நமது பழந்தமிழரின் ஒப்பற்ற கணித நூலான கணக்கதிகாரத்தில் இருந்து அரசனும் முத்துமாலையும் என்ற புதிரை பதிவிடுகிறேன் .
ஒரு அரசனிடம் ஒரு முத்துமாலையும் ஏழு மகள்களும் இருந்தனர் . முத்து மாலையில் 49 முத்துக்கள் இருந்தன . முதல் முத்தின் விலை மதிப்பு ஒரு ரூபாய் ,இரண்டாவது முத்தின் விலை மதிப்பு இரண்டு ரூபாய் ,மூன்றாவது முத்தின் விலை மதிப்பு மூன்று ரூபாய் ……. 49வது முத்தின் விலை மதிப்பு 49 ரூபாய் .
புதிர் என்னவென்றால் அரசன் தன் மகள்களுக்கு 49 முத்துக்களையும் சரிசமமாக பிரித்து தரவேண்டும் மேலும் அனைவருக்கும் முத்தின் விலைமதிப்பு சரிசமமாக இருக்க வேண்டும் . உங்களால் பதில் கூற முடியுமா ?
விளக்கம்
உங்களுக்கு மாய சதுரம் அமைக்க தெரிந்தால் இதற்கான விடையை எளிதாக கூறிவிடலாம் .உங்களுக்கு மாய சதுரம் அமைப்பது எப்படி என்று தெரிய வேண்டுமானால் எனது முந்தைய பதிவான “ மாயசதுரம் “ என்பதினை படிக்க கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள் ,
இங்கே இயக்குங்கள் மாயசதுரம் .
மாய சதுரம் அமைக்கும் முறையை தெரிந்து கொண்டீர்களா ?
நல்லது இப்போது அரசனின் முத்துமாலை புதிருக்கு வருவோம்
அரசனுடைய முத்து மாலையில் 49 முத்துகள் இருந்தன எனவே
1+2+3+4+………49 என்பதின் மதிப்பு காண வேண்டும் இது ஒரு கூட்டுத்தொடர் இதற்கான சூத்திரம்
=n(n+1)/2
=49(49+1)/2
=49(50)/2
=49(25)
=1225
முத்து மாலையின் மொத்த மதிப்பு 1225 ஆகும் . அரசன் தன்னுடைய ஏழு மகள்களுக்கும் 1225 ஐ சமமாக பிரிக்க வேண்டுமெனில் 1225 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும் கிடைப்பது 175 ஆகும் ஆகவே அரசன் தன்னுடைய ஏழு மகள்களுக்கும் முத்தின் விலை மதிப்பு 175 வருமாறு சரிசமமாக பிரிக்கிறார் ஏழு மகள்களுக்கும் விலை மதிப்பு கீழே உள்ள மாய சதுர புகைப்படத்தில் இருப்பது போல பிரித்து தருகிறார் .
மகள் - முத்து - ரூபாய்
.......................
1 - (49+1; 48+2; 47+3: 25) - 175
2 - (46+4; 45+5; 44+7: 24) - 175
3 - (43+6; 42+8; 41+9: 26) - 175
4 - (40+10; 39+11; 38+14: 23) - 175
5 - (37+13; 36+12; 35+15: 27) - 175
6 - (34+16; 33+17; 32+22: 21) - 175
7 - (31+19; 30+20; 29+28: 18) - 175
என்ன தலைவரே... இப்படியும் விடை சொல்லலாம் அல்லவா!
அருமையான தகவல். நன்றி.
உண்மைதாங்க ஒத்துக்கறேன் . இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பத்து என்னவென்றால் நன்பர் முத்தரசுவிற்கு
கணக்கதிகார கதாநாயகன் அப்படினு ஒரு பட்டம் கொடுக்கறேன் அதனால்எல்லரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க