வியாழன், 25 ஆகஸ்ட், 2011

எங்கேயும் எப்போதும் புளூடூத் வழியாக இணையத்தில் இணைவது எப்படி

,

3G சேவை மூலம் இணையத்தை பயன்படுத்தினால் செலவு மிகுதியாக பிடிக்கிறது என்று சாதாரன  இணைப்பை பெற்றாலும்  3GB, 5GB பயன்பாடு மட்டும்தான் அதுவும் இல்லாமல் டவுன்லோடிக்கிற்க்கு தனி சேவை கட்டணம் அது  இது  என்று டெக்னிக்கல் விவரங்களை சொல்லி  நம்மை விழி பிதுங்க வைக்கின்றன இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள்  இந்த தொல்லைகளில்  இருந்து தப்பி குறைந்த செலவில் இனையத்தை  எங்கேயும் எப்போதும் பயன்படுத்துவது எப்படி

இன்று பரவலாக அனைத்து மடிக்கணினிகளிலும் புளூடூத்  உள்ளினைப்பாக இணைக்கப்பட்டுள்ளது  புளூடூத் இல்லத கணினிகளுக்காக கடைகளில் புளூடூத் டங்கல் எனும் கருவி 100 ரூபாயில் கிடைக்கிறது  இதை வாங்கிக்கொள்ளுங்கள்  . இந்த புளூடூத் டங்கலை  வாங்கும் போது   சாப்ட்வேர் உள்ளினைக்கப்பட்ட டங்கலையே வாங்குங்கள் ஏன் எனில் சில  ட்ங்கில்களுடன் தனியாக சாப்ட்வேர்  உள்ள CD தருவார்கள்  இதை  நாம் தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டி வரும் அது மட்டுமல்லாமல் டேட்டாக்களை அனுப்பவே , பெறவோ கட்டுபாடு உள்ள டங்கிலை வாங்காதீர்கள் .இவைகளை பற்றிய குறிப்புகள் சிறிய எழுத்துகளில் காணப்படும் விலை சிறிது அதிகமிருப்பினும் தரம் உள்ள புளூடூத் டங்கில்களையே வாங்குங்கள் 
( படத்தில் உள்ளது  நான் பயன்படுத்தும் புளூடூத் டங்கில் ஆகும் விலை 150 ரூபாய் )

இன்று மனிதனின் ஆறாவது விரலாகிப்போன மொபைல் மூலம்  இணைய இணைப்பை புளூடூத் வாயிலாக கணினியில் பயன்படுத்துவது எப்படி என்று காண போகிறோம் . நாம் பயன்படுத்தும் மொபைல் கம்பெனிகள் GPRS சேவையினை குறைந்த விலையில் தருகின்றன .இந்நிறுவனங்களின் கஸ்டமர் கேர் அதிகாரிகளிடம் பேசி  நம்முடைய மொபைல்களுக்கான செட்டிங்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும்  பின்  மாதப்பயன்பாடுக்கென தனியாக ரீஜார்ச் செய்து கொள்ளுங்கள் (  சில கம்பெனிகள்  5GB வரையிலுமோ அல்லது அளவில்லா வகையிலோ தருகிறார்கள்  இதற்கென 100 ருபாய் வரை மட்டுமே செலவு ஆகும்)
புளூடூத் டங்கலை முதலில் கணினியுடன் இணைக்க வேண்டும் . புளூடூத் டங்கலை USB வழியாக சொறுகியவுடன்  புளூடூத் டங்கிலுக்கான சாப்ட்வேர் மற்றும் Driver File கள்   தானாகவே  இன்ஸ்டால் ஆக  தொடங்கிவிடும்  இன்ஸ்டால் முடிந்தவுடன் புளூடூத்திற்கான அடையாளக்குறி உங்களது Task பாரின் வலது மூலையில் தெரியும் பின் அதை தேர்வு செய்து கணினியையும் மொபைலையும்  இணைக்க வேண்டும்  அதற்க்காக உங்களது மொபைலின் புளூடூத்தை ஆன் செய்து கொள்ளுங்கள் பின்பு கணினியின் புளூடூத் மெனுவில் உள்ள Search  எனும் மெனுவை தேர்வு செய்து உங்களது மொபைல் ,  புளூடூத் Search List இல் உள்ளதா என பாருங்கள்  .
உங்களது மொபைல்  தெரிந்தால் அதை Click செய்யுங்கள் பின்பு குறியீட்டு எண் கொடுத்து மொபைலையும் கணினியையும் இணையுங்கள்
Dial – up connection  எனும் மெனு வரும் அதில் யூசர் நேம்பாஸ்வேர்டு ஆகிய இடங்களில் எதுவும் தராதீர்கள். Dial எனுமிட்தில் *99# என கொடுத்து Dial எனும் பட்டினை தேர்வு செய்யுங்கள் உடனே உங்களது மொபைலில் கணினியின் ஆணையை செயல்படுத்தவா எனக்கேட்கும்  உடனே Ok  கொடுங்கள் பின்புதானகவே நீங்கள் இணையத்துடன்  இணைக்கப்படுவீர்கள்  நான் பதிவிடுவது கூட மொபைலின் புளூடூத் வழி  இணையம் மூலம்தான்  எனவே மொபைல் வழி இணையத்தை பயண்படுத்தி  குறைந்த செலவில்  நிறைந்த பலன் பெறுங்கள் .
நெஞ்சம் நிறைந்த நேசங்களுடன்
.குரு

5 கருத்துகள் to “எங்கேயும் எப்போதும் புளூடூத் வழியாக இணையத்தில் இணைவது எப்படி”

 • இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
  25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:43

  இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

 • 25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:46

  thank u for good info:)

  sir pls tell me behind of the small note of the dongle bluetooth device.

  Dongle does support xp then it will req driver file ?or plug and play enable dongle pdt ?

  My frd dongle does not work

 • 25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:33

  இன்று என் வலையில் ..

  பல்சுவை வலைதளம் விருது

 • 25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:17

  Dear katrukolpavan
  i also used xp service pack 2
  my dongle correctly working so plz buy good dongle no need to instal driver it will automatically instal and will work correctly

 • 29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:40

  மிக நல்ல பதிவு

  eid mubarak

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates