்கூறும் நல்லுலகம் என்னை திரும்பிகூட பார்க்காத காரணத்தால் ஒரு சுபயோகசுபதினத்தில் உருவாக்கிய  வலைப்பூவை மறந்தேபோனேன் . 

கல்வி சார்ந்த செய்திகளின் கருவூலமாக ஒரு வலைப்பூவை நடத்தி வருபவரும்www.teachersalem.blogspot.in கணினி நுட்பங்களை கற்று கொடுத்த குருவுமான ஆசிரிய நண்பர் திரு விஜய்சந்தரின் வழிகாட்டுதலின் படி ஒரு வலைப்பூவை மீண்டும் தொடங்கி பதிவிட ஆரம்பித்தேன் .எதை பதிவிடுவது எனத்தெரியவில்லை பள்ளி பாட புத்தங்களை வாசித்த நேரத்தை காட்டிலும் கல்கி, புதுமைபித்தன் , சுஜாதா, சுந்தரராமசாமி, கு.அழகிரிசாமி , ச.கந்தசாமி, நாஞ்சில்நாடன், கி.ராஜநாரயணன் , வண்ணதாசன், வண்ணநிலவன் , அசோகமித்திரன் , அறிவுமதி, கல்யான்ஜி , மீரா,  போன்றோரின் படைப்புகளை தேடி தேடி படித்த நேரம்தான்  அதிகம் அவர்களைப்போல கதைகள் கவிதைகள் எழுதலாம் என்றால் புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும்  எனவே என் சிற்றறிவிற்கு எட்டியவற்றை பதிவிட்டு வருகிறேன்.

வலையுலகம் மிகப்பெரிய கடல்  நமக்கோ அரைகுறை நீச்சல் என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் அன்புத்தம்பி என்டர் த வேர்ல்டு (www.wesmob.blogspot.com )  ஸ்டாலின் ஆபத்தாண்டவனாக வந்து தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறார் ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வருவதற்கு மிக முக்கிய காரணம் எனக்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை  மேலும் மேலும் எழுத வைத்தது  வலையுலக  நண்பர்களாகிய நீங்கள்தான் எனவே   இந்த  ஆனந்த தருணத்தில்  உங்களை இருகைகூப்பி  வணங்குகிறேன் . ஆனந்தவிகடனின் வெளியீட்டினை பார்த்துவிட்டுஎனக்கு மின் அஞ்சல் , தொலைபேசி, குறுந்தகவல் வழியாக வாழ்த்து கூறிய பள்ளி , கல்லூரி தோழர்களுக்கும் தோழிகளுக்கும் எனது மனங்கனிந்த வாழ்துகள் .   என்னை நேசிக்கும் நெஞ்சங்களாகிய உங்களுடனான   நட்புபயணத்தில் உங்களுடன் கைகோர்த்து வருகிறேன் வாருங்கள் தோழர்களே நாம் வாழும் சமுதாயத்திற்கு  நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம் . வீழ்வது நாமாக இருப்பினும் வெல்வது தமிழாக இருக்கட்டும்   .



19 comments to “ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ”

  • 26 April 2012 at 11:43

    நல்வாழ்த்துகள்

  • 26 April 2012 at 11:53
    Guru says:

    நன்றி கோவி.கண்ணன் அவர்களே

  • 26 April 2012 at 12:04
    சீனு says:

    அனந்த விகடனில் முத்திரை பெறுவது என்பது கடவுளிடம் இருந்து பெரும் வரம் போன்றது. வாழ்த்துக்கள் , வளருங்கள்

  • 26 April 2012 at 12:35
    Guru says:

    அன்புள்ள நண்பர் சீனுவிற்கு ஆனந்தவிகடனுக்கு பல பதிவர்கள் தங்களுடைய பிளாக் , மெயில் ஐடி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை அனுப்பிவிட்டு தங்களின் வலைபதிவு விகடனில் வராதா என காத்து இருக்கிறார்கள் ஆனால் நான் ஆனந்த விகடனுக்கு என் பிளாக் பற்றிய தகவல்களை அனுப்பவில்லை இரு வாரங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது அதில் என்னுடைய பிளாக் விகடனில் வெளியிட தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று என்னால் என்னை நம்பவே முடியவில்லை ஆனந்தவிகடனில் வாசகர் கடிதத்திலாவது எனது பெயர் வராதா என ஏங்கிய காலம் உண்டு ஆனால் என்னை பற்றிய அறிமுகத்துடனும் எனது புகைப்படத்துடனும் இரண்டு பக்கங்கள் என்படைப்புகளை வெளியிட்ட ஆனந்தவிகடனை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. முயற்சி மெய்வருத்த கூலி தரும் அதனால்தான் நீ ஆனந்தவிகடனில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாய் என்று ஆனந்தவிகடனின் தீவிரவாசகரும் சேலம் மாவட்டம் அடிமலைப்பட்டியில் ஆசிரியராக இருக்கும் நண்பர் அமுதன் கூறிய வார்தைகளை போன்று நீங்களும் கூறி உள்ளீர்கள் உங்களுக்கு எனது நன்றிகள்

  • 26 April 2012 at 12:38
    Anonymous says:

    வாழ்த்துக்கள் சார் இன்னும் பலவற்றில் இடம் பெறுவீர்கள் ...

  • 26 April 2012 at 13:00
    சீனு says:

    // முயற்சி மெய்வருத்த கூலி தரும் அதனால்தான் நீ ஆனந்தவிகடனில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாய் //

    இது முற்றிலும் உண்மை. விகடனின் தீவிர வாசகன் நான். அதனால் தான் சொன்னேன். எனக்க தாங்கள் அளித்த பின்னோடதிற்கு மகிழ்ச்சி. தங்களுக்கு நேரம் இருந்தால் என் வலைப் பூவிற்கு வருகை தாருங்கள். நான் வலைப் பூவிற்கு புதியவன், ஏதேனும் குறை இருந்தால் தவறாது தெரியப் படுத்துங்கள்

  • 26 April 2012 at 14:11
    Guru says:

    அன்புள்ள தம்பி ஸ்டாலின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  • 26 April 2012 at 14:12
    Guru says:

    சீனு அவர்களே வலைபதிவிற்கு நானும் புதியவன் தான் இப்போதுதான் வலையுலகின் சூட்சுமங்களை படித்து வருகிறேன் . கண்டிப்பாக உங்களது வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்

  • 26 April 2012 at 18:00

    வாழ்த்துகள் குரு. தங்கள் உழைப்புக்கு ஆ.வி. கொடுத்திருக்கும் பூங்கொத்து இது. மேலும் நீங்க புகழ் பெற வாழ்த்துகள்.

  • 26 April 2012 at 18:07

    இனிய வாழ்த்துகள் சார் :))

  • 26 April 2012 at 19:45

    வாழ்த்துக்கள் சார்

  • 26 April 2012 at 22:04

    நண்பனுக்கு வாழ்த்துக்கள்
    ஆனந்த விகடனின் பாரத் ரத்னா விருது பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக்கள்

    pls see my blog www.teachersalem.blogspot.com
    www.teachersalem2.blogspot.com

  • 27 April 2012 at 11:06
    Guru says:

    பெத்துசாமி ஜி கணினி மீது எனக்கு தீராத விருப்பத்தை உண்டாக்கியது நீங்கள்தான் இராமர் வனவாசம் போனது போல உங்களுடனான நட்பை பத்து வருடம் இழந்து போஸ்புக் மூலம் உங்களை கண்டு மீண்டும் உங்களுடனான நட்பை புதுப்பித்து கொண்டதை வார்த்தைகளால் வருணிக்க இயலாது . நாதன் அண்ணன் பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்றவற்றை கற்றுதந்தையும் என்னால் மறக்க இயலாது உங்களுடன் தீவிர இலக்கியத்தை பற்றி மணிக்கணக்கில் போசிக்கொண்டு இருந்த நாட்கள் என் நெஞ்சில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது உங்களின் மதிப்பு மிக்க நேரத்திலும் இந்த எளியவனுக்கு கருத்துரை தந்தது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது . ஆனந்தவிகடனில் உங்களின் ட்வீட்டர்கள் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் அதிரடி ட்வீட்டர்கள்

  • 27 April 2012 at 11:08
    Guru says:

    நன்றிகள் செல்வக்குமார், Avargal Unmaigal

  • 27 April 2012 at 11:22
    Guru says:

    விஜய் சார் எனக்காக ஒரு வாழ்த்து பதிவிட்டது ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் ஒரு தாயின் வாழ்த்துதலாக அமைகிறது உங்களின் ஆதரவும் நட்பும் இருக்கும் வரை வலையுலகில் வெற்றிகரமாக வலம் வருவேன்

  • 27 April 2012 at 11:26
    Guru says:

    எனக்கு பாராட்டு தெரிவித்து விஜய் சார் வெளியிட்ட பதிவிடல்
    http://www.teachersalem.blogspot.in/2012/04/blog-post_26.html

  • 27 April 2012 at 11:40
    Guru says:

    ஆனந்தவிகடனின் வெளீட்டைபார்த்துவிட்டு நண்பன் ஜெய் வெளியிட்ட வாழ்த்து பதிவிடல்
    http://jaibhavan.blogspot.in/2012/04/blog-post_3284.html

  • 29 April 2012 at 16:01

    vaazhthukkal ........

  • 29 April 2012 at 22:33
    Guru says:

    Thanks thamizhiniyan

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates