Saturday, 28 April 2012

ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !

,

1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா ? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்கு  தெரியுமா ? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு  தெரியுமா ?  வாருங்கள்  நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம் .

1828ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதியினர்க்கு மகனாக பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமையை நிலையிலும் இயற்பியல் , வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார் .
தனது 22 ஆம் வயதிலே அதாவது 1850 ஆம் ஆண்டிலேயே பல்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஜோசப் ஸ்வான்  கண்ணாடியிலான வெற்றிடக்குழாயில் மெல்லிய கம்பியிலான இழையை(Filament) சூடாக்குவதின் மூலம் ஒளியை பெற முடியும் கண்டறிந்தார் அதிக மின்சாரம் பாய்வதால் கம்பியிலான இழையை சூடு தாங்காமல் அறுந்து அறுந்து போனது  தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத ஸ்வான்  வேறு வேறு உலோகங்களை மெல்லியகம்பி இழையாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்து பார்த்தார் இதே சமயம் தாமஸ் ஆல்வா எடிசன்,  ஹம்பிரிடேவி ,ஜேம்ஸ் பவ்மான்      போன்ற பலரும் பல்பினை கண்டுபிடிக்க ஆராய்ந்து வந்தனர் .

 1875 இல் ஜோசப் ஸ்வான் அதிக மின்தடையை தாங்கும் கார்பன் இழையை கொண்டு பல்பினை தயாரித்தார்  அதை மேலும் மேலும் மெருகேற்றி 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் விஞ்ஞானிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார் 1879 ஆம் ஆண்டு ஜனவரி 17 பொதுமக்களுக்கும் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தார் அதை காப்புரிமைக்கு விண்ணப்பித்தார் ஆனால் அவரது காப்புரிமை விண்ணப்பம் சரியாக நிரப்பப்படவில்லை என்று அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது அவருக்கு பின்  சற்றேறக்குறைய அவரை போலவே பல்ப் தயாரித்து 1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் வெளியிட்டு தனது செல்வாக்கால் காப்புரிமை பெற்றுக்கொண்டார் ஆனால் ஜோசப்ஸ்வானால் ஏழ்மையாலும் ஆதரவின்மையாலும் எடிசனுடன் போட்டி போட முடியவில்லை  . ஸ்வான் எங்கே தனியே வேறு முறையில் பல்ப் செய்து வரலாற்றில் இடம்பிடித்துவிடுவாரென்று பயந்து ஜோசப்ஸ்வானை தன்னுடன் கூட்டு சேருமாறு அழைத்தார் தன் குடும்ப வருமையை போக்க ஜோசப்ஸ்வான் எடிசனுடன் கூட்டு சேர்ந்தார்  .  பின்னர் பல முயற்சிக்களுக்கு பிறகு எடிசன் டங்ஸ்டனை மின் இழையாக கொண்டு தற்போது  நாம் பயன்படுத்திவரும் எலெக்ட்ரிக்பல்பினை கண்டுபிடித்தது தனி வரலாறு எடிசனை பற்றிய ஒரு வரலாற்று பதிவிடல் செய்யும் போது இதை பற்றி மேலும் அறிந்துகொள்வோம் எப்படியோ பல்பினை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு நாம் ஜோசப்ஸ்வான் என்று  பதில் கூறுவதில்லை எடிசன் என்றுதான் கூறுகிறோம் தனது செல்வாக்கால் ஜோசப்ஸ்வானுக்கு கிடைக்க வேண்டிய புகழை தட்டி பறித்துக்கொண்டார் தாமஸ் ஆல்வா எடிசன் .

10 comments to “ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !”

  • 29 April 2012 at 01:05

    இது வரை தெரியாத தகவலை அறியத்தந்ததற்கு நன்றி சகோதரர்...

    அன்புடன்
    ரஜின்

  • 29 April 2012 at 06:38
    Anonymous says:

    உண்மையான வர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைப்பதில்லை ...

  • 29 April 2012 at 06:45

    வரலாற்றுத்தகவலுக்கு நன்றி. வரலாறுகள் எப்போதும் சரியாகச் சொல்லப்படுவதே இல்லை

  • 29 April 2012 at 11:58
    Guru says:

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ரசின் அப்துல் ரகிம் தமிழானவன், ஸ்டாலின் . உண்மைதான் நண்பர்களே ஏழ்மையின் காரணமாய் காப்புரிமை பெறமுடியாததால் நம் சாதனைத்தமிழன் ஜிடி நாயுடு வின் புகழ் வரலாற்றில் மறைக்கப்பட்டு மங்கி போனது . என்ன செய்வது தமிழன் முன்னேறினால் தமிழனுக்கு பிடிக்காமல் போகிறது .நமது பண்பாடையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விட்டதின் விளைவு கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ்க்குடி உலகெங்கும் அகதியாய் அலைகிறது

  • 29 April 2012 at 17:51
    Yuva says:

    it is true?

  • 29 April 2012 at 18:43
    Guru says:

    அன்புள்ள நண்பர் யுவா விற்கு நான் சொல்வது முற்றிலும் உண்மை வேண்டுமானால் கீழ்கண்ட விக்கிபீடியாவின் சுட்டியை படித்து பார்த்துவிட்டு கருத்துரையில் இது உண்மையா இல்லையா என்று சொல்லவும்
    http://en.wikipedia.org/wiki/Joseph_Swan

  • 30 April 2012 at 19:58

    ஆஆஆஆஆ....புது தகவல்...பகிர்வுக்கு நன்றி சகோ..

  • 7 July 2012 at 23:44
    Jkram says:

    I am Jayakumar. Thanks a lot to you. I come to know the true. I am interested to know more information about scientist like this pls continue PLs Thanks to you, Hands off to your work

  • 3 October 2012 at 22:12
    Unknown says:

    it is true or wrong.so confusion

  • 27 December 2012 at 09:45

    புதிய தகவல்தான். என்னைப் பொருத்தவரை எடிசனை மற்ற விஞ்ஞானிகளோடு ஒப்பிட முடியாது தயக்கம் உள்ளது. அவர் புதிய அறிவியல் தத்துவங்கள் எதையும் கண்டறிய வில்லை என்றே கருதுகிறேன்.ஏற்கனவே உள்ள அறிவியல் தத்துவங்களை பயன் படுத்தி புதிய கருவிகளை உருவாக்கவே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார் என்றே நினைக்கிறேன்.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates