Wednesday 14 September 2011

மரணத்தை வெல்லப்போகிறாதா ஸ்டெம்செல் ஆராய்ச்சி ?

,

சித்தர்களில் தொடங்கி இன்றைய நானோ தொழில்நுட்பம் வரை மனிதனுக்கு ஒரு தீராத தாகம் இருக்கிறது அது 100 வருடம் வாழ்வது எப்படி என்ற தாகம்தான் அதற்காகத்தான் ஒரு பக்கம் ஆண்மீகம் , யோகாசனம் என்ற பெயரில் கார்பரேட் சாமியார்கள் நுனிநாக்கு ஆங்கிலம் மூலம் மக்களை மாக்களாக்கி(விலங்குகள்) கொண்டு வருகிறார்கள் .எங்கேயாவது தீர்வு  இருக்கிறதா என மருத்துவதுறையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது .

ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்பது பெண்ணின் கருமுட்டையில் உள்ள உட்கருவை நீக்கிவிட்டு ஆணின் விந்தணுச்செல்லின் உட்கருவுடன் இனைத்து புதிய கரு உண்டாக்கப்படுகிறது  8 , 9 வாரங்களில்எம்பிரியோஎனப்படும் வளர்ச்சி நிலை உருவானதும் நமக்கு தேவையான மரபணுச்செல்களை பிரித்து அதன் வளர்ச்சிப்பாதையை மாற்றி நமக்கு தேவையான  சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ செய்து கொள்ளலாம்.

ஸ்டெம் ஆராய்ச்சி மூலம் சிறுநீரகமோ, இதயமோ , கல்லீரலோ  புத்தம் புதிதாய் தயாரித்து மனிதனுக்கு பொருத்தினால் அவன் ஆரோக்கியமுடையவன் ஆகிறான் . இதே ரீதியில் கண்கள், மூக்கு, காது , நுரையீரல் என மாற்றிக்கொண்டே போனால் மனிதனின் வாழ்நாள் நீண்டுகொண்டே போகும் .மனிதனின் உடல் உறுப்புகள் புதிதாகும் போது மனிதனும் புதியவனாகிறான் . இந்த முறைக்கு “மறு அமைப்பு சித்தாந்தம்”(Reset Theory) என்று பெயர் ஆகவே மனிதன் மரணத்தை வென்று சாகவரம் பெற சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் 
இத்தகைய ஆராய்ச்சிகள்  அமெரிக்க உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சோமோர் பென்சர் ஆராய்ச்சி கூடத்தில் மிக மிக ரகசியமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது . உலகின் வேறு பகுதிகளிலும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது . இது வருங்காலத்தையே மாற்றக்கூடியா ஆராய்சியாக இருப்பதால் ஆதரவும் ,எதிர்ப்பும் அதிகமாக காணப்படுகிறது .  மனிதன் மரணத்தை வெல்ல பார்க்கிறான்
இயற்கைதான் இதற்க்கு தீர்ப்புசொல்லும்

1 comments:

  • 15 September 2011 at 08:17

    நைஸ் ஸ்டோரி .........

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates